ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்.. 24 மணி நேரத்தில் 3ஆவது முறையாக உயர்ந்த தங்கம் விலை..!!

ஜூன் 15ஆம் தேதியில் இருந்து தொடர்ச்சியாக விலை குறைந்து வந்த தங்கம் கடந்த 2 நாட்களாக மீண்டும் ஏறுமுகத்தை நோக்கி திரும்பி இருப்பது மக்களுக்கு அதிர்ச்சியை தந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் ஜூன் மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏறுவதும் இறங்குவதுமாக தான் இருந்தது. குறிப்பாக ஜூன் 25ஆம் தேதி அன்று ஒரு கிராம் ஆபரணதங்கம் 13,140 ரூபாய் என 6 மாதங்களில் இல்லாத விலை வீழ்ச்சியை சந்தித்தது. ஒரு சவரன் 1.05 லட்சமாக குறைந்து மக்களுக்கு மகிழ்ச்சியை தந்தது. இனி தங்கம் விலை மேலும் குறையும் ஒரு லட்சம் ரூபாய்க்கும் கீழ் ஒரு சவரன் தங்கம் விலை சரிய போகிறது என மக்கள் நினைத்தனர். ஆனால் திடீரென தங்கம் விலை கடந்த 2 நாட்களாக விலை உயர தொடங்கியுள்ளது.

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்.. 24 மணி நேரத்தில் 3ஆவது முறையாக உயர்ந்த தங்கம் விலை..!!

தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் காலை, மாலை என இரண்டு வேளையும் தங்கம் விலை சரிந்தது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு 160 ரூபாய் உயர்வு கண்டது. இந்த சூழலில் வார இறுதிநாளான சனிக்கிழமையான இன்றும் தங்கம் விலை உயர்வு கண்டுள்ளது.

இன்றைய தினம் சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராமுக்கு 70 ரூபாய் உயர்வு கண்டு 13,370 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதே போல ஒரு சவரன் 560 ரூபாய் விலை உயர்வு 1,06,960 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தமிழ்நாட்டில் நேற்று காலை முதல் தற்போது வரையிலான 24 மணி நேரத்தில் 3 முறை தங்கம் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிராமுக்கு 230 ரூபாயும், ஒரு சவரனுக்கு 1840 ரூபாயும் விலை உயர்ந்துள்ளது.

Also Read

24 கேரட் தங்கத்தை பொறுத்தவரை கிராமுக்கு 77 ரூபாய் விலை உயர்ந்து 14,586 ரூபாய்க்கும் 10 கிராம் 770 ரூபாஉ விலை உயர்ந்து 145,860 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 கேரட் தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராம் 11,145 ரூபாய்க்கும் ஒரு சவரன் 89,160 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Recommended For You

வெள்ளி விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 245 ரூபாக்கும் ஒரு கிலோ வெள்ளி 2.45 லட்சம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. திடீரென ஈரானும் அமெரிக்காவும் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளதால் உலக அளவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வரும் வாரத்தில் இந்த பதற்றம் நீடிக்கிறதா அல்லது தணிகிறதா என்பதை பொறுத்து தங்கம் விலையில் மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.

இருந்தாலும் 22 கேரட் ஆபரண தங்கத்தை பொறுத்தவரை ஜனவரி மாதம் ஒரு சவரன் 1.33 லட்சத்தை தொட்டது. அதில் இருந்து சுமார் 27,000 ரூபாய் வரை விலை சரிந்துள்ளது. அதே போல வெள்ளி ஒரு கிலோ 4.25 லட்சமாக இருந்து தற்போது 2.45 லட்சமாக குறைந்துள்ளது. தங்கம், வெள்ளி ஆகிய இரண்டுமே வரலாற்று உச்சபட்ச விலையில் இருந்து பெரிய அளவில் சரிவில் தான் உள்ளது என்பதால் தங்கம் வாங்குவது இன்றும் ஒரு சிறந்த வாய்ப்பு தான் நிபுணர்கள் கூறுகின்றனர்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+