தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

உலகளாவிய பொருளாதார மற்றும் அரசியல் பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கம் எதிர்பாராத வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை 11% க்கும் அதிகமாக சரிந்துள்ளது.

இத்தகை பெரும் சரிவு இந்திய சந்தையில் 1983க்கு பிறகு பதிவான மிகப்பெரிய வாராந்திர வீழ்ச்சியாக பார்க்கப்படுகிறது. வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றம், எரிபொருள் விலை உயர்வு மற்றும் அமெரிக்க டாலர் உயர்வு ஆகியவையே இந்த சரிவுக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

வளைகுடா நாடுகள் போர்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது மேற்கொண்ட தாக்குதல்களுக்குப் பிறகு வளைகுடா நாடுகள் பிராந்தியத்தில் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. பொதுவாக இத்தகைய போர் சூழ்லின் போது தங்கத்தின் தேவை அதிகரிக்கும். ஆனால் இந்த முறை எதிர்மாறான நிலை ஏற்பட்டுள்ளது. எரிசக்தி விலை உயர்வு காரணமாக உலகளாவிய பணவீக்கம் அதிகரிக்கும் என்ற அச்சம் முதலீட்டாளர்களை தங்கத்தை விட்டு வெளியேற்ற வைத்துள்ளது.

டாலர் வலிமை
அமெரிக்க டாலர் வலுவடைதல் தங்க விலையை குறைக்கும் முக்கிய காரணமாகும். குறிப்பாக, அமெரிக்க ராணுவம் வளைகுடா நாடுகள் பகுதிக்கு ஆயிரக்கணக்கான கடற்படை வீரர்களை அனுப்பியுள்ளதாக வெளிவந்த தகவல்கள் சந்தையில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தின. இதனால் போர் நீண்ட காலம் தொடரும் என்பது உறுதியாகியுள்ளது.

இதன் எதிரொலியாக அமெரிக்க அரசுத் தரப்பு பத்திரங்களின் வருவாய் (Treasury yields) உயர்ந்தது. டாலர் வலுவாகும் போது, தங்கம் போன்ற வட்டி வருமானம் அளிக்காத சொத்துக்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் தங்கத்தில் முதலீடு குறைகிறது.

ETF விற்பனை அழுத்தம்
இவை அனைத்தின் காரணமாக தங்கம் சார்ந்த ETF முதலீடுகள் தொடர்ந்து மூன்றாவது வாரமாக வெளியேற்றத்தை சந்தித்து வருகின்றன. இந்த காலகட்டத்தில் 60 டன்னுக்கு மேல் தங்க கையிருப்புகள் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது, பெரிய முதலீட்டாளர்கள் தங்கத்தில் இருந்து வெளியேறி வருவதை தெளிவாக காட்டுகிறது.

எட்டு நாட்கள் தொடர்ந்து சரிவு
கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் தங்கம் 4% சரிந்து, ஒரு அவுன்ஸ் $4,477.82 என்ற அளவிற்கு வந்துள்ளது. இது தொடர்ந்து எட்டு நாட்கள் சரிவு கண்ட நிலையில் உள்ளது. 2023 அக்டோபர் மாதத்திற்கு பிறகு இதுவே நீண்டகால சரிவாகும்.

இத்தகைய கடுமையான சரிவு ஏற்பட்ட நிலையிலும், இந்த ஆண்டின் தொடக்கம் முதல் தங்கம் சுமார் 4% உயர்வில் உள்ளது. ஜனவரி மாத இறுதியில் தங்கம் ஒரு அவுன்ஸுக்கு 5,600 டாலருக்கு அருகில் உச்சத்தை தொட்டது. அப்போது முதலீட்டாளர் தேவை அதிகரித்தது, மத்திய வங்கிகள் கொள்முதல் உயர்ந்தது மற்றும் டிரம்ப் பெடரல் ரிசர்வ்-க்கு கொடுத்த நெருக்கடி, உலக நாடுகள் மீதான வட்டி உயர்வு ஆகியவை தங்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டன.

தங்கம் பொதுவாக பாதுகாப்பான முதலீடாக கருதப்பட்டாலும், தற்போதைய உலகளாவிய சூழ்நிலை அதன் வழக்கமான முதலீட்டு சூழ்நிலை மாறியுள்ளது. இதை புரிந்துக்கொண்டு தங்கம் விலையின் போக்கையும், சர்வதேச சந்தையின் போக்கையும் சரியாக கவனித்தால் தங்கம் விலை குறையும் போது வாங்கி பெரும் லாபத்தை அடுத்த 2-3 ஆண்டுகளில் பார்க்க முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+