தங்கம் எப்போதும் பாதுகாப்பான முதலீடு என்பதை ஒவ்வொரு முறையும் நிருபித்து வரும் வேளையில் ஐரோப்பா, அமெரிக்கா, சீனா, பிரிட்டன் பொருளாதாரங்கள் அதிகளவிலான தடுமாற்றத்தில் இருக்கும் போதும் தங்கம் முதலீட்டாளர்களுக்கு மட்டும் அல்லாமல் அரசுகளுக்கே பாதுகாப்பான அவென்யூவாக மாறியுள்ளது.
கடந்த 2 நாட்களுக்களாக தங்கம் விலை 10 வார சரிவில் இருந்த நிலையில் இன்று தடாலடியாக உயர்ந்துள்ளது. ஒருபக்கம் டாலர் மதிப்பில் ஏற்பட்ட சரிவை சரி செய்ய அதிகப்படியான டாலர் முதலீடுகள் தங்கம் மீது திரும்பியுள்ளது.

இதேபோல் அமெரிக்காவின் கடன் வரம்பு உயர்வு குறித்த முடிவுகள் பத்திர முதலீட்டு மீதான லாபத்தை குறைத்துள்ளது. இதன் காரணமாகவும் செவ்வாய்க்கிழமை அமெரிக்க வர்த்தக சந்தை திறந்ததில் இருந்து தங்கம் விலை உயர துவங்கியுள்ளது.
இன்று காலை ஆசிய சந்தை வர்த்தக நேரத்தில் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1964 டாலர் வரையில் உயர்ந்து காணப்பட்டது. நேற்று அமெரிக்க வர்த்தக சந்தை துவக்கத்தில் தடாலடியாக உயர்ந்து ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1944 டாலரில் இருந்து வர்த்தக முடிவில் 1959 டாலர் வரையில் உயர்ந்தது.
இன்று காலை எம்சிஎக்ஸ் சந்தையில் பியூச்சர் ஆர்டர்களில் காலை வர்த்தகத்தில் மந்தமான வர்த்தகத்தை பதிவு செய்த நிலையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.01 சதவீதம் சரிந்து 59,991.00 ரூபாயாக உள்ளது. இதேபோல் வெள்ளி விலை 0.24 சதவீதம் உயர்ந்து 71,211 ரூபாயாக உள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் தங்கம் விலை இந்திய அளவில் சராசரியாக, 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை இன்று தடாலடியாக 400 ரூபாய் உயர்ந்து 55850 ரூபாயாக உள்ளது. இதுவே 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை 440 ரூபாய் உயர்ந்து 60,930 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.
மேலும் ரீடைல் சந்தையில் இன்று தங்கம் விலை இந்திய அளவில் சராசரியாக ஆபரண தங்கம் விலை ஒரு சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து 44,680 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை சராசரியாக இந்திய அளவில் 4200 ரூபாய் குறைந்து 76,800 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 56,450 ரூபாய், மும்பை - 55,850 ரூபாய், டெல்லி - 56,000 ரூபாய், கொல்கத்தா - 55,850 ரூபாய், பெங்களூர் - 55,900 ரூபாய், ஹைதராபாத் - 55,850 ரூபாய், கேரளா - 55,850 ரூபாய், புனே - 55,850 ரூபாய், பரோடா - 55,900 ரூபாய், அகமதாபாத் - 55,900 ரூபாய், ஜெய்ப்பூர் - 56,000 ரூபாய், லக்னோ - 56,000 ரூபாய், கோயம்புத்தூர் - 56,450 ரூபாய், மதுரை - 56,450 ரூபாய்.
24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 61,580 ரூபாய், மும்பை - 60,930 ரூபாய், டெல்லி - 61,080 ரூபாய், கொல்கத்தா - 60,930 ரூபாய், பெங்களூர் - 60,980 ரூபாய், ஹைதராபாத் - 60,930 ரூபாய், கேரளா - 60,930 ரூபாய், புனே - 60,930 ரூபாய், பரோடா - 60,980 ரூபாய், அகமதாபாத் - 60,980 ரூபாய், ஜெய்ப்பூர் - 61,080 ரூபாய், லக்னோ - 61,080 ரூபாய், கோயம்புத்தூர் - 61,580 ரூபாய், மதுரை - 61,580 ரூபாய்.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 45160 ரூபாய், மும்பை - 44680 ரூபாய், டெல்லி - 44800 ரூபாய், கொல்கத்தா - 44680 ரூபாய், பெங்களூர் - 44720 ரூபாய், ஹைதராபாத் - 44680 ரூபாய், கேரளா - 44680 ரூபாய், புனே - 44680 ரூபாய், பரோடா - 44720 ரூபாய், அகமதாபாத் - 44720 ரூபாய், ஜெய்ப்பூர் - 44800 ரூபாய், லக்னோ - 44800 ரூபாய், கோயம்புத்தூர் - 45160 ரூபாய், மதுரை - 45160 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 76800 ரூபாய், மும்பை - 76800 ரூபாய், டெல்லி - 72800 ரூபாய், கொல்கத்தா - 72800 ரூபாய், பெங்களூர் - 72000 ரூபாய், ஹைதராபாத் - 76800 ரூபாய், கேரளா - 76800 ரூபாய், புனே - 76800 ரூபாய், பரோடா - 72800 ரூபாய், அகமதாபாத் - 72800 ரூபாய், ஜெய்ப்பூர் - 72800 ரூபாய், லக்னோ - 72800 ரூபாய், கோயம்புத்தூர் - 76800 ரூபாய், மதுரை - 76800 ரூபாய்.
More From GoodReturns

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

தங்கத்தை கைவிடுகிறார்களா இந்தியர்கள்? பிப்ரவரியில் நடந்த தலைகீழ் மாற்றம்!!

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு!

சூப்பர்பவர் ஆக மாறிய தங்கம்.. ஈரான் போருக்கு மத்தியில் பூகம்பம்..!!

மதுரை மக்களே.. தங்கம் விலை குறைந்தது.. உடனே நகை கடைக்கு கிளம்புங்க..!!

தங்கம் இந்த லெவலுக்கு வந்தால் மட்டும் வாங்குங்க.. முதலீட்டாளர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் முக்கிய அட்வைஸ்..!

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

இன்று தங்கம், வெள்ளி விலை என்ன ஆனது? இனி வரும் நாட்களில் விலை ஏறுமா இறங்குமா?

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று அதிரடி சரிவு! மார்ச் 6 நிலவரம், முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை



Click it and Unblock the Notifications