மீண்டும் தங்கம் விலை ஏற்றம் ஆரம்பமா? என்ன சொல்கிறது கள நிலவரம்?

தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்தது. எந்த அளவுக்கு சரிவு கண்டது என்றால் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு சுமாராக 3,000 ரூபாய் வரை சரிந்தது.

சர்வதேச அளவில் ஒரு அவுன்ஸ் ஸ்பாட் தங்கத்தின் விலை சுமாராக 197 டாலர் வரை சரிந்தது.

அவ்வளவு ஏன் இந்தியாவில் 10 கிராம் தங்க ஃப்யூச்சர்ஸ் சந்தையில் கூட சுமார் 5,000 ரூபாய் சரிந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

கதையே வேறு

கதையே வேறு

ஆனால் இப்போது மெல்ல தங்கம், தன் விலை இறக்கத்தை கைவிட்டு, மீண்டும் கியர் போட்டு விலை ஏற்றம் காணத் தொடங்கி இருக்கிறது. என்ன விலையில் இருந்து என்ன விலைக்கு குறைந்தது. இப்போது என்ன விலையில் வர்த்தகமாகிறது. ஆபரணத் தங்கம் என்ன விலைக்கு விற்பனை ஆகிக் கொண்டு இருக்கிறது என்பதை விரிவாகப் பார்ப்போம்.

சர்வதேச தங்கம் விலை

சர்வதேச தங்கம் விலை

சர்வதேச அளவில் ஒரு அவுன்ஸ் ஸ்பாட் தங்கத்தின் விலை விவரங்கள்.
உச்ச விலை: மார்ச் 09, 2020 அன்று ஒரு அவுன்ஸ் ஸ்பாட் தங்கத்தின் விலை அமெரிக்காவில், 1,680 டாலரைத் தொட்டு வர்த்தகமானது.
குறைந்தபட்ச விலை: மார்ச் 19, 2020 அன்று சுமாராக 1,471 டாலருக்கு வர்த்தகமானது.
தற்போதைய விலை: இன்று (மார்ச் 20) 1,499 டாலருக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

விலை ஏற்றம்

விலை ஏற்றம்

ஆக, ஒரு அவுன்ஸ் ஸ்பாட் தங்கத்தின் விலை, 1680 டாலரில் இருந்து 1,471 டாலரைத் தொட்டு விட்டு, இப்போது மீண்டும் 1,499 டாலருக்கு விலை ஏறி, வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆக தங்கம் விலை சர்வதேச சந்தையில் யூ டேர்ன் எடுத்து விலை ஏற்றத்தில் வர்த்தகமாகத் தொடங்கிவிட்டது.

இந்திய ஃப்யூச்சர் கான்டிராக்ட்

இந்திய ஃப்யூச்சர் கான்டிராக்ட்


இந்தியாவின் எம் சி எக்ஸ் சந்தையில் 10 கிராம் தங்க கான்டிராக்ட் 03 ஏப்ரல் 2020-க்கு வர்த்தகமாகி வரும் விலை விவரங்கள்.
உச்ச விலை: மார்ச் 06, 2020 அன்று 44,961 ரூபாய்.
குறைந்த விலை : மார்ச் 16, 2020 அன்று 38,400 ரூபாயைத் தொட்டது.
தற்போதைய விலை: இன்று மார்ச் 20, 2020 (வெள்ளிக் கிழமை) சுமாராக 40,520 ரூபாயைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

ஏற்றம் காணும் விலை

ஏற்றம் காணும் விலை

ஆக 44,961 ரூபாயில் இருந்து சரிந்து, 38,400 ரூபாய்க்கு வந்து விட்டு, தற்போது சுமாராக 40,521 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. "நான் வளர்கிறேனே மம்மி" என்கிற கணக்காக, இந்திய தங்க ஃப்யூச்சர் விலை தெளிவாக அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது.

மற்ற ஃப்யூச்சர்கள்

மற்ற ஃப்யூச்சர்கள்

03 ஏப்ரல் 2020 - 40,520 ரூபாய்
05 ஜூன் 2020 - 40,657 ரூபாய்
05 ஆகஸ்ட் 2020 - 40,312 ரூபாய் என இந்தியாவின் எம் சி எக்ஸ் சந்தையில் வர்த்தகமாகும், எல்லா தங்க ஃப்யூச்சர்களின் விலையும் அதிகரிக்கத் தொடங்கி இருக்கின்றன. ஆக தங்கத்தின் விலை ஏற்றத்தை இந்த தங்க ஃப்யூச்சர்களும் தெளிவாக உறுதிப்படுத்துகின்றன.

ஆபரணத் தங்கம்

ஆபரணத் தங்கம்


சென்னையில் 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை விவரங்கள்.
உச்ச விலை: மார்ச் 06, 2020 அன்று 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 46,160 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
குறைந்த விலை: மார்ச் 19, 2020 அன்று 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 41,920 ரூபாய்க்கு விற்பனை செய்தார்கள்.
இன்றைய விலை: இன்று சென்னையில் 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 42,970 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.

போச்சு போ

போச்சு போ

சென்னையில், 46,160 ரூபாயில் இருந்து 41,920 ரூபாய்க்கு வந்த ஆபரணத் தங்கத்தின் விலை, தெளிவான யூ டேர்ன் எடுத்து, விலை ஏறத் தொடங்கி இருக்கிறது. அதற்கு அறிகுறியாகத் தான், இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை 42,670-க்கு விற்பனை ஆகி வருகிறது.

எவ்வளவு போகலாம்

எவ்வளவு போகலாம்

இந்த கொரோனா பயத்தால் சென்னையில் 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை சுமாராக 46,000 ருபாயைக் கடந்து விட்டது. இன்னும் இந்த கொரோனா பயம் நீடித்தால், அதே 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 50,000 ரூபாயைத் தொட்டாலும் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை என்கிறார்கள் அனலிஸ்ட்கள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+