தங்கம் விலை பிப்.5 தேதி தடாலடி உயர்வு.. இனி தினமும் இப்படிதான்.. ரத்தக்கண்ணீர் வடிக்கும் மக்கள்..!!

இந்திய மக்களின் முக்கிய சேமிப்பாக விளங்கும் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது, நேற்றைய வர்த்தகத்தில் 1000 ரூபாய்க்கு அதிகமாக உயர்ந்தது போல், இன்றைய வர்த்தகத்திலும் 1000 ரூபாய்க்கு அதிகமாக உயர்ந்து சாமானிய மக்களுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்துள்ளது. இதனால் தங்கத்தை முக்கிய முதலீடாக பார்க்கும் அனைத்து தரப்பினருக்கும் இது பெரும் சுமையாக மாறியுள்ளது.

24 கேரட் தங்கம் விலை நேற்றைய வர்த்தகத்தில் 10 கிராமுக்கு 1150 ரூபாய் உயர்ந்த நிலையில், இன்று 1040 ரூபாய் உயர்ந்துள்ளது. இன்றைய உயர்வுக்கு மிக முக்கியமான காரணமாக இருப்பது அமெரிக்கா - சீனா மத்தியிலான வர்த்தக போர் தான், இரு நாடுகள் மத்தியிலான வர்த்தக போர் சர்வதேச ஜிடிபி வளர்ச்சியை குறைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதால் பெரும் முதலீட்டாளர்கள் முதல் சிறு முதலீட்டாளர்கள் வரையில் தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்ய துவங்கியுள்ளனர்.

தங்கம் விலை பிப்.5 தேதி தடாலடி உயர்வு.. இனி தினமும் இப்படிதான்.. ரத்தக்கண்ணீர் வடிக்கும் மக்கள்..!!

அமெரிக்கா பிப்ரவரி மாத துவக்கத்தின் சீனா மீது வரி விதித்த நிலையில், நேற்று சீனா அமெரிக்க பொருட்கள் மீது பதிலடி கொடுக்கும் விதமாக வரியை விதித்தது. இதை தொடர்ந்து பிப்ரவரி 5ஆம் தேதி அமெரிக்கா, சீன கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங் மீது 10 சதவீத வரியை விதித்துள்ளது.

இதன் எதிரொலியாக தங்க விலை புதன்கிழமை புதிய உச்சத்தை தொட்டது. ஆசிய வர்த்தக நேரத்தில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2,854 டாலர் அளவை எட்டியது. அமெரிக்க அரசின் வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார தாக்கம் தங்கம் விலை உயர்வுக்கு மைய காரணமாக அமைந்துள்ளது. இதனால் அமெகிக்கா - சீனா மத்தியிலான வர்த்தக போரின் தாக்கம் தணியும் வரையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்வான நிலையிலேயே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கனடா, மெக்சிகோ மற்றும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது அமெரிக்க அரசு வரிகளை விதித்ததைத் தொடர்ந்து, உலகளாவிய வர்த்தகப் போரின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. இதில் கனடா, மெக்சிகோ மீதான வரி விதிப்புக்கு 30 நாள் காலஅவசாகம் கொடுக்கப்பட்டு உள்ளது. இதேவேளையில் அமெரிக்க அரசு USAID மூலம் அளித்து வந்த பல்வேறு நிதியுதவிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இதுவும் முதலீட்டு சந்தையில் முக்கியமான பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.

இதனால் முதலீட்டாளர்கள் தங்கம் போன்ற பாதுகாப்பான சொத்துக்களை தேடி வருகின்றனர். மேலும், செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட வேலைவாய்ப்பு தரவுகள் மற்றும் தொழிலாளர் ஓட்டம் கணக்கெடுப்பு (JOLTS) தரவு அமெரிக்க வேலைவாய்ப்பு சந்தையில் தளர்ச்சி ஏற்பட்டுள்ளதை காட்டுகிறது.

வேலைவாய்ப்பு தரவுகள் குறைந்திருப்பது, தொடர்ச்சியான பணவீக்க அழுத்தங்கள் இருந்தபோதிலும், அமெரிக்க மத்திய வங்கி தளர்வான நிதி கொள்கையை தொடரும் என அறிவித்துள்ளது, இதேவேளையில் இனியும் வட்டியை சில காலாண்டுக்கு குறைக்க முடியாது என்பதையும் கூறியுள்ளது. இதனால் பெரிய அளவிலான நிதி உள்ளீடு அமெரிரக்க மத்திய வங்கியில் இருந்து வராது.

இன்றைய வர்த்தகத்தில் இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 950 ரூபாய் உயர்ந்து 79,050 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 1040 ரூபாய் உயர்ந்து 86,240 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 760 ரூபாய் உயர்ந்து 63,240 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை கிலோவுக்கு 1000 ரூபாய் உயர்ந்து 1,07,000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 150 ரூபாய் உயர்ந்து 27,140 ரூபாயாக உள்ளது.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 63240 ரூபாய், மும்பை - 63240 ரூபாய், டெல்லி - 63360 ரூபாய், கொல்கத்தா - 63240 ரூபாய், பெங்களூர் - 63240 ரூபாய், ஹைதராபாத் - 63240 ரூபாய், கேரளா - 63240 ரூபாய், புனே - 63240 ரூபாய், பரோடா - 63280 ரூபாய், அகமதாபாத் - 63280 ரூபாய், ஜெய்ப்பூர் - 63360 ரூபாய், லக்னோ - 63360 ரூபாய், கோயம்புத்தூர் - 63240 ரூபாய், மதுரை - 63240 ரூபாய்.

22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,905 ரூபாய், மும்பை - 7,905 ரூபாய், டெல்லி - 7,920 ரூபாய், கொல்கத்தா - 7,905 ரூபாய், பெங்களூர் - 7,905 ரூபாய், ஹைதராபாத் - 7,905 ரூபாய், கேரளா - 7,905 ரூபாய், புனே - 7,905 ரூபாய், பரோடா - 7,910 ரூபாய், அகமதாபாத் - 7,910 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,920 ரூபாய், லக்னோ - 7,920 ரூபாய், கோயம்புத்தூர் - 7,905 ரூபாய், மதுரை - 7,905 ரூபாய்.

24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 8,624 ரூபாய், மும்பை - 8,624 ரூபாய், டெல்லி - 8,639 ரூபாய், கொல்கத்தா - 8,624 ரூபாய், பெங்களூர் - 8,624 ரூபாய், ஹைதராபாத் - 8,624 ரூபாய், கேரளா - 8,624 ரூபாய், புனே - 8,624 ரூபாய், பரோடா - 8,629 ரூபாய், அகமதாபாத் - 8,629 ரூபாய், ஜெய்ப்பூர் - 8,639 ரூபாய், லக்னோ - 8,639 ரூபாய், கோயம்புத்தூர் - 8,624 ரூபாய், மதுரை - 8,624 ரூபாய்.

18 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,535 ரூபாய், மும்பை - 6,468 ரூபாய், டெல்லி - 6,480 ரூபாய், கொல்கத்தா - 6,468 ரூபாய், பெங்களூர் - 6,468 ரூபாய், ஹைதராபாத் - 6,468 ரூபாய், கேரளா - 6,468 ரூபாய், புனே - 6,468 ரூபாய், பரோடா - 6,472 ரூபாய், அகமதாபாத் - 6,472 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,480 ரூபாய், லக்னோ - 6,480 ரூபாய், கோயம்புத்தூர் - 6,535 ரூபாய், மதுரை - 6,535 ரூபாய்.

10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 27,140 ரூபாய், மும்பை - 27,140 ரூபாய், டெல்லி - 27,140 ரூபாய், கொல்கத்தா - 27,140 ரூபாய், பெங்களூர் - 27,140 ரூபாய், ஹைதராபாத் - 27,140 ரூபாய், கேரளா - 27,140 ரூபாய், புனே - 27,140 ரூபாய், வதோதரா - 27,140 ரூபாய், அகமதாபாத் - 27,140 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 1,07,000 ரூபாய், மும்பை - 99,500 ரூபாய், டெல்லி - 99,500 ரூபாய், கொல்கத்தா - 99,500 ரூபாய், பெங்களூர் - 99,500 ரூபாய், ஹைதராபாத் - 1,07,000 ரூபாய், கேரளா - 1,07,000 ரூபாய், புனே - 99,500 ரூபாய், பரோடா - 99,500 ரூபாய், அகமதாபாத் - 99,500 ரூபாய், ஜெய்ப்பூர் - 99,500 ரூபாய், லக்னோ - 99,500 ரூபாய், கோயம்புத்தூர் - 1,07,000 ரூபாய், மதுரை - 1,07,000 ரூபாய்.

உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:

பஹ்ரைன் - BHD 30 - 6,941 ரூபாய்
குவைத் - KWD 26.23 - 7,413 ரூபாய்
மலேசியா - MYR 363 - 7,147 ரூபாய்
ஓமன் - OMR 33.95 - 7,691 ரூபாய்
கத்தார் - QAR 321 - 7,682 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 323 - 7,511 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 108.60 - 7,004 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 320.25 - 7,605 ரூபாய்
அமெரிக்கா - USD 78 - 6,804 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 320.25 - 7,605 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 320.25 - 7,605 ரூபாய்
துபாய் (UAE) - AED 320.25 - 7,605 ரூபாய்
புஜைரா (UAE) - AED 320.25 - 7,605 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 320.25 - 7,605 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 320.25 - 7,605 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 321 - 7,682 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 33.95 - 7,691 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 323 - 7,511 ரூபாய்
இங்கிலாந்து - GBP 67.67 - 7,358 ரூபாய்
கனடா - CAD 126.25 - 7,678 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 124.80 - 6,803 ரூபாய்
நேபாளம் - NPR 13,164.49 - 8,226 ரூபாய்

உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:

பஹ்ரைன் - BHD 31.90 - 7,380 ரூபாய்
குவைத் - KWD 28.46 - 8,043 ரூபாய்
மலேசியா - MYR 378 - 7,443 ரூபாய்
ஓமன் - OMR 36.20 - 8,200 ரூபாய்
கத்தார் - QAR 343.50 - 8,220 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 351 - 8,162 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 120.50 - 7,772 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 344 - 8,169 ரூபாய்
அமெரிக்கா - USD 83 - 7,240 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 344 - 8,169 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 344 - 8,169 ரூபாய்
துபாய் (UAE) - AED 344 - 8,169 ரூபாய்
புஜைரா (UAE) - AED 344 - 8,169 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 344 - 8,169 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 344 - 8,169 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 343.50 - 8,220 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 36.20 - 8,200 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 351 - 8,162 ரூபாய்
இங்கிலாந்து - GBP 73.82 - 8,027 ரூபாய்
கனடா - CAD 133.25 - 8,104 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 136.10 - 7,419 ரூபாய்
நேபாளம் - NPR 14,309.23 - 8,941 ரூபாய்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+