தங்க நகைகளை தலை முழுகும் இந்தியர்கள் !! டிரெண்டையே மாற்றிய இளசுகள்!! எல்லாம் நன்மைக்கே!!

2025 ஆம் ஆண்டில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 1 லட்சம் ரூபாயை தாண்டி விட்டது. 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் தங்கத்தின் விலை இந்த அளவுக்கு உயரும் என யாருமே எதிர்பார்க்கவில்லை . ஆனால் அது நடந்து விட்டது. பல்வேறு சர்வதேச காரணிகள் இந்த ஆண்டு தங்கத்தின் விலை உயர்வில் முக்கிய பங்காற்றி இருக்கின்றன.

இந்தியாவை சேர்ந்த பெரும்பாலான மக்கள் தங்கம் என்றாலே தங்கத்தை நகைகளாக தான் வாங்குவார்கள். அந்த வகையில் பார்க்கும்போது ஒரு சவரன் தங்க நகை வாங்குவதற்கு இன்றைய தேதியில் 1, 20,000 ரூபாய் தேவை. பல்வேறு மிடில் கிளாஸ் குடும்பங்களின் இரண்டு அல்லது மூன்று மாத வருமானம் இது. இருந்தாலும் தங்கம் விலை உயரக்கூடிய ஒரு பொருள் , விலை உயர்ந்துவிட்டது என்பதற்காக தங்கத்தை வாங்காமலும் இருந்து விட முடியாது.

தங்க நகைகளை தலை முழுகும் இந்தியர்கள் !! டிரெண்டையே மாற்றிய இளசுகள்!! எல்லாம் நன்மைக்கே!!

இந்திய மக்கள் 2025ஆம் ஆண்டில் தங்கம் வாங்குவதில் ஒரு புதிய டிரெண்டையை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த ஆண்டு இந்தியர்கள் மத்தியில் தங்க நகைகளுக்கு மாற்றாக தங்கள் கட்டிகள் மற்றும் நாணயங்களை வாங்கும் போக்கு அதிகரித்து இருக்கிறதாம். தங்கத்தை நாம் நாணயமாகவோ அல்லது நகையாகவோ வாங்கும் போது செய்கூலி சேதாரம் செலுத்த வேண்டிய தேவையில்லை.

நகையாக வாங்கினால் தங்கத்தின் விலையில் 3 சதவீத ஜிஎஸ்டி மற்றும் 15 சதவீத செய்கூலி செய்தாரம் என கூடுதலாக ஒவ்வொரு சவரனுக்கும் நாம் 20000 ரூபாயை செலுத்த வேண்டி இருக்கிறது . அதுவே நாணயங்கள் மற்றும் கட்டிகளாக வாங்கும் போது இந்த செலவு மிக சொற்பம் தான். இதுதான் இந்தியர்கள் தங்க நகைகளை தலைமுழுகி தங்க நாணயங்களுக்கும் கட்டிகளுக்கும் வரவேற்பு வழங்குவதற்கு காரணம்.

தங்க நகைகளை தலை முழுகும் இந்தியர்கள் !! டிரெண்டையே மாற்றிய இளசுகள்!! எல்லாம் நன்மைக்கே!!

இந்த ஆண்டில் மட்டும் ஒரு சவரன் தங்கத்தின் விலை 40 ஆயிரம் ரூபாய்க்கு மேல் அதிகரித்து இருக்கிறது . எனவே பொதுமக்கள் நகையாக வாங்கி செய்கூலி சேதாரத்தில் பணத்தை வீண் பண்ணுவதை விட இப்படி வாங்கிக் கொள்ளலாமே என முடிவு செய்து விட்டனர் . பி.என். காட்கில் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் தலைவரான சௌரப் காட்கில் இந்த ஆண்டு தங்களுடைய நகைக்கடைகளில் தங்க நகைகளை விட தங்க நாணயங்கள் விற்பனை அதிகமாக இருந்தது என கூறுகிறார்.

அது மட்டும் இன்றி பொதுமக்கள் முன்பெல்லாம் பிடித்த டிசைன்களில் நகை வாங்கியிருந்தனர் ஆனால் அந்த போக்கு இப்போது மாறிவிட்டது எனக் கூறுகிறார் . குறைந்த கேரட் கொண்ட தங்க நகைகளில் மட்டுமே சிறந்த டிசைன்களை எதிர்பார்க்கின்றனர், அதிக கேரட் கொண்ட தங்க நகைகளின் அவற்றின் எடை விலை ஆகியவற்றை தான் பார்க்கிறார்கள் என்கிறார்கள்.

தற்போது இளைஞர்கள் மத்தியில் லைட் வெயிட் மற்றும் குறைந்த கேரட் கொண்ட நகைகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக கூறுகிறார். இந்தியாவில் 2025 ஆம் ஆண்டின் முதல் 9 மாதத்தில் தங்கத்திற்கான டிமாண்ட் 14 சதவீதம் குறைந்தது அதேபோல தங்க நகையை வாங்கக்கூடிய போக்கும் 26 சதவீதம் சரிவடைந்தது .ஆனால் தங்கத்தை அடிப்படையாகக் கொண்ட முதலீடுகளின் மதிப்பு 13% அதிகரித்து இருக்கிறது என்கிறது தங்க கவுன்சில். எனவே பொதுமக்கள் தங்கத்தை ஒரு முதலீடாக தற்போது பார்க்கத் தொடங்கி இருக்கிறார்கள் தங்கம் என்றாலே நகை தான் என்ற மனநிலையையும் மாற்றி இருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+