அக்டோபர் 26-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்றைய தினம் கிராமுக்கு ரூ.65 ரூபாய் அதிகரித்துள்ளது. சமீப நாட்களாக தொடரும் இந்த தங்கம் விலைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் மிக முக்கியமான காரணமாக கூறப்படுவது தீபாவளி பண்டிகை தான். கடந்த சில நாட்களாக 40 ரூபாய், 30 ரூபாய், 20 ரூபாய் என தங்க விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இன்று ரீடைல் சந்தையில் 1 கிராம் 22 கேரட் 7,360 ரூபாயை எட்டியுள்ளது. 24 கேரட் 8,029 என்ற அதிகபட்ச விலையில் விற்பனையாகிறது.
கோவை மதுரையில் இன்றைய விலை நிலவரம்: தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களான சென்னை, கோயம்பத்தூர், மதுரை மற்றும் பிற முன்னணி நகரங்களிலும் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.65 அதிகரித்து 7,360 ரூபாயை எட்டியுள்ளது. 1 சவரன் 22 கேரட் தங்கம் 58,880 ரூபாயாக உள்ளது. நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று கிராமுக்கு 520 ரூபாய் அதிகரித்து மிகப்பெரிய விலை ஏற்றத்தை கண்டுள்ளது.

22 கேரட் தங்கத்தை வைத்து தான் தங்க நகைகள் செய்யப்படுகிறது. இந்த விலை தங்கத்திற்கானது மட்டுமே. இதோடு சேர்த்து மேக்கிங் சார்ஜஸ், ஜிஎஸ்டி மற்றும் பிற கட்டணங்களையும் சேர்த்து தான் நகைகளை வாங்க முடியும். இந்த மேக்கிங் சார்ஜஸ் ஒவ்வொரு கடை மற்றும் நீங்கள் விரும்பி எடுக்கும் டிசைனுக்கு ஏற்ப மாறுபடலாம்.
24 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை 71 அதிகரித்து 8,029 ரூபாயாக உள்ளது. 1 சவரன் 24 கேரட் தங்கம் 64,232 ரூபாய்க்கு விற்பனையாகிறது. நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று 24 கேரட் தங்கம் ரூ.568 ரூபாய் அதிகரித்து மிகப்பெரிய விலை ஏற்றத்தை கண்டுள்ளது. 24 கேரட் தங்கத்தை வைத்து நகைகள் செய்ய முடியாது. இருப்பினும் கோல்ட் காயின்கள், கோல்ட் பார்கள் போன்றவற்றை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.
10 கிராம் 22 கேரட் தங்கம் விலை ரூ.73,600 ரூபாயாக உள்ளது. 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை ரூ.80,290 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
நம் நாட்டு மக்கள் பிற முதலீட்டு திட்டங்களைக் காட்டிலும் தங்க நகைகளில் தான் அதிக அளவு முதலீடு செய்கின்றனர். சீனாவுக்கு பிறகு தங்கத்திற்கான இரண்டாவது மிகப்பெரிய நுகர்வோராக இந்தியா உள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. அவற்றில் மிக முக்கியமான காரணம் என்று பார்த்தால் தங்க நகைகளை வைத்து உடனடியாக பணம் பெறுவதுதான்.
ஏதேனும் அவசர காலம் ஏற்பட்டாலோ அல்லது குழந்தைகளின் படிப்புச் செலவு மற்றும் இதர செலவுகள் என அனைத்திற்கும் தங்கத்தை வைத்திருந்தால் அவற்றை உடனடியாக பணமாக பெற்றுக்கொள்ள முடியும் என்பதால் இந்திய மக்களின் முன்னணி முதலீடாக தங்கம் உள்ளது.
இது போன்ற மக்களுக்கு தொடர்ந்து விலை ஏற்றம் இருப்பது பெரும் கவலை அளிக்கும் விஷயமாக மாறியுள்ளது. தங்களுடைய சம்பளத்தை வைத்து தங்க நகைகளை சேர்த்து வைக்கும் குடும்பங்களும் இந்த விலை உயர்வு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
வெள்ளி விலை நிலவரம்: இன்று வெள்ளி விலை 1 கிராம் ரூ.107 ரூபாயை எட்டியுள்ளது. இதனால் சென்னை, கோவை மற்றும் மதுரையில் 1 கிலோ வெள்ளி விலை 1,07,000 ரூபாயாக உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

புதிய விதிமுறை : HDFC கோல்ட் ETF-ல் இனி தங்கம் எப்படி சேமிக்கப்படும்?



Click it and Unblock the Notifications