பிரபல பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் தனது சமீபத்திய வீடியோவில் தங்கம் விலை மற்றும் வர்த்தகம் குறித்து முக்கியமான பகுப்பாய்வை வழங்கியுள்ளார். தற்போது தங்கம் 14440 ரூபாய் அளவில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. மாலையில் ஏற்றம் காணும் தங்கம், காலையில் சற்று இறங்குகிறது. ஆனால், இந்த ஏற்ற இறக்கங்கள் பெரிய அளவில் இல்லை என்பது மகிழ்ச்சியான விஷயம் என கூறுகிறார் ஆனந்த் ஸ்ரீனிவாசன்.
காரணம் தற்போது தங்கம் விலை 14400 ரூபாய்க்கு மேல் நிலையாக இருந்து புதிய அடித்தளத்தை உருவாகி வருகிறது. இது முதலீட்டாளர்களுக்கு நம்மதியை அளிக்கிறது, இதேபோல் ரெஸ்டென்ஸ் அளவு உருவாகும் காரணத்தால் தங்கம் விலை குறையும் போது ஒரு பாதுகாப்பு படி இதன் மூலம் ஏற்படுகிறது. மேலும் ஓரே நிலையில் வர்த்தகம் ஆகும் போது ஒவ்வொரு நாளும் சந்தை வலுவடைந்து கொண்டே இருக்கிறது.

அமெரிக்கப் பொருளாதாரமும்.. தங்கமும்..
தங்கம் விலையின் எதிர்காலம் அமெரிக்கப் பொருளாதாரத்தைப் பொறுத்தே இருக்கும். குறிப்பாக, அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதக் குறைப்பு (ரேட் கட்) வருமா என்பதே முக்கியமான கேள்வி. இந்த ஆண்டு இன்னும் இரண்டு ரேட் கட் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரேட் கட் நடந்தால் தங்கம் விலை ஏறும். இல்லையெனில், இறங்கும். இந்த ஆண்டு இரண்டு ரேட் கட் நடந்தால் தங்கம் நல்ல ஏற்றம் காணும். இல்லையெனில், தற்போதைய நிலையில் தொடரும் என ஆனந்த் ஸ்ரீனிவாசன் விளக்கினார்.
டிரம்ப் நிர்வாகத்தின் வரி மாற்றங்கள்: நல்ல செய்தியா?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் உலோகங்கள் (மெட்டல்ஸ்) மீதான டாரிஃப் (இறக்குமதி வரி) குறித்து முக்கிய முடிவு எடுத்துள்ளார். அலுமினியம் உள்ளிட்ட உலோகங்களுக்கு விதிக்கப்பட்ட உயர் வரிகளை அகற்றியுள்ளார்.
மேலும் செனட் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த வரிகள் உலோக வர்த்தகத்தை லாபகரமாக மாற்றியுள்ளது. இப்போது உலக நாடுகள் உடன் நடக்கும் பேச்சுவார்த்தைகள் மூலம் வரிகளும், வர்த்தக தடைகளும் விரைவில் அகற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வரி விதிப்பு விவகாரத்தில் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை பொறுமையாக இருக்க வேண்டும் என ஆனந்த் அறிவுறுத்தினார்.
டாலர் பலவீனம் தங்கத்துக்கு உதவும்
இன்று அமெரிக்க டாலர் பலவீனமடைந்து 90.70 அளவில் வர்த்தகம் செய்யப்படுகிறது. டாலர் வலுவிழந்தால், தங்கம் போன்ற பாதுகாப்பான முதலீடுகள் ஈர்க்கப்படும். இந்த சூழலில் தங்கம் விலைக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு தங்கத்துக்கு பெரிய சந்தையாக விளங்குகிறது. திருமணங்கள், திருவிழாக்கள், முதலீடு ஆகியவற்றில் தங்கம் முக்கிய இடம் பிடித்துள்ளது. சென்னை, கோயம்புத்தூர், மதுரை போன்ற நகரங்களில் உள்ள நகைக்கடைகளில் தினசரி விற்பனை அதிகம். உலகளாவிய காரணிகளால் தங்கம் விலை ஏறினால், தமிழக மக்களின் முதலீடு அதிகரிக்கும். ஆனால், ஏற்ற இறக்கங்கள் இருப்பதால், சிறு முதலீட்டாளர்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.
இந்த ஆண்டு தங்கம் விலை எப்படி இருக்கும் என்பதை அமெரிக்காவின் அடுத்த நடவடிக்கைகள் தீர்மானிக்கும். தமிழ்நாட்டு மக்கள் இந்த சந்தையை உன்னிப்பாகக் கண்காணிப்பது நல்லது.
More From GoodReturns

Silver Crash: தங்கத்தை விடுங்க.. வெள்ளியோட ஆட்டத்தை பாருங்க! முதலீடு செய்ய இது சரியான நேரமா?

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வெள்ளி விலை 15 ஆண்டுகளில் இல்லாத மோசமான சரிவு! அடுத்து என்ன நடக்கும்? நிபுணர்கள் சொல்வது இதுதான்!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!



Click it and Unblock the Notifications