தங்கம் விலை 2 மாத உயர்வை எட்டிய பின் சிறு தடுமாற்றம்.. எப்போது தங்க நகை வாங்கலாம்..?!

இஸ்ரேல் - ஹமாஸ் போருக்கு மத்தியில் அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் 2023 இன் எஞ்சிய காலத்தில் வட்டி விகிதத்தின் கண்ணோட்டம் குறித்து பேசப்படும் வேளையில் தங்கம் விலையில் இன்று மந்த நிலை உருவாகியுள்ளது.

தங்கம் விலை 2 மாத உயர்வை எட்டிய பின் சிறு தடுமாற்றம்.. எப்போது தங்க நகை வாங்கலாம்..?!

இஸ்ரேல் - ஹமாஸ் போருக்கு மத்தியில் தங்கம் விலை 2 மாத உயர்வை எட்டிய பின்பு இன்று சிறு தடுமாற்றம் ஏற்பட்டு உள்ளது. இது நீண்ட காலம் நிலைக்குமா என்பது தெரியாத நிலையில் முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீட்டை வேகமாக இடம்மாற்றம் செய்ய தயாராகியுள்ளனர்.

இன்று சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை தொடர்ந்து 1950 டாலருக்கு மேல் வர்த்தகம் செய்யப்பட்டாலும் 1954 டாலர் விலையை தாண்டி உயரவில்லை என்பது முக்கியமான விஷயமாகவே உள்ளது. இந்த மந்த நிலைக்கு முக்கிய காரணம் பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் வட்டி விகித உயர்வு குறித்த பேச்சு தான்.

மேலும் இன்று எம்சிஎஸ் சந்தையில் டிசம்பர் மாதம் முடியும் பியூச்சர்ஸ் ஆர்டரில் காலையில் இருந்து கணிசமான வர்த்தக சரிவை பதிவு செய்துள்ளது. இதன் மூலம் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.20 சதவீதம் சரிந்து 59,951.00 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் 1 கிலோ வெள்ளி விலை 0.21 சதவீதம் சரிந்து 71,747 ரூபாயாக உள்ளது.

சென்னை ரீடைல் சந்தையில் இன்று 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 200 ரூபாய் உயர்ந்து 55,850 ரூபாயாக உள்ளது, இதுவே 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 220 ரூபாய் உயர்ந்து 60,930 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 44,680 ரூபாயாக உயர்ந்து உள்ளது.

மேலும் உள்நாட்டு ரீடைல் சந்தையில் 1 கிலோ வெள்ளி விலை 500 ரூபாய் குறைந்து 77,500 ரூபாயாக உள்ளது. இதோடு பிளாட்டினம் விலை 10 கிராமுக்கு 90 ரூபாய் குறைந்து 23,720 ரூபாயாக உள்ளது.

22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 55,850 ரூபாய், மும்பை - 55,700 ரூபாய், டெல்லி - 55,850 ரூபாய், கொல்கத்தா - 55,700 ரூபாய், பெங்களூர் - 55,700 ரூபாய், ஹைதராபாத் - 55,700 ரூபாய், கேரளா - 55,700 ரூபாய், புனே - 55,700 ரூபாய், பரோடா - 55,750 ரூபாய், அகமதாபாத் - 55,750 ரூபாய், ஜெய்ப்பூர் - 55,850 ரூபாய், லக்னோ - 55,850 ரூபாய், கோயம்புத்தூர் - 55,850 ரூபாய், மதுரை - 55,850 ரூபாய்.

தங்கம் விலை 2 மாத உயர்வை எட்டிய பின் சிறு தடுமாற்றம்.. எப்போது தங்க நகை வாங்கலாம்..?!

24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 60,930 ரூபாய், மும்பை - 60,760 ரூபாய், டெல்லி - 60,910 ரூபாய், கொல்கத்தா - 60,760 ரூபாய், பெங்களூர் - 60,760 ரூபாய், ஹைதராபாத் - 60,760 ரூபாய், கேரளா - 60,760 ரூபாய், புனே - 60,760 ரூபாய், பரோடா - 60,810 ரூபாய், அகமதாபாத் - 60,810 ரூபாய், ஜெய்ப்பூர் - 60,910 ரூபாய், லக்னோ - 60,910 ரூபாய், கோயம்புத்தூர் - 60,930 ரூபாய், மதுரை - 60,930 ரூபாய்.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 44680 ரூபாய், மும்பை - 44560 ரூபாய், டெல்லி - 44680 ரூபாய், கொல்கத்தா - 44560 ரூபாய், பெங்களூர் - 44560 ரூபாய், ஹைதராபாத் - 44560 ரூபாய், கேரளா - 44560 ரூபாய், புனே - 44560 ரூபாய், பரோடா - 44600 ரூபாய், அகமதாபாத் - 44600 ரூபாய், ஜெய்ப்பூர் - 44680 ரூபாய், லக்னோ - 44680 ரூபாய், கோயம்புத்தூர் - 44680 ரூபாய், மதுரை - 44680 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 77500 ரூபாய், மும்பை - 74100 ரூபாய், டெல்லி - 74100 ரூபாய், கொல்கத்தா - 74100 ரூபாய், பெங்களூர் - 73500 ரூபாய், ஹைதராபாத் - 77500 ரூபாய், கேரளா - 77500 ரூபாய், புனே - 74100 ரூபாய், பரோடா - 74100 ரூபாய், அகமதாபாத் - 74100 ரூபாய், ஜெய்ப்பூர் - 74100 ரூபாய், லக்னோ - 74100 ரூபாய், கோயம்புத்தூர் - 77500 ரூபாய், மதுரை - 77500 ரூபாய்.

தங்கம் விலை மிகவும் முக்கியமான காலக்கட்டத்தில் இருக்கும் காரணத்தால் தங்கத்தை நீண்ட சேமிப்புக்காக வாங்குபவர்கள் காத்திருந்து விலை குறையும் போது வாங்குவது சிறந்த யோசனையாக இருக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+