தொடர் ஏறுமுகத்தில் தங்கம் விலை.. எப்போது தங்கம் வாங்கினால் லாபம் கிடைக்கும்..?

தங்கம் விலை கடந்த சில நாட்களாக கடுமையான ஏற்ற இறக்கம் எதிர்கொண்டு வரும் வேளையில் மக்கள் தங்கத்தை வாங்கலாமா வேண்டாமா என்பது தெரியாமல் குழம்பியுள்ளனர். இத்தகைய சூழ்நிலையில் தங்கம் விலையில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றமும் முக்கியமானதாக உள்ளது.

இந்த நிலையில் சர்வதேச வர்த்தக சந்தையில் தங்க விலை புதன்கிழமை 3,350 டாலரை தாண்டி மீண்டும் உயர்ந்து வருகிறது. இந்தியாவில், மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் (MCX) சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் ஆகஸ்ட் 5 ஒப்பந்தங்கள் காலை 9:20 மணியளவில் 0.43% உயர்ந்து, 98,140 ரூபாய் விலைக்கு வர்த்தகமாகி வருகிறது.

தொடர் ஏறுமுகத்தில் தங்கம் விலை.. எப்போது தங்கம் வாங்கினால் லாபம் கிடைக்கும்..?

இதன் தாக்கம் ரீடைல் சந்தையிலும் எதிரொலித்துள்ளது, இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 110 ரூபாய் அதிகரித்து 99,170 ரூபாயாக உள்ளது, ஆனால் மே மாதம் 8ஆம் தேதி இதன் விலை 9960 ரூபாய் அளவீட்டை தொட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு சவரன் தங்கம் விலை 80 ரூபாய் உயர்ந்து 72,720 ரூபாயாக உள்ளது.

தங்கம் விலை விண்ணை முட்டியிருக்கும் வேளையில் சாமானிய மக்கள் தங்கம் வாங்குவது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது, ஆனால் ETF வாயிலாக தங்கம் வாங்குவது அதிகரித்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் இந்திய ரீடைல் சந்தையில் தங்கம் விலை உயர்வுக்கு உள்நாட்டு காரணிகளின் தாக்கம் குறைவாக இருக்கவே சர்வதேச சந்தையின் தாக்கம் அதிகமாக உள்ளகு.

இதன் மூலம் இன்றைய தங்கம் விலை உயர்வுக்கு மிக முக்கியமான காரணமாக இருப்பது அமெரிக்க-சீன வர்த்தக பதற்றங்கள் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள் தான். இதுக்குறித்து முழுமையாக தெரிந்துக்கொண்டால் மட்டுமே உங்களுடைய தங்கம் மீதான முதலீட்டில் அதிகப்படியான லாபத்த ஈட்ட முடியும்.

அமெரிக்க-சீன வர்த்தக போர்: அமெரிக்காவின் புதிய வர்த்தக கட்டுப்பாடுகள் சீனாவுடனான உறவுகளை மோசமாக்கியுள்ளது. சீனா, அமெரிக்காவின் புதிய AI சிப் ஏற்றுமதி கட்டுப்பாடுகள், சிப் வடிவமைப்பு மென்பொருள் விற்பனை தடை, மற்றும் சீன மாணவர்களுக்கான விசா ரத்து ஆகியவற்றை சமீபத்திய ஜெனீவா வர்த்தக ஒப்பந்தை மீறி அமெரிக்கா செயல்படுவதாக சீனா குற்றம்சாட்டியுள்ளது. இதனால் இரு நாடுகள் மத்தியிலான மோதல் அதிகரித்துள்ளது, இந்த பதற்றமான சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீட்டை தேடி ஓட துவங்கியுள்ளனர்.

இதுக்குறித்து சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, அமெரிக்காவின் புதிய தூதர் டேவிட் பெர்டியூ-விடம் பேசுகையில், இந்த நடவடிக்கைகள் இரு நாடுகளுக்கிடையேயான உறவை மோசமாக்குவதாக குற்றம்சாட்டினார். மேலும், அமெரிக்க FBI இயக்குநர் காஷ் படேல், இரண்டு சீன குடிமக்கள் bioterror fungus-ஐ கடத்தியதாக குற்றச்சாட்டி கைது செய்யப்பட்டதாக X இல் தெரிவித்தார். இந்த சம்பவங்கள், உலகளாவிய சந்தைகளில் நிச்சயமற்ற தன்மையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. ம

தங்க விலையின் அடுத்தகட்ட உயர்வு, அமெரிக்காவின் முக்கிய பொருளாதார தரவுகள் மற்றும் பெடரல் ரிசர்வ் அதிகாரிகளின் அறிவிப்புகளை பொறுத்து அமையும் என முதலீட்டு சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் திடீரென் பெரிய அளவில் தங்கத்திற்கான டிமாண்ட் உருவாக வாய்ப்பில்லாத நிலையில் தங்கம் விலையின் போக்கை கணிக்க சர்வதேச சந்தையை தான் பார்க்க வேண்டும்.

செவ்வாய்க்கிழமை $3,392 உச்சத்திலிருந்து சற்று சரிந்தாலும், அமெரிக்க டாலரின் மதிப்பு சற்று குறைந்து, வர்த்தக பதற்றங்கள் மீண்டும் உயர்ந்ததால் தங்க விலை மீண்டு வருகிறது. இதற்கிடையில் வெள்ளிக்கிழமை டொனால்டு டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையேயான பேச்சுவார்த்தை நடக்க உள்ளது, இதையும் முதலீட்டு சந்தை உன்னிப்பாக கவனிக்கின்றன. இவர்களின் சந்திப்பு பின்பு வர்த்தக சந்தையிலும், முதலீட்டு சந்தையிலும் பெரும் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+