தங்கம், தங்கம், தங்கம் எங்கு திரும்பினாலும் மக்கள் இதை பற்றி தான் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். கிராமுக்கு 10000 ரூபாய் தொட்டாலும் வாங்க தயாராக இருக்கும் மக்களுக்கு கடந்த 4 வாரங்களில் ஏற்பட்ட சரிவு பெரும் நம்மதியை கொடுத்தாலும், இனி வரும் காலக்கட்டத்தில் அப்படியிருக்கப்போவது இல்லை என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
இதனால், இனி வரும் நாட்களில் தங்கம் விலை மீண்டும் 1 லட்ச அளவீட்டை தொடும் என்பது தான் நிபுணர்களின் முக்கிய கணிப்பாக உள்ளது. ஆனாலும், தங்கம் விலை ஏன், எப்படி விலை உயர்கிறது..? என்பதை தெரிந்துக்கொண்டால் மட்டுமே தங்கத்தில் எப்போது முதலீடு செய்ய வேண்டும் என்பது சாமானிய மக்களுக்கு புரியும்.

ஜூலை 11, வெள்ளிக்கிழமையன்று தங்க விலைகள் 2வது நாளாக தொடர்ந்து உயர்ந்துள்ளன. உலகளாவிய சந்தையில், ஸ்பாட் தங்கம் 0.35% உயர்ந்து ஒரு அவுன்ஸுக்கு 3,342.67 அமெரிக்க டாலர்களை எட்டியது, மேலும் அமெரிக்க கோல்டு பியூச்சர்ஸ் ஒப்பந்தங்கள் 0.6% உயர்ந்து 3,345.10 டாலர்களை அடைந்தன.
இந்திய ரீடைல் சந்தையில் இன்று 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 550 ரூபாய் உயர்ந்து 90,750 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 600 ரூபாய் உயர்ந்து 99,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. நேற்று கிராமுக்கு 22 ரூபாய் வரையில் உயர்ந்த நிலையில இருந்து 60 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 480 ரூபாய் உயர்ந்து 79,200 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை கிலோவுக்கே வெறும் 100 ரூபாய் உயர்ந்து 1,20,100 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 210 ரூபாய் உயர்ந்து 37,480 ரூபாயாக உள்ளது. சரி தங்கம் விலை ஏன் தொடர்ந்து உயரப்போகிறது என்பது தான் இப்போதைய முக்கியமான கேள்வியாக உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி அறிவிப்புகள் மற்றும் அமெரிக்க டாலர் தொடர்ந்து வலிமை அடைந்து வருவது தங்கத்திற்கு மிகவும் கெட்ட செய்தாக பார்க்கப்படுகிறது. டொனால்ட் டிரம்ப் கடந்த ஒரு வாரமாக தினமும் உலகின் ஒவ்வொரு பகுதிகளாக குறிவைத்து வரி விதிப்பு குறித்து அந்நாட்டின் பிரதமர் மற்றும் அதிபருக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று ஆகஸ்ட் 1, 2025 முதல் கனடா நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 35% வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார். மேலும், பிற நாடுகளுக்கு குறைந்தப்பட்சம் 15-20% முதல் வரிகளை விதிக்கப்போவதாகவும் அவர் சிக்னல் கொடுத்தார்.
இந்த அறிவிப்புகள், உலகளாவிய வர்த்தகத்தையும், விநியோகச் சங்கிலியை பாதித்துள்ளது. இந்த வரிகளை தாக்கத்தை குறைக்க உலக நாடுகள் இப்போதே அதிகப்படியான பொருட்களை வாங்கி வருகிறது, இதேபோல் அமெரிக்காவும் பிற நாடுகளில் இருந்து பொருட்களை வாங்க துவங்கியுள்ளது. இதனால் டாலர் நாணயத்திற்கான டிமாண்ட் சந்தையில் அதிகரித்து டாலர் மதிப்பு உயர்ந்துள்ளது. இவை அனைத்திற்கும் காரணம் டிரம்ப் ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு பின்பு கால அவகாசம் கொடுக்கப்படாது என திட்டவட்டமாக தெரிவித்தது தான்.
இந்த பதற்றத்திற்கு மத்தியில் முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்ற முடிவுடன் தங்கத்தை நோக்கி திருப்பி வருகின்றனர். ஏற்கனவே உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்க தயாராகிக்கொண்டு இருக்கும் வேளையில் தற்போது தனியார் முதலீட்டாளர்களும் தங்கத்தின் பக்கம் திரும்பிய காரணத்தால் தங்கம் விலை அடுத்த சில வாரங்களுக்கு உயரும். இதேபோல் டிரம்ப் சொன்னப்படியே ஆகஸ்ட் 1 ஆம் தேதி தாண்டி வரி விதிப்பை ஒத்திவைக்கப்பட்டால் தங்கம் வேகமாக உயரும் என்பது தான் சந்தை நிபுணர்களின் கணிப்பாக உள்ளது.
இதேவேளையில் இந்த வரி விதிப்பால் அமெரிக்காவில் விற்கப்படும் பொருட்களின் விலையும் உயர்ந்து, பணவீக்கம் பெரும் பிரச்சனையாக மாறும் சூழ்நிலை இருக்கும் காரணத்தால் அந்நாட்டின் பென்ச்மார்க் வட்டி விகிதத்தில் மாற்றம் உருவாகும் சூழ்நிலை உள்ளது. இது அனைத்துமே தங்கம் விலை உயர்வுக்கு முக்கியமான காரணமாக அமையலாம்.

இந்த நிலையில் இந்திய புல்லியன் மற்றும் நகை வியாபாரிகள் சங்கத்தின் துணைத் தலைவர் அக்ஷா காம்போஜ் தங்கம் விலை உயர்வு குறித்து கூறுகையில், "அமெரிக்க அரசின் வரி அச்சம் மற்றும் கொள்கை மாற்றங்கள் காரணமாக, முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சொத்துகளை நோக்கி செல்ல துவங்கியுள்ளனர். ஆனால், வலுவான டாலர், தங்க விலையின் உயர்வை சர்வதேச சந்தையில் தக்க வைத்து வருகிறது" என்று தெரிவித்தார். இந்த சூழல், உலகளாவிய பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளது.
மேலும் டாலர் மதிப்பு உயர்வு சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்தினாலும், தங்கம் வாங்கும் பிற நாணயங்களை கொண்ட நாடுகளுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
More From GoodReturns

உச்சத்தில் இருந்து ரூ.18,000 வீழ்ச்சி கண்ட தங்கம்! இதுவாங்க சரியான நேரமா?

இந்தியாவில் இன்று தங்கம், வெள்ளி விலை உயர்ந்ததா? குறைந்ததா?: லைவ் அப்டேட்ஸ்

சர்ரென சரிந்த தங்கம், வெள்ளி விலை..!! ரூட்டு மாறுது.. இது தான் நல்ல சான்ஸ் மக்களே!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு!

மதுரை மக்களே.. தங்கம் விலை குறைந்தது.. உடனே நகை கடைக்கு கிளம்புங்க..!!

தங்க குழந்தையாக மாறிய சஞ்சு சாம்சன் – இது தான் 'கன்வெக்ஸ்' வெற்றியா? காத்திருந்து கிடைத்த பெரும் லாபம்!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?



Click it and Unblock the Notifications