2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை சுமார் 11% உயர்ந்து சாமானிய மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்தாலும், தங்கத்தில் காலம் காலமாக முதலீடு செய்துள்ளோருக்கு பெரும் லாபத்தை கொடுத்துள்ளது. இதேவேளையில் தங்கம் விலை உயர்வை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள பலர் தங்கத்தை குறைந்த வட்டியில் அடமானமாக வைத்து, அதிக வட்டிக்கொண்ட கடனை அடைத்து வருகின்றனர்.
இதேவேளையில் பல முதலீட்டு நிபுணர்கள், தற்போதைய அதிகப்படியான விலையில் இதன் மீது முதலீடு செய்ய வேண்டாம் எனவும், முதலீட்டு அளவையும் குறைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் தங்கம் விலை உயர்வதற்கு என்ன காரணம் என்பது தான் தற்போதைய முக்கியமான விவாதமாக உள்ளது.

சர்வதேச ஸ்பாட் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை விரைவில் 3,000 டாலரை எட்டும் என்றும், 2025ஆம் ஆண்டில் முதல் காலாண்டு முடிவில் 3,080 டாலர் அளவீட்டை தாண்டக் கூடும் என்றும் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
தங்கத்தின் இந்த விலை உயர்வுக்கு பல காரணங்கள் இருந்தாலும், கடந்த 4 வர்த்தக நாளில் தங்கம் விலையில் ஏற்பட்ட தடாலடி உயர்வுக்கு முழு முக்கிய காரணம் அமெரிக்கா. அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசால் விதிக்கப்படும் வரிகள் காரணமாக உலகளவில் பொருளாதாரத்திலும், வர்த்தகத்திலும் தடுமாற்றம் ஏற்படும் எனப்தால் இந்த தடாலடி உயர்வு பதிவாகியுள்ளது.
அமெரிக்க அரசு, உலக நாடுகள் தனது வரி விதிப்பு மூலம் பதிலடி கொடுக்க தயாராகியிருக்கும் வேளையில் சர்வதேச சந்தை ஒருவிதமான பதட்டத்தை எதிர்கொண்டு வருகிறது. அமெரிக்கா எந்த நாட்டின் மீது வரியை விதித்தாலும் அந்த நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம் என அனைத்தும் பாதிக்கும் என்பதலால் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை பாதுகாப்பான சொத்துக்களில் முதலீடு செய்ய தங்கத்தின் மீது அதிகப்படியான முதலீடுகளை செய்து வருகின்றனர்.
இதன் எதிரொலியாக சர்வதேச சந்தையில் தங்கத்திற்கான டிமாண்ட் அதிகரித்து தங்கம் விலை ஸ்பாட் சந்தையில் ஒரு அவுன்ஸ் $2,943 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதே நேரத்தில் காமெக்ஸ் தங்கம் ஒரு அவுன்ஸ் $2,968 ஐ எட்டியுள்ளது.
இந்த சூழ்நிலையை கூடுதலாக சிக்கலாக்கும் வகையில், அமெரிக்கா விதிக்கும் வரிகளில் தங்கத்தின் மீதும் இறக்குமதி வரிகள் விதிக்கப்படலாம் என்ற பேச்சுக்கள் அடிப்பட்டு வருவதாக ஈடி நவ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. டிரம்ப் அரசு இப்புதிய வரியை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு, லண்டன், சுவிட்சர்லாந்து மற்றும் ஆசியா போன்ற முக்கிய தங்க நுகர்வு நாடுகளில் இருந்து தங்கம் அதிககமாக வாங்கப்பட்டு வருகிறது.
அமெரிக்கா வருகிற ஏப்ரல் 2 ஆம் தேதிக்குள் தனது ரெசிப்ரோக்கல் வரி விதிக்கும் என கூறப்படுவதால் வர்த்தக போர் உருவாகும் முன்பு அதாவது தங்கம் விலை விண்ணை முட்டும் முன்பும் தங்கத்தை வாங்க மக்கள் ஓடி வருகின்றனர்.
தங்கத்தின் விலை உயர்வுக்கு மற்றொரு முக்கியமான காரணம், உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கத்தை கொள்முதல் செய்வதுதான். 2024 இல், இந்தியா, அமெரிக்க மத்திய வங்கிகள் உட்பட பல நாடுகளின் மத்திய வங்கிகள் சுமார் 1,045 டன் தங்கத்தை வாங்கியுள்ளன. இதன் மூலம் கடந்த 3 ஆண்டாக தொடர்ந்து 1,000 டன்களுக்கு அதிகமான தங்கத்தை வாங்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டு வருகிறது. 2025ஆம் ஆண்டிலும் நாணய மதிப்பை கட்டுப்படுத்தவும், நிதி நிலையை மேம்படுத்துவதற்கும் தங்கத்தை மத்திய வங்கிகள் தொடர்ந்து வாங்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலையில் நடந்த திடீர் டிவிஸ்ட்!! 6 மணி நேரத்தில் நடந்த அதிரடி மாற்றம்!!

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?



Click it and Unblock the Notifications