தங்கம், வெள்ளி விலை இன்று அதிரடியான உயர்வுடன் துவங்கும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்றும் எதிர்பாராமல் வெள்ளிக்கிழமை அதிரடி மாயமாகி, திங்கட்கிழமை வர்த்தகம் சைலெண்ட் மோடுக்கு சென்றது.
வெள்ளிக்கிழமை வெளியான மோசமான அமெரிக்க வேலைவாய்ப்பு தரவுகள் தங்கம் விலையை கிட்டத்தட்ட 3 சதவீதமும், வெள்ளி விளை கிட்டதட்ட 7 சதவீதம் தடாலடியாக உயர்த்தியது. இதன் மூலம் ஜூன் 17ஆம் தேதி பதிவான உயர்வுக்கு கொண்டு சென்றது, ஆனால் திங்கட்கிழமை காலை வர்த்தகத்தில் மிகவும் மந்தமான துவக்க வர்த்தகத்தை பதிவு செய்தது. இதற்கு முக்கியமான காரணம் ஈரான் போர்.

சர்வதேச ஸ்பாட் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விஸை 0.26 சதவீதம் குறைந்து 4331.38 டாலருக்கு வர்த்தகமானது, வெள்ளி விலை வெறும் 0.39 சதவீதம் உயர்ந்து 63.82 டாலராக மட்டுமே உள்ளது.
இதுவே எம்சிஎக்ஸ் பியூச்சர்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.18 சதவீதம் உயர்ந்து 1,52,088 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 1.03 சதவீதம் உயர்ந்து 2,33,858 ரூபாயாக உள்ளது. ஆனால் ரீடைல் சந்தையில் பெரும் சரிவை பதிவு செய்துள்ளது.
இன்று சென்னை ரீடைல் சந்தை வர்த்தகத்தில் ஒரு பவுன் தங்கம் விலை 120 ரூபாய் வரையில் குறைந்து 1,11,600 ரூபாயாக உள்ளது. மேலும் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 170 ரூபாய் குறைந்து 1,52,180 ரூபாயாக உள்ளது. இதை தொடர்ந்து 1 கிலோ வெள்ளி விலையில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் 2,50,000 ரூபாயாக மட்டுமே உள்ளது.
இந்திய சந்தையில் மாறுப்பட்ட நிலை இருந்தாலும், சர்வதேச சந்தையில் ஏற்பட்டு இருக்க கூடிய தாக்கம் மிகவும் முக்கியமானது. வெள்ளிக்கிழமை சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்வதற்கு முக்கியமான காரணம், அமெரிக்கா வேலைவாய்ப்பு சந்தை சரிவு பாதையை சந்தித்து வருவதால், வட்டி உயர்வுக்கான வாய்ப்புகள் குறைந்தது என அறிவிக்கப்பட்டது.
இதன் வாயிலாக டாலர், பத்திர முதலீடுகள் மீதான லாபம் ஆகியவை பெரிய அளவில் குறைந்து தங்கம் மீதான முதலீடுகள் அதிகரித்தது. ஆனால் இன்று ஈரான் போர் மற்றும் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட திருப்பம் டாலர் மதிப்பின் உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்த காரணத்தால் மீண்டும் தங்கம் விலை மந்த நிலைக்குள் நுழைந்துள்ளது. இந்திய சந்தையும் மந்தநிலைக்குள் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரான் அமெரிக்காவுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த முடியாது எனவும், ஹார்முஸ் திறக்கப்பட வேண்டும் என்றால் அமெரிக்க கடற்படை முற்றுகை முழுமையாக நீக்கப்பட வேண்டும், இதேபோல் டோல் கட்டணம் கட்டாயம் விதிக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதேவேளையில் அமெரிக்க தரப்பில் டிரம்ப் பேசுகையில், நாங்கள் semi-negotiating தான் செய்து வருகிறோம், ஈரானில் பெருளாதார நெருக்கடி உருவாகும் வரையில் காத்திருக்க முடிவு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
இவை அனைத்தும் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு வழிவகுத்து டாலருக்கான டிமாண்டை அதிகரித்துள்ளது. இதுவே திங்கட்கிழமை தங்கம் விலை சரிவதற்கு முக்கியமான காரணமாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications