தங்கம் விலையில் டிவிஸ்ட்.. இனி அடுத்தடுத்து இதெல்லாம் நடக்கும்.. மக்களே உஷார்..!!

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த போது அலறிக்கொண்டு இருந்த இந்திய மக்களும், முதலீட்டாளர்களும், தற்போது சத்தமே இல்லாமல் நிற்கின்றனர். காரணம் தங்கம் விலை உயர்வில் மந்த நிலை உருவாகியுள்ளது தான். இதேவேளையில் டிசம்பர் மாதம் தங்கம் மீண்டும் தடாலடியாக உயரும் என எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், இது எந்த அளவுக்கு உண்மை..?

தங்கம் விலை 3வது மாதமாக நவம்பர் மாதம் தொடர்ந்து ஏற்றத்தைக் கண்டு வருகிறது. இம்மாத தொடக்கத்தில் இருந்து இன்று நவம்பர் 21 வரை 22 கேரட் மற்றும் 24 கேரட் தங்கத்தின் விலை இரண்டிலும் சராசரியாக 1.33 சதவீதம் உயர்ந்துள்ளது. அக்டோபர் மாதம் தங்கம் விலை 3.20 சதவீதமும், செப்டம்பர் மாதம் 11.90 சதவீதமும், ஆகஸ்ட் மாதம் 5.14 சதவீதமும், ஜூலை மாதம் 1.66 சதவீதமும் வளர்ச்சி அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தங்கம் விலையில் டிவிஸ்ட்.. இனி அடுத்தடுத்து இதெல்லாம் நடக்கும்.. மக்களே உஷார்..!!

நவம்பர் 1 Vs நவம்பர் 21 - விலை ஒப்பீடு
நவம்பர் 1 ஆம் தேதி 22 கேரட் தங்கம் 1 கிராமுக்கு ரூ.11,310 ஆக இருந்தது. இன்று நவம்பர் 21 ஆம் தேதி அது ரூ.11,460 ஆக உயர்ந்துள்ளது. அதாவது 20 நாட்களில் ரூ.150 உயர்வு. அதேபோல் 24 கேரட் (தூய தங்கம்) நவம்பர் 1 அன்று 1 கிராமுக்கு ரூ.12,338 ஆக இருந்த நிலையில், இன்று ரூ.12,502 ஆக உயர்ந்துள்ளது. இதுவும் ரூ.164 உயர்வு. இரண்டு தரத்திலான தங்கத்திலும் சராசரியாக 1.33 சதவீத வளர்ச்சி பதிவாகியுள்ளது.

மாதத்தின் உச்சம் மற்றும் குறைந்த விலை
நவம்பர் மாதத்தில் தங்கம் விலை அதிகபட்சமாக நவம்பர் 13 ஆம் தேதி உயர்ந்தது. அன்று 22 கேரட் 10 கிராமுக்கு ரூ.11,900 வரையும், 24 கேரட் ரூ.12,982 வரையும் சென்றது. இது மாதத்தின் உச்ச விலையாகும்.

இதேபோல் நவம்பர் 5 ஆம் தேதி விலை சற்று சரிந்து 22 கேரட் ரூ.11,180 ஆகவும், 24 கேரட் ரூ.12,197 ஆகவும் குறைந்தது. இது மாதத்தின் குறைந்த விலையாக பதிவானது. அதன் பிறகு தொடர்ந்து ஏற்றம் காணப்பட்டு இன்று ரூ.11,460 மற்றும் ரூ.12,502 என்ற அளவில் உள்ளது.

இன்று ஏன் தங்கம் விலை ஏறுகிறது?
அமெரிக்காவில் எதிர்பார்த்ததை விட வலுவான வேலைவாய்ப்பு தரவு வெளியானதால் தங்கம் விலை வெள்ளிக்கிழமை நவம்பர் 21 அன்று சற்று குறைந்தது. இதனால் அமெரிக்க மத்திய வங்கி விரைவில் வட்டி விகிதத்தை குறைக்க வாய்ப்பு குறைந்துள்ளதாக முதலீட்டாளர்கள் கருதுகின்றனர். இதன் விளைவாக சர்வதேச சந்தையில் ஸ்பாட் தங்கம் விலை 0.1 சதவீதம் குறைந்து ஒரு அவுன்ஸுக்கு 4,072.87 டாலராக உள்ளது.

அமெரிக்க வேலைவாய்ப்பு தரவு ஏன் முக்கியம்?
அமெரிக்க தொழிலாளர் துறை வெளியிட்ட தரவின்படி செப்டம்பர் மாதத்தில் 1,19,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. இது முன்பு எதிர்பார்க்கப்பட்டதை விட இரு மடங்கு அதிகம். இதனால் டிசம்பர் மாதத்தில் வட்டி விகிதம் குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு 30 முதல் 40 சதவீதமாகக் குறைந்துள்ளது. அமெரிக்க மத்திய வங்கி தொடர்ந்து பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த விரும்புவதால் விரைவான வட்டி குறைப்புக்கு வாய்ப்பு குறைவு என்று சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

டாலர் வலுவடைந்தது
அமெரிக்க டாலர் குறியீடு கடந்த ஒரு மாதத்தில சிறப்பான வர்த்தகத்தை இந்த வாரம் பதிவு செய்துள்ளது. இதனால் அமெரிக்கா தவிர மற்ற நாடுகளில் தங்கம் வாங்குவது விலை உயர்ந்ததாகத் மாறியுள்ளது. தற்போது ஆண்டு இறுதி நெருங்குவதால் முதலீட்டாளர்கள் லாபத்தை எடுத்துக்கொள்ளும் போக்கும் தங்கம் விலை சரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

உலக அளவில் பொருளாதார நிச்சயமற்ற தன்மை, பங்குச் சந்தை ஏற்ற இறக்கம், அமெரிக்காவில் வட்டி விகிதம் குறையும் என்ற எதிர்பார்ப்பு ஆகியவை தங்கத்தின் மீதான தேவையை அதிகரித்துள்ளன. குறிப்பாக இந்தியாவில் திருமண சீசன் தொடங்கி வருவதால் ஆபரண தங்த்தின் தேவையும் சற்று உயர்ந்துள்ளது. உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 4100 முதல் 4050 டாலரை அளவில் வர்த்தகமாகி வருவதா் இந்தியாவில் இதன் விலையும் தொடர்ந்து ஏற்றம் காண்கிறது.

அடுத்து என்ன எதிர்பார்க்கலாம்?
பெரும்பாலான முதலீட்டு வல்லுநர்கள் டிசம்பர் மாதமும் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் உயரும் என்று கணிக்கின்றனர். அமெரிக்க மத்திய வங்கி டிசம்பரில் வட்டி விகிதத்தை மேலும் குறைக்க வாய்ப்பு உள்ளதால் தங்கத்துக்கு சாதகமான சூழல் நீடிக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+