தந்தேராஸ் எதிரொலி.. தங்கம் விலை திடீர் உயர்வு.. சென்னை, கோவை, மதுரையில் தங்கம் விலை என்ன?

தந்தேராஸ் பண்டிகை காரணமாக இந்தியாவில் தங்கம் டிமாண்ட் மற்றும் விற்பனை அதிகரிக்கும் என அனைத்து தரப்பினரும் உறுதியாக நம்பினர், ஆனால் கடந்த ஒரு மாதத்தில் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த காரணத்தால் 2022ஐ ஒப்பிடுகையில் 2023ல் விற்பனை அளவு குறையும் என்ற கணிப்புச் சந்தையில் நிலவியது.

இப்படியிருக்கையில் கடந்த 4 நாட்களாகத் தங்கம் விலை குறைந்து மக்களுக்கு ஒரு வாய்ப்பை உருவாக்கினாலும், வியாழக்கிழமை அமெரிக்க மத்திய வங்கியான பெரடல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல்-ன் பேசு முதலீட்டு சந்தையை மீண்டும் புரட்டிப்போட்டது. கடந்த நாணய கொள்கை கூட்டத்தில் அமலாக்கம் செய்த கொள்கை முடிவுகள் நாட்டின் பணவீக்கத்தை 2 சதவீதத்திற்குக் கொண்டு வருமா எனத் தெரியவில்லை என வியாழக்கிழமை ஜெரோம் பவல் பேசியுள்ளார்.

தந்தேராஸ் எதிரொலி.. தங்கம் விலை திடீர் உயர்வு.. சென்னை, கோவை, மதுரையில் தங்கம் விலை என்ன?

இவரின் பேசு முதலீட்டாளர்களை மீண்டும் தங்கம் மீது முதலீடு செய்யத் துண்டியுள்ளது. இதனால் 1945 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்ட ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை இன்று 1960 டாலருக்கு உயர்ந்துள்ளது. இதேவேளையில் அமெரிக்காவில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு காரணமாக வேலைவாய்ப்பின்மை அளவு கணிக்கப்பட்ட அளவை காட்டிலும் குறைவாக உள்ளது.

அமெரிக்காவின் வேலைவாய்ப்புத் தரவுகள் அடுத்த 2 மாதத்திற்கு வலிமையாக இருக்கு உள்ளது, கடந்த வாரம் வேலைவாய்ப்பின்மை அளவு 222000 ஆக இருந்த நிலையில் இந்த வாரம் 117000 ஆகக் குறைந்துள்ளது. இது டாலர் மதிப்பையும், பங்கு முதலீட்டையும், பத்திர முதலீட்டையும் அதிகரிக்கும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இதனால் உலக நாடுகளில் இருக்கும் டாலர் முதலீடுகள் வெளியேறும் நிலை துவங்கியுள்ளது.

இப்படி அமெரிக்க முதலீட்டுச் சந்தைக்கு மிகவும் சாதகமான சூழ்நிலையாக மாறியுள்ளது இந்த வாரம். அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பும் 83.28 ரூபாயாக இருக்கும் வேளையில் இந்தியாவில் இன்று தந்தேராஸ் பண்டிகை தினத்தில் தங்கம் விலை கிராமுக்கு 33 ரூபாய் அதிகரித்து ஷாக் கொடுத்துள்ளது.

சென்னையில் இன்று ரீடைல் சந்தை வர்த்தகத்தில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 300 ரூபாய் அதிகரித்து 56450 ரூபாயாக உள்ளது, இதுவே 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 330 ரூபாய் உயர்ந்து 61,580 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரனுக்கு 300 ரூபாய் உயர்ந்து 45,160 ரூபாயாக உள்ளது.

22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 56,450 ரூபாய், மும்பை - 56,000 ரூபாய், டெல்லி - 56,150 ரூபாய், கொல்கத்தா - 56,000 ரூபாய், பெங்களூர் - 56,000 ரூபாய், ஹைதராபாத் - 56,000 ரூபாய், கேரளா - 56,000 ரூபாய், புனே - 56,000 ரூபாய், பரோடா - 56,050 ரூபாய், அகமதாபாத் - 56,050 ரூபாய், ஜெய்ப்பூர் - 56,150 ரூபாய், லக்னோ - 56,150 ரூபாய், கோயம்புத்தூர் - 56,450 ரூபாய், மதுரை - 56,450 ரூபாய்.

24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 61,580 ரூபாய், மும்பை - 61,090 ரூபாய், டெல்லி - 61,240 ரூபாய், கொல்கத்தா - 61,090 ரூபாய், பெங்களூர் - 61,090 ரூபாய், ஹைதராபாத் - 61,090 ரூபாய், கேரளா - 61,090 ரூபாய், புனே - 61,090 ரூபாய், பரோடா - 61,140 ரூபாய், அகமதாபாத் - 61,140 ரூபாய், ஜெய்ப்பூர் - 61,240 ரூபாய், லக்னோ - 61,240 ரூபாய், கோயம்புத்தூர் - 61,580 ரூபாய், மதுரை - 61,580 ரூபாய்.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 45160 ரூபாய், மும்பை - 44800 ரூபாய், டெல்லி - 44920 ரூபாய், கொல்கத்தா - 44800 ரூபாய், பெங்களூர் - 44800 ரூபாய், ஹைதராபாத் - 44800 ரூபாய், கேரளா - 44800 ரூபாய், புனே - 44800 ரூபாய், பரோடா - 44840 ரூபாய், அகமதாபாத் - 44840 ரூபாய், ஜெய்ப்பூர் - 44920 ரூபாய், லக்னோ - 44920 ரூபாய், கோயம்புத்தூர் - 45160 ரூபாய், மதுரை - 45160 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 77000 ரூபாய், மும்பை - 74000 ரூபாய், டெல்லி - 74000 ரூபாய், கொல்கத்தா - 74000 ரூபாய், பெங்களூர் - 72000 ரூபாய், ஹைதராபாத் - 77000 ரூபாய், கேரளா - 77000 ரூபாய், புனே - 74000 ரூபாய், பரோடா - 74000 ரூபாய், அகமதாபாத் - 74000 ரூபாய், ஜெய்ப்பூர் - 74000 ரூபாய், லக்னோ - 74000 ரூபாய், கோயம்புத்தூர் - 77000 ரூபாய், மதுரை - 77000 ரூபாய்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+