இந்தியாவை சேர்ந்த கோடிக்கணக்கான மக்கள் நாள்தோறும் செய்தியில் எதைக் கேட்கிறார்களோ இல்லையோ நிச்சயம் இன்றைய தினம் தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறதா அல்லது குறைந்திருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வார்கள். ஏனெனில் தங்கம் இந்தியர்களின் அன்றாட வாழ்வில் ஒருங்கிணைந்த ஒரு உலோகம். தங்க நகைகள் நம் வாழ்க்கையின் பல்வேறு நிகழ்வுகளிலும் முக்கிய அங்கம் வகிக்கின்றன.
கடந்த ஓராண்டு காலமாக தங்கம் விலைக்கு தொடர்ந்து ஏறுமுகம் தான். அதுவும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரையிலான காலகட்டம் தங்கத்திற்கு மிக முக்கியமான ஒரு காலகட்டம் . ஏனெனில் இந்த குறிப்பிட்ட ஆறு மாத அளவில் தான் தங்கத்தின் விலை பல மடங்கு வேகமாக உயர்வு கண்டது. கடந்த ஆண்டு டிசம்பரில் சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 1 லட்சம் ரூபாய் என்று மைல்கல்லை கடந்தது.

இதுவே கடந்த ஜனவரி மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 1.33 லட்சம் ரூபாய் என வரலாற்று உச்சத்தை தொட்டது. தற்போது விலை குறைந்திருக்கிறது. தங்கம் விலை 1.19 லட்ச ரூபாய் என்ற அளவில் விற்பனையாகி வருகிறது. காலத்திலேயே தங்கம் விலை இப்படி பல மடங்கு உயர்வு கண்டது யாருக்கு லாபமோ இல்லையோ வங்கிகளுக்கு பெரிய அதிர்ஷ்டத்தை தேடி தந்திருக்கிறது.
இந்தியாவில் சிறிய அளவிலான தனியார் வங்கிகள் மற்றும் பொதுத்துறை வங்கிகளுக்கு மிகப்பெரிய ஜாக்பாட்டே கிடைத்து இருக்கிறது. தங்கம் விலை உயர்வால் அதிகமான மக்கள் தங்க நகைகளை அடகு வைத்து கடன் வாங்குவது அதிகரித்துள்ளது. இது வங்கிகளின் கடன் போர்ட்போலியோவை உயர்த்தியுள்ளது. இவை பெரும்பாலும் பாதுகாப்பான கடன்களாக தங்க நகை கடன்கள் என்பது தான் சிறப்பு.

அதாவது தனிநபர் கடன் போன்ற மற்ற கடன்களை விட வங்கிகளுக்கு தங்க நகை கடன்கள் பாதுகாப்பானவை. அதாவது கடன் பணம் வரவில்லை என்றால் கூட கையில் இருக்கும் தங்கத்தை ஏலம் விடுத்து கடனை மீட்டு கொள்ள முடியும். இது தவிர வங்கிகளிடம் ஏற்கனவே அடமானமாக வைத்த தங்கத்தின் மதிப்பும் உயர்ந்துள்ளது.
உதாரணமாக கடந்த ஆண்டில் ஒரு நபர் ஒரு சவரன் தங்கத்தை 50000 ரூபாய்க்கு அடகு வைத்திருப்பார், தற்போது அந்த தங்கத்தின் மதிப்பு 1 லட்சம் ரூபாய். இது வங்கிகளின் பேலன்ஸ் புக்கை இன்னும் வலுவானதாக மாற்றியுள்ளது. அதாவது வங்கிகள் வசம் இருக்கும் தங்கத்தின் மதிப்பை உயர்த்த செய்துள்ளது.
எனவே வங்கிகளுக்கு கடன் வழங்குவதற்கான ரிஸ்க் குறைந்திருக்கிறது. ஏராளமானவர்கள் தங்க நகைகளை அடகு வைத்து கடன் வாங்குவதால் தங்க கடன் பிரிவு 128 சதவீதம் என்ற வேகமான வளர்ச்சி அடைந்திருக்கிறது. இது வங்கிகளின் ஒட்டு மொத்த செயல்பாடுகளும் லாபமும் உயர காரணமாகியுள்ளது. தங்க நகைக்கடன் அதிகரித்ததன் மூலம் பெரிய அளவில் லாபம் அடைந்தது தென்னிந்தியாவை சேர்ந்த வங்கிகள் தான். சிஎஸ்பி வங்கியின் மொத்த கடனில் தங்க கடனின் பங்கு 51%, கரூர் வைசியா வங்கிக்கு 29 %, சிட்டி யூனியன் வங்கி 28%, சவுத் இந்தியன் வங்கி 22.5% மற்றும் இந்தியன் வங்கி, கனரா வங்கி போன்ற பொதுத்துறை வங்கிகளும் தங்க கடன் பிரிவில் பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளன.
தங்கம் விலை ஏறுமுகமாக இருப்பதால் தங்க நகை கடன்கள் வாரா கடன்களாக மாறும் வாய்ப்பு மிகவும் குறைவு. தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவது தங்கத்தை அதிக அளவில் அடமானமாக பெற்றுள்ள சிறிய மற்றும் பொதுத்துறை வங்கிகளுக்கு பெரிய அதிர்ஷ்டமாக அமைந்திருக்கிறது. இது இந்த வங்கிகளின் லாபத்தையும் பங்குச்சந்தையில் இந்த வங்கி பங்குகளின் மதிப்பையும் உயர செய்திருக்கிறது.
More From GoodReturns

ஈரான் போர் குறித்த டிரம்பின் ஒற்றை அறிவிப்பு..!! தாறுமாறாக சரிந்த தங்கம் விலை..!!

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?

மதுரையில் இன்று தங்கம் விலை சரிவு: இனி வரும் நாட்களிலும் விலை குறையுமா?

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

வீட்டு கடன், வாகன கடன் வட்டி குறையுமா? மும்பையில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தீவிர ஆலோசனை..!!

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!



Click it and Unblock the Notifications