சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை 2ஆவது நாளாக உயர்ந்து சாமானிய மக்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. அட்சய திருதியை பண்டிகை நெருங்கும் வேளையில் தங்கம் விலை உயர்வதால் நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
ஈரான் போர் தொடங்கியது முதல் தொடர் சரிவிலேயே இருந்து வந்த தங்கம் விலை மீண்டும் ஏறு முகத்தை நோக்கி திரும்பி இருக்கிறது. சென்னையில் நேற்று , இன்று என தொடர்ந்து இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை உயர்வு தந்திருக்கிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் திங்கட்கிழமை அன்று ஒரு கிராமுக்கு 40 ரூபாய் விலை சரிவடைந்து 14, 060 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. செவ்வாய்க்கிழமை ஆன நேற்று ஒரு கிராமுக்கு 160 ரூபாய் விலை உயர்ந்து 14,220 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய தினம் தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தங்கம் விலை தடாலடியாக உயர்ந்திருக்கிறது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் 100 ரூபாய் விலை உயர்ந்து 14,320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே வேளையில் நேற்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 1,13,760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது அது இன்று 800 ரூபாய் விலை உயர்ந்து 1,14,560 ரூபாயாக உயர்வு கண்டிருக்கிறது.
சென்னையில் இந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 360 ரூபாயும் ஒரு சவரனுக்கு 2,880 ரூபாயும் விலை உயர்ந்திருக்கிறது. 24 கேரட் சுத்த தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராமுக்கு 109 ரூபாய் விலை உயர்ந்து 15,622 ரூபாய்க்கும் ஒரு சவரன் 872 ரூபாய் விலை உயர்வு கண்டு 1,24,974 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
18 கேரட் தங்கத்தை பொறுத்த வரை ஒரு கிராமுக்கு 75 ரூபாய் விலை உயர்ந்து 11,940 ரூபாய்க்கும் ஒரு சவரன் 600 ரூபாய் விலை உயர்வு கண்டு 95,520 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் இன்று அதிரடியாக உயர்ந்திருக்கிறது. நேற்று ஒரு கிராம் வெள்ளி 265 ரூபாய்க்கு விற்பனையானது அதுவே இன்று கிராமுக்கு பத்து ரூபாய் கூடி 275 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று இன்று என இரண்டு நாட்களில் மட்டும் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 15 ரூபாயும் ஒரு கிலோவுக்கு 15,000 ரூபாயும் விலை கூடி இருக்கிறது.
ஈரான் போர் தொடர்பான இரண்டாம் கட்ட அமைதி பேச்சு வார்த்தை நடைபெற இருப்பதும், இருதரப்பும் சமாதானத்தை நோக்கி செல்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்து இருப்பதுமே தங்கம் வெள்ளி விலை உயர்வதற்கு காரணமாக இருக்கிறது. ஏனெனில் இந்த அறிவிப்புகள் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் சற்றே சரிவை சந்தித்திருக்கின்றன இதன் காரணமாக தங்கம், வெள்ளி விலைகள் உலக சந்தையிலும் இந்திய சந்தையிலும் உயர தொடங்கி இருக்கின்றன.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications