இந்தியாவில் பண்டிகை காலம் மற்றும் உலக நாடுகளில் பொருளதார நெருக்கடிகளுக்கு மத்தியில் கடந்த வாரம் முழுவதும் தடுமாறி வந்த தங்கம் இந்த வாரம் முதல் நாளே அதிரடியாய் உயர்ந்துள்ளது.
சென்னை ரீடைல் சந்தையில் தங்கம் விலை சனிக்கிழமை வர்த்தகத்தில் ஒரு கிராம் 22 கேரட் விலை 10640 ரூபாயாக இருந்த நிலையில் திங்கட்கிழமை காலை வர்த்தகத்தில் 10700 ரூபாய் அளவீட்டை தொட்டது, மதிய வர்த்தகத்தில் 10770 ரூபாய் அளவீட்டை தொட்டு வரலாற்று உச்சத்தை எட்டி தமிநாட்டு மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.

இதேவேளையில் எம்சிஎக்ஸ் சந்தையில் டிசம்பர் மாதம் முடியும் பியூச்சர்ஸ் ஆர்டரில் தங்கம் விலை 1,16,300 ரூபாய் அளவீட்டை எட்டியது, இதேபோல் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை வரலாற்று உச்ச அளலான 3826 டாலரை கடந்துள்ளது.
இப்படி இந்த வாரம் துவக்கமே பெரும் அதிரடியாக மாறிய நிலையில் தங்கத்தை புதிதாக வாங்குவோருக்கு அதிரச்சியாகவும், தங்கத்தில் ஏற்கனவே முதலீடு செய்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சியாகவும் திங்கட்கிழமை வர்த்தகம் அமைந்தது.
இப்படியிருக்கையில் செப்டம்பர் மாதம் வர்த்ததம் முதலீட்டாளர்களுக்கு பல கேள்விகளையும், வியப்பையும் அளித்துள்ளது, இந்த மாதம் நிஃப்டி குறியீடு பல தடுமாற்றத்திற்கு மத்தியில் 0.85 சதவீதம் மட்டுமே உயர்ந்து 24,634.90 புள்ளிகளில் இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது. ஆனால் தங்கம் யாரும் எதிர்பார்க்காத லாபத்தை கொடுத்துள்ளது.
இதுவரையில் ஒவ்வொரு மாதமும் 2, 4, 5 சதவீதம் அளவில் மட்டுமே உயர்ந்த தங்கம் விலை செப்டம்பர் மாதம் தடாலடியாக 10 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த மாத துவக்கத்தில் 22 கேரட் தங்கம் விலை வெரும் 9705 ரூபாயாக மட்டுமே இருந்த நிலையில் இன்று வர்த்தகம் முடியும் போதும் 10,770 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது கிட்டதட்ட 10.50 சதவீத வளர்ச்சியை தங்கம் இந்த மாதம் பதிவாகியுள்ளது.
இதேபோல் இந்த மாதம் தங்கம் விலையில் பதிவான குறைவான விலை முதல் நாளில், அதிகப்படியான விலை செப்டம்பர் 29ஆம் தேதியில். இதேபோல் கதை தான் 24 கேரட் தங்கம் விலையிலும் நடந்துள்ளது, ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை 10,588 ரூபாயில் துவங்கி இன்று 11,673 ரூபாய் அளவில் முடிந்துள்ளது.
நிஃப்டி குறியீடு 1 சதவீதம் கூட உயராத நிலையில் தங்கம் விலை 10.50 சதவீதம் வளர்ச்சி அடைந்தள்ளது. பலரும் கணித்தது போல் தங்கம் விலை விரைவில் 2 லட்சம் அளவீட்டை எட்டும் என கூறப்பட்டாலும், மறுமுனையில் தங்கம் விலை ஒரு நீர்க்குமிழி போன்றது, அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
தற்போது இந்திய சந்தையில் தங்கம் மீதான முதலீடுகள் பல வழிகளில் செய்யப்படும் காரணத்தால் முதலீட்டாளர்கள் தங்கள் போர்ட்போலியோவில் தங்கத்தை அதிகம் சேர்க்க வேண்டாம் எனவும் சந்தை வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர், இதேபோல் தங்கம், வெள்ளி போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுத்தவில்லை என்பது தான் நிதர்சனம்.


Click it and Unblock the Notifications