செப்டம்பர் மாதத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. நேற்றைய விலையில் தான் இன்றும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய முந்தைய நாள் கிராமுக்கு 10 ரூபாய் குறைந்திருந்தது. கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை 20 ரூபாய் அதிகரிப்பதும், 20 ரூபாய் குறைவதும் என சிறு சிறு வித்தியாசத்திலேயே விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்றைய தினம் எந்தவித மாற்றமும் இன்றி உள்ளது. இந்த பதிவில் கோயம்பத்தூர் மற்றும் மதுரையில் இன்றைய தங்கம் விலை என்ன என்பது குறித்து பார்ப்போம்.
கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் இன்றைய தங்கம் விலை: இன்று கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை 10 ரூபாய் குறைந்து 6,695-க்கும் ஒரு சவரன் 22 கேரட் தங்கம் விலை 80 ரூபாய் குறைந்து 53,560 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 11 ரூபாய் குறைந்து கிராமுக்கு 7,304 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல 1 சவரன் 24 கேரட் தங்கம் விலை 88 ரூபாய் குறைந்து 58,432 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
18 கேரட் தங்கத்தை வாங்குபவர்களாக இருந்தால் இன்றைய நிலவரப்படி 1 கிராம் 18 கேரட் தங்கத்தின் விலை 2 ரூபாய் மட்டுமே குறைந்துள்ளது. 1 கிராம் 5,484 ரூபாய்க்கும், 1 சவரன் 16 ரூபாய் குறைந்து 43,872 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கோவை மதுரையில் இன்றைய வெள்ளி விலை நிலவரம்: இன்று வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.92 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ. 92,000 ஆகவும் உள்ளது. தங்கம் வாங்க வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்கும் நபர்கள் அவ்வப்போது சந்தைகளில் ஏற்படும் மாற்றங்கள்.. நாட்டின் சட்ட திட்டங்களில் ஏற்படும் மாற்றங்கள்.. ஆகியவற்றை தெரிந்து கொள்ளும்போது சிறப்பான விலையில் தங்க நகைகளை வாங்க முடியும். இதற்கு உதாரணமாக சமீபத்திய பட்ஜெட் அறிவிப்புக்கு பிறகு தங்கம் விலை வெகுவாக குறைந்தது. இதைப் பயன்படுத்தி பலரும் தங்களுக்கு தேவையான நகைகளை வாங்கி குவித்ததை நம்மால் பார்க்க முடிந்தது.
தங்கம் விலை எப்போது ஏறும்? எப்போது இறங்கும்? என்று நம்மால் கூறிவிட முடியாது. இது பல்வேறு காரணிகளைப் பொறுத்து மாறுபடக்கூடும். ஆனால் ஒரு சில காரணங்கள் நமக்கு முன்னரே தெரியும். உதாரணமாக கடந்த மாதம் ஆடி என்பதால் எந்த திருமணமும் நடந்திருக்காது. இதனால் தங்கம் விலை சற்று இறங்கி பின்னர் ஏறி காணப்பட்டு இருக்கும்.
ஆனால் இனி வரும் மாதங்களில் டிமாண்ட் அதிகரிக்கலாம். இதன் காரணமாக தங்கம் உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது. அதேபோல பண்டிகைகள் வந்தாலும் தங்க விலையில் மாற்றம் இருக்கலாம். எனவே தங்கம் வாங்க முடிவெடுக்கும் போது விலை குறைவாக இருக்கும் நாட்களை பயன்படுத்திக் கொள்வது லாபகரமானதாக இருக்கும்.
More From GoodReturns

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

தங்கம் , வெள்ளி விலை தடாலடி உயர்வு: இனி தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது!!

தங்கம் விலையில் அதிரடி திருப்பம்! டிரம்ப் கொடுத்த போர் நிறுத்த ட்விஸ்ட்! அடுத்து என்ன நடக்கும்?

எல்லாம் காலியாக போகுது.. தங்கம், பிட்காயின் தான் இனி ராஜா! ராபர்ட் கியோசாகியின் பகீர் எச்சரிக்கை!

மதுரை மக்களே இன்று தங்க நகை வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

மதுரை மக்களே உங்க ஊரில் இன்று தங்கம் விலை குறைந்ததா? உயர்ந்ததா?

Gold விலை ஏறினாலும் தணியாத மோகம்! இந்தியர்களின் அதிரடி வேட்டை! கவலையில் நிதியமைச்சகம்?

மதுரையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: மேலும் விலை ஏறுமா?

தங்கத்தை ஓரம் கட்டும் வெள்ளி! உலக நாடுகளின் பார்வை இப்போது இந்தியா பக்கம்..ஏன் இந்த மாற்றம்?

தங்கம், வெள்ளி விலை கிடுகிடு உயர்வு: முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?



Click it and Unblock the Notifications