இந்தியாவில் தங்கம் விலை வெளிநாட்டு சந்தை, ரூபாய் மதிப்பு மற்றும் உள்நாட்டு டிமாண்ட் ஆகியவற்றின் அடிப்படையில் தான் நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில வாரங்களாக சரிந்து வந்த தங்கம் வெள்ளிக்கிழமை முதல் உயர துவங்கி சனிக்கிழமை சாமானிய மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.
அமெரிக்க பெடரல் ரிசர்வ் ஜூலை 25-26 ஆம் தேதி நாணய கொள்கை கூட்டத்தில் தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற கணிப்புகள் வெளியானதில் இருந்து இந்திய பங்குச்சந்தை சரிந்தது மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த ஆசிய சந்தையில் இருந்து அதிகப்படியான முதலீடுகள் தங்கம் மீது சரிவை பாதுகாக்க குவிந்துள்ளது.

இதன் எதிரொலியாக சர்வதேச சந்தை வர்த்தகத்தில் நேற்றைய வர்த்தகத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1912 டாலராக இருந்த நிலையில் வர்த்தகம் முடியும் நேரத்தில் 1933 டாலராக உயர்ந்தது. இந்த தடாலடி உயர்வு அப்படியே இந்திய ரீடைல் சந்தையில் எதிரொலித்துள்ளது.
கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைவதை கண்டு பலர் தங்கம் வாங்கலாம் என திட்டமிட்டிருந்த மக்கள் அனைவருக்கும், இன்று அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு பவுன் தங்கம் 300 ரூபாய் வரையில் உயர்ந்தது. இதனால் பலர் தங்கம் வாங்கும் முடிவை கைவிட்டனர்.
சனிக்கிழமை வர்த்தகத்தில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 330 ரூபாய் அதிகரித்து 54900 ரூபாய்க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 380 ரூபாய் அதிகரித்து 59,940 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதுவே ஆபரண தங்கம் ஒரு பவுன் 264 ரூபாய் அதிகரித்து 43,920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 54,900 ரூபாய், மும்பை - 54,550 ரூபாய், டெல்லி - 54,700 ரூபாய், கொல்கத்தா - 54,550 ரூபாய், பெங்களூர் - 54,550 ரூபாய், ஹைதராபாத் - 54,550 ரூபாய், கேரளா - 54,550 ரூபாய், புனே - 54,550 ரூபாய், பரோடா - 54,600 ரூபாய், அகமதாபாத் - 54,600 ரூபாய், ஜெய்ப்பூர் - 54,700 ரூபாய், லக்னோ - 54,700 ரூபாய், கோயம்புத்தூர் - 54,900 ரூபாய், மதுரை - 54,900 ரூபாய்.
24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 59,940 ரூபாய், மும்பை - 59,510 ரூபாய், டெல்லி - 59,660 ரூபாய், கொல்கத்தா - 59,510 ரூபாய், பெங்களூர் - 59,510 ரூபாய், ஹைதராபாத் - 59,510 ரூபாய், கேரளா - 59,510 ரூபாய், புனே - 59,510 ரூபாய், பரோடா - 59,560 ரூபாய், அகமதாபாத் - 59,560 ரூபாய், ஜெய்ப்பூர் - 59,660 ரூபாய், லக்னோ - 59,660 ரூபாய், கோயம்புத்தூர் - 59,940 ரூபாய், மதுரை - 59,940 ரூபாய்.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 43920 ரூபாய், மும்பை - 43640 ரூபாய், டெல்லி - 43760 ரூபாய், கொல்கத்தா - 43640 ரூபாய், பெங்களூர் - 43640 ரூபாய், ஹைதராபாத் - 43640 ரூபாய், கேரளா - 43640 ரூபாய், புனே - 43640 ரூபாய், பரோடா - 43680 ரூபாய், அகமதாபாத் - 43680 ரூபாய், ஜெய்ப்பூர் - 43760 ரூபாய், லக்னோ - 43760 ரூபாய், கோயம்புத்தூர் - 43920 ரூபாய், மதுரை - 43920 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 76700 ரூபாய், மும்பை - 73300 ரூபாய், டெல்லி - 73300 ரூபாய், கொல்கத்தா - 73300 ரூபாய், பெங்களூர் - 72750 ரூபாய், ஹைதராபாத் - 76700 ரூபாய், கேரளா - 76700 ரூபாய், புனே - 73300 ரூபாய், பரோடா - 73300 ரூபாய், அகமதாபாத் - 73300 ரூபாய், ஜெய்ப்பூர் - 73300 ரூபாய், லக்னோ - 73300 ரூபாய், கோயம்புத்தூர் - 76700 ரூபாய், மதுரை - 76700 ரூபாய்.
More From GoodReturns

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் தடாலடி சரிவு.. தங்க நகை வாங்கும் முன் உஷார்..!!

வீட்டில் 100 கிராமுக்கு மேல் தங்கமா? உஷார்! வருமான வரித்துறை நோட்டீஸ் வரலாம்!

தங்கம் விலை குறைந்ததால் உடனே முதலீடு செய்ய வேண்டாம்.. முதல்ல இதை படிங்க.. உண்மை தெரியும்..!!

கோவையில் இன்று தங்கம் விலை நிலவரம் என்ன? மக்கள் இன்று தங்கம் வாங்கலாமா?

கோயம்புத்தூர் தங்கம் விலை இன்று: பெரும் சரிவு! நகைப்பிரியர்களுக்கு அரிய வாய்ப்பு |

தங்கம் விலை இன்று மதுரையில் கணிசமாகக் குறைந்தது: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி! |

உகாதி நாளில் தங்கம் தந்த சர்ப்பிரைஸ்..!! தொடர்ந்து 7ஆவது நாளாக நடக்கும் மேஜிக்..!!

இப்படியொரு சான்ஸ் இனி கிடைக்காது.. மதுரையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை எண்ன..?

ஈரான் போர் முடிவுக்கு வந்ததும் தங்கம், வெள்ளி விலை உயருமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

வாரத்தின் முதல் நாளே தங்கம் தந்த சர்ப்ரைஸ்!! வீட்டில் விசேஷம் வச்சிருக்கவங்களுக்கு கொண்டாட்டம்!!

அது மட்டும் நடந்தால் தங்கம், வெள்ளி, நிஃப்டி என்னவாகுமோ? ஈரான் போர் மத்தியில் நிபுணர்கள் எச்சரிக்கை?



Click it and Unblock the Notifications