தங்கம் முதலீட்டில் 0% லாபம்.. அதிர்ச்சியில் மக்கள்.. இப்போ தங்கத்தை வாங்க வேண்டாமா..?

உலகளாவிய பொருளாதாரத்தில் நிலவும் வர்த்தக பதற்றங்களுக்கு மத்தியில், ஜூலை 10 வியாழக்கிழமையன்று பங்குச்சந்தையில் உயர்வுடன் துவங்கி சில நிமிடத்தில் சரிந்த வேளையில் தங்கம் விலை மட்டும் எப்படி குறையும். சர்வதேச வர்த்தக சந்தை சூழ்நிலை மிகவும் மோசமாக இருக்கும் காரணத்தால் தங்க விலை 2வது நாளாக உயர்ந்துள்ளது.

தங்கம் விலை இந்த மாதம் அதிகப்படியான தடுமாற்றத்தை சந்தித்த காரணத்தால் மக்கள் எப்போது தங்கத்தை வாங்குவது என குழம்பியுள்ளனர். இப்படியிருக்கும் சூழ்நிலையில் ஜூலை மாதத்தில் தங்கம் விலையின் போக்கை பார்த்தால் அதிர்ச்சி கொடுத்துள்ளது. நீங்கள் ஜூலை 1 ஆம் தேதி தங்கத்தை வாங்கியிருந்தால் ஜூலை 10ஆம் தேதியும் அதே விலையில் வர்த்தகமாகி வருகிறது. இதனால் தங்கம் முதலீட்டில் 0 சதவீதம் லாபத்தை ஜூலை மாதம் முதல் 10 நாளில் பதிவாகியுள்ளது.

தங்கம் முதலீட்டில் 0% லாபம்.. அதிர்ச்சியில் மக்கள்.. இப்போ தங்கத்தை வாங்க வேண்டாமா..?

இந்தியாவில் தங்கம் விலை என்பது வெளிநாட்டு வர்த்தக சந்தை மற்றும் டாலர் - யூரோ மதிப்பின் அடிப்படையில் தான் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக இன்றைய ரீடைல் சந்தை வர்த்தகத்தில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 200 ரூபாய் உயர்ந்து 90,200 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 220 ரூபாய் உயர்ந்து 98,400 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரனுக்கு 176 ரூபாய் உயர்ந்து 78,720 ரூபாயாக உள்ளது.

ஜூலை 1ஆம் தேதி ஒரு கிாரம் 22 கேரட் தங்கம் விலை 9020 ரூபாயாக இருந்த நிலையில், இன்றும் 9020 ரூபாயாக உள்ளது. இந்த இடைப்பட்ட 10 நாட்களில் தங்கம் விலை அதிகப்படியாக 9105 ரூபாய்க்கும், குறைந்தபட்சமா 9000 ரூபாய் வரையில் வர்த்தகமாகியுள்ளது. இதுவே ஜூன் மாதத்தை கணக்கிட்டால் தங்கம் விலை 0.06 சதவீதம் சரிந்துள்ளது. ஜூன் மாதத்தில் தங்கம் விலை அதிகப்படியாக 9320 ரூபாய் வரையில் உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்றைய வர்த்தகத்தில் தங்கம் விலை சிறிய அளவில் உயர முக்கியமான காரணமாக இருந்தது அமெரிக்க டாலரின் மதிப்பு 0.2% குறைந்ததும், அமெரிக்க கருவூல பத்திரங்களின் லாப அளவுகள் குறைந்ததும் தான். இவ்விரு காரணத்தால் சர்வதேச சந்தையில் தங்கம் மீண்டும் முக்கியமான முதலீடாக மாற துவங்கியுள்ளது. இதன் வாயிலாக சர்வதேச சந்தையில் ஸ்பாட் தங்கம் விலை 0.2% உயர்ந்து ஒரு அவுன்ஸுக்கு 3,325.77 டாலர்களை எட்டியது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் சமீபத்திய வரி அறிவிப்புகள், உலகளாவிய வர்த்தக பதற்றங்களை தீவிரப்படுத்தியுள்ளன. ஜூலை 9, 2025 அன்று டிரம்ப் அமெரிக்காவின் எட்டு சிறிய வர்த்தக தொடர்புடைய நாடுகள் மீது வரி விதிப்பு அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த 8 நாடுகளுக்கு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் எந்தவொரு நீட்டிப்பும் வழங்கப்படாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

மேலும் அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிர் வரி விதிக்கும் அனைத்து நாடுகளுக்கு, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வரிகளுடன் கூடுதல் வரிகள் சேர்க்கப்படும் என்று அவர் எச்சரித்தார். இதுபோன்ற புவிசார் அரசியல் பதற்றங்களின் போது தங்கம் முக்கியமான முதலீடாக மாறியுள்ளது. ஆகஸ்ட் 1 ஆம் தேதி நெருங்க நெருங்க தங்கம் விலை உயர வாய்ப்பு உள்ளது.

இதேவேளையில் அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் சமீபத்திய நாணய கொள்கை கூட்ட அறிக்கைகளின் படி, அந்நாட்டில் அதிகரிக்கும் பணவீக்கம் காரணமாக, இந்த மாதம் வட்டி விகித குறைப்பு நடைபெற வாய்ப்பில்லை என்று குறிப்பிடுகின்றன. அடுத்த கொள்கை முடிவு ஜூலை 30, 2025 அன்று எதிர்பார்க்கப்படுகிறது. வட்டி விகித குறைப்பு எதிர்பார்ப்புகள் தங்கம் விலையை பாதிக்கலாம். இந்த நிலையில் இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம், வெள்ளி, பிளாட்டினம் விலை நிலவரத்தை இப்போது பார்ப்போம்.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 72160 ரூபாய், மும்பை - 72160 ரூபாய், டெல்லி - 72280 ரூபாய், கொல்கத்தா - 72160 ரூபாய், பெங்களூர் - 72160 ரூபாய், ஹைதராபாத் - 72160 ரூபாய், கேரளா - 72160 ரூபாய், புனே - 72160 ரூபாய், பரோடா - 72200 ரூபாய், அகமதாபாத் - 72200 ரூபாய், ஜெய்ப்பூர் - 72280 ரூபாய், லக்னோ - 72280 ரூபாய், கோயம்புத்தூர் - 72160 ரூபாய், மதுரை - 72160 ரூபாய்.

22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 9,020 ரூபாய், மும்பை - 9,020 ரூபாய், டெல்லி - 9,035 ரூபாய், கொல்கத்தா - 9,020 ரூபாய், பெங்களூர் - 9,020 ரூபாய், ஹைதராபாத் - 9,020 ரூபாய், கேரளா - 9,020 ரூபாய், புனே - 9,020 ரூபாய், பரோடா - 9,025 ரூபாய், அகமதாபாத் - 9,025 ரூபாய், ஜெய்ப்பூர் - 9,035 ரூபாய், லக்னோ - 9,035 ரூபாய், கோயம்புத்தூர் - 9,020 ரூபாய், மதுரை - 9,020 ரூபாய்.

24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 9,840 ரூபாய், மும்பை - 9,840 ரூபாய், டெல்லி - 9,855 ரூபாய், கொல்கத்தா - 9,840 ரூபாய், பெங்களூர் - 9,840 ரூபாய், ஹைதராபாத் - 9,840 ரூபாய், கேரளா - 9,840 ரூபாய், புனே - 9,840 ரூபாய், பரோடா - 9,845 ரூபாய், அகமதாபாத் - 9,845 ரூபாய், ஜெய்ப்பூர் - 9,855 ரூபாய், லக்னோ - 9,855 ரூபாய், கோயம்புத்தூர் - 9,840 ரூபாய், மதுரை - 9,840 ரூபாய்.

18 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,440 ரூபாய், மும்பை - 7,380 ரூபாய், டெல்லி - 7,393 ரூபாய், கொல்கத்தா - 7,380 ரூபாய், பெங்களூர் - 7,380 ரூபாய், ஹைதராபாத் - 7,380 ரூபாய், கேரளா - 7,380 ரூபாய், புனே - 7,380 ரூபாய், பரோடா - 7,384 ரூபாய், அகமதாபாத் - 7,384 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,393 ரூபாய், லக்னோ - 7,393 ரூபாய், கோயம்புத்தூர் - 7,440 ரூபாய், மதுரை - 7,440 ரூபாய்.

10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 37,000 ரூபாய், மும்பை - 37,000 ரூபாய், டெல்லி - 37,000 ரூபாய், கொல்கத்தா - 37,000 ரூபாய், பெங்களூர் - 37,000 ரூபாய், ஹைதராபாத் - 37,000 ரூபாய், கேரளா - 37,000 ரூபாய், புனே - 37,000 ரூபாய், வதோதரா - 37,000 ரூபாய், அகமதாபாத் - 37,000 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 1,09,900 ரூபாய், மும்பை - 1,09,900 ரூபாய், டெல்லி - 1,09,900 ரூபாய், கொல்கத்தா - 1,09,900 ரூபாய், பெங்களூர் - 1,09,900 ரூபாய், ஹைதராபாத் - 1,20,100 ரூபாய், கேரளா - 1,19,900 ரூபாய், புனே - 1,09,900 ரூபாய், பரோடா - 1,09,900 ரூபாய், அகமதாபாத் - 1,09,900 ரூபாய்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+