சூடு பிடிக்கும் தங்கம் விலை! அலெர்ட் ஆகிக்குங்க மக்களே! தங்கம் விலை எவ்வளவு அதிகரிக்கலாம்?

கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து தங்கம் விலை தாறுமாறாக ஏற்றம் கண்டு வருகிறது. இந்த 2020-ம் ஆண்டில் கூட தங்கம் விலை கணிசமாக ஏற்றம் கண்டது.

ஆனால் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து தங்கம் விலை இறக்கம் கண்டு வருகிறது. ஆனால் தற்போது மெல்ல விலை ஏற்றம் காணத் தொடங்கி இருக்கிறது.

இன்றைய தங்கம் விலை என்ன? எம் சி எக்ஸில் தங்கம் விலை என்ன? சர்வதேச தங்கம் எந்த நிலையில் வர்த்தகமாகிறது? தங்கம் விலை எப்படி ஏற்றம் காணத் தொடங்கி இருக்கிறது? தங்கம் விலை எவ்வளவு அதிகரிக்கலாம்? என்பதை எல்லாம் பார்ப்போம்.

சென்னை ஆபரணத் தங்கம் விலை

சென்னை ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று 52,730 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு பவுன் தங்கம் விலை 42,184 ரூபாய்க்கு விற்பனை ஆனது. அதே போல 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கம் விலை 48,340 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு பவுன் விலை 38,672 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

860 ரூபாய் விலை ஏற்றம்

860 ரூபாய் விலை ஏற்றம்

சென்னையில் 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை, கடந்த 24 செப் 2020 அன்று 51,870 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஆகஸ்ட் 2020 உச்சத்துக்குப் பிறகு, இது தான் 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் மிகக் குறைந்த விலை. அப்போதைய விலை உடன், நேற்றைய 52,730 ரூபாயை ஒப்பிட்டால் 860 ரூபாய் விலை ஏற்றம் கண்டு இருக்கிறது.

MCX Gold Price - டிசம்பர் காண்டிராக்ட்

MCX Gold Price - டிசம்பர் காண்டிராக்ட்

இந்தியாவின் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சான எம் சி எக்ஸ் சந்தையில் 10 கிராம் தங்க ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை, இன்று 50,332 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. கடந்த 24 செப் 2020 அன்று 49,320 ரூபாய் வரை விலை சரிந்தது குறிப்பிடத்தக்கது.

1,012 ரூபாய் விலை அதிகரிப்பு

1,012 ரூபாய் விலை அதிகரிப்பு

ஆக, கடந்த சில வர்த்தக நாட்களில், எம் சி எக்ஸ் தங்கம் (50,332 - 49,320) 1,012 ரூபாய் விலை ஏற்றம் கண்டு இருக்கிறது. எம் சி எக்ஸ் தங்கம் விலை 52,000 ரூபாயைக் கடந்தால், தொடர்ந்து விலை அதிகரித்து, ஒரு நல்ல விலை ஏற்றம் காணும் என எதிர்பார்க்கலாம்.

சர்வதேச தங்கம் விலை XAUUSD:CUR

சர்வதேச தங்கம் விலை XAUUSD:CUR

ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கம் விலை, நேற்று 1,885.82 டாலருக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. தற்போது 6.9 டாலர் விலை (0.37 %) அதிகரித்து 1,892 டாலருக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. கடந்த 29 செப் 2020 அன்று ப்ளூம்பெர்க் தரவுகள் படி, சர்வதேச தங்கம் விலை 1,898 டாலருக்கு வர்த்தகம் நிறைவடைந்தது.

31 டாலர் ஏற்றம் கண்ட சர்வதேச தங்கம்

31 டாலர் ஏற்றம் கண்ட சர்வதேச தங்கம்

கடந்த 25 செப் 2020 அன்று, சர்வதேச தங்கம் விலை 1,861 டாலருக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. ஆகஸ்ட் 2020 உச்சத்துக்குப் பிறகு சர்வதேச தங்கம் விலை கண்ட மிக குறைந்த விலை என்றால், அது இது தான். எனவே இந்த குறைந்த விலை உடன், இன்றைய விலையை ஒப்பிட்டால் (1892 - 1,861), 31 டாலர் விலை ஏற்றம் கண்டு இருக்கிறது. ஆக இங்கு யூடேர்ன் உறுதி ஆகிறது. சரி இந்த விலை ஏற்றத்துக்கான காரணங்கள் என்ன?

தடுமாறும் டாலர் கரன்சி

தடுமாறும் டாலர் கரன்சி

யூரோ, ஜப்பானிய யென் போன்ற உலகின் ஆறு முக்கிய கரன்சிகளுக்கு எதிராக அமெரிக்க டாலர் கரன்சியின் பலத்தை வெளிப்படுத்தும் டாலர் இண்டெக்ஸ், இன்று 93.7 புள்ளிகளில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. சமீபத்தில் 94.64 புள்ளிகள் வரைத் தொட்டு வர்த்தகமான டாலர் இண்டெக்ஸ், தற்போது 93.7 புள்ளிகளில் தடுமாறிக் கொண்டு இருக்கிறது. ஆக டாலர் கரன்சி பலவீனமடைந்து இருப்பதைக் காட்டுகிறது. டாலர் பலவீனமடைந்தால், மற்ற நாட்டு கரன்சி வைத்திருப்பவர்களுக்கு குறைந்த விலையில் தங்கம் கிடைக்கும். எனவே தங்கம் விலை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

கொரோனா ஸ்டிமுலஸ் பேக்கேஜ்

கொரோனா ஸ்டிமுலஸ் பேக்கேஜ்

அமெரிக்க அரசு, கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கும் அமெரிக்க பொருளாதாரத்தை ஊக்குவிக்க, தனி பேக்கேஜை அறிவிக்க இருப்பதாகச் சொல்லி வருகிறார்கள். கூடிய விரைவில், கணிசமான தொகை கொண்ட கொரோனா ஸ்டிமுலஸ் பேக்கேஜ் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி பேக்கேஜ் அறிவிக்கப்பட்டால், அது தங்கத்தின் விலை ஏற்றத்துக்கு சாதகமாக அமையலாம்.

தங்கம் Vs உலக பொருளாதாரம்

தங்கம் Vs உலக பொருளாதாரம்

முக்கிய உலக நாடுகளின், பொருளாதார தரவுகள் அத்தனை திருப்திகரமாக இல்லை. இப்போதும் பல நாட்டு பொருளாதாரத்தின் ஜிடிபிக்கள் தரை தட்டிக் கொண்டு தான் இருக்கின்றன. உலக பொருளாதாரங்கள் சரியாக செயல்படாத போது எல்லாம், தங்கம் விலை புதிய உச்சங்களைத் தொட்டு இருக்கிறது. இப்போதும் அப்படி ஒரு புதிய உச்சத்தைத் தொட வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் அனலிஸ்ட்கள்.

Geojit Financial Services

Geojit Financial Services

தங்கம் 1,840 டாலருக்கு மேல் வர்த்தகமாகும் வரை, தங்கம் விலை, தன் வீழ்ச்சியில் இருந்து மீள்கிறது எனலாம். ஆனால் தங்கம் விலை 1,900 டாலரை உடைத்துக் கொண்டு மேலே ஏற்றம் கண்டு வர்த்தகமாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அப்போது தான் தங்கம் விலை புதிய ஏற்றங்களைக் காணும் என்கிறது ஜியோஜித் ஃபைனான்சியல் சர்வீசஸ்.

3,000 டாலர் வரை தொடலாம்

3,000 டாலர் வரை தொடலாம்

உலகின் முன்னணி நிதி நிறுவனமான கோல்ட் மேன் சாக்ஸ், தங்கம் விலை 2,300 டாலர் வரைத் தொடலாம் எனச் சொல்லி இருக்கிறது. க்ரெடிட் சூசி என்கிற கம்பெனியும் இந்த கணிப்பை ஆதரிக்கிறது. அதே போல பேங்க் ஆஃப் அமெரிக்கா 3,000 டாலர் வரைத் தொடலாம் எனக் கணித்து இருக்கிறார்கள். ஜிம் ராஜர்ஸ் என்கிற கமாடிட்டி முதலீட்டின் பிதாமகனோ, தங்கம் ஒரு சூப்பர் உச்சத்தைத் தொடும் எனச் சொல்லி இருக்கிறார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+