அமெரிக்க மத்திய வங்கி தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை கட்டாயம் உயர்த்த உள்ளதாகவும், இதுவே கடைசி வட்டி உயர்வாக இருக்கும் என்றும் நம்பப்படும் வேளையில், அடுத்த சில மாதங்களுக்கு கட்டாயம் வட்டி விகித உயர்வு இருக்காது என அதிகளவில் நம்பப்படுகிறது. இதனால் கடந்த ஒருவாரமாக உயர்ந்து வந்த டாலர் மதிப்பு இன்று குறைய துவங்கியுள்ளது.
அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித மாற்றம் தங்கம் விலையில் அதிகப்படியான தாக்கத்தை கொண்டு இருக்கும் காரணத்தால் இதுவே கடைசி வட்டி உயர்வாக இருக்கும் என்ற கணிப்பு, தங்கம் விலையை உயர்த்தியுள்ளது.

இதன் மூலம் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை இன்று காலை வர்த்தகம் துவங்கியதில் இருந்து 1960 டாலர் அளவிலேயே இருந்து 12 மணிக்கு மேல் 1970 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. மேலும் டாலர் குறியீடான அௐப 101.16 ஆக உள்ளது.
எம்சிஎக்ஸ் பியூச்சர்ஸ் வர்த்தக சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.41 சதவீதம் உயர்ந்து 59,432.00 ரூபாயாக உயர்ந்துள்ளது, இதேபோல் பியூச்சர்ஸ் சந்தையில் செப்டம்பர் 5 ஆம் தேதி முடியும் 1 கிலோ வெள்ளி விலை 0.26 சதவீதம் உயர்ந்து 74,970.00 ரூபாயாக உள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 170 ரூபாய் உயர்ந்து 55,520 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 190 ரூபாய் உயர்ந்து 60,570 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 136 ரூபாய் உயர்ந்து 44,416 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 400 ரூபாய் அதிகரித்து 80,400 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 55,520 ரூபாய், மும்பை - 55,150 ரூபாய், டெல்லி - 55,300 ரூபாய், கொல்கத்தா - 55,150 ரூபாய், பெங்களூர் - 55,150 ரூபாய், ஹைதராபாத் - 55,150 ரூபாய், கேரளா - 55,150 ரூபாய், புனே - 55,150 ரூபாய், பரோடா - 55,200 ரூபாய், அகமதாபாத் - 55,200 ரூபாய், ஜெய்ப்பூர் - 55,300 ரூபாய், லக்னோ - 55,300 ரூபாய், கோயம்புத்தூர் - 55,520 ரூபாய், மதுரை - 55,520 ரூபாய்.
24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 60,570 ரூபாய், மும்பை - 60,160 ரூபாய், டெல்லி - 60,320 ரூபாய், கொல்கத்தா - 60,160 ரூபாய், பெங்களூர் - 60,160 ரூபாய், ஹைதராபாத் - 60,160 ரூபாய், கேரளா - 60,160 ரூபாய், புனே - 60,160 ரூபாய், பரோடா - 60,220 ரூபாய், அகமதாபாத் - 60,220 ரூபாய், ஜெய்ப்பூர் - 60,320 ரூபாய், லக்னோ - 60,320 ரூபாய், கோயம்புத்தூர் - 60,570 ரூபாய், மதுரை - 60,570 ரூபாய்.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 44416 ரூபாய், மும்பை - 44120 ரூபாய், டெல்லி - 44240 ரூபாய், கொல்கத்தா - 44120 ரூபாய், பெங்களூர் - 44120 ரூபாய், ஹைதராபாத் - 44120 ரூபாய், கேரளா - 44120 ரூபாய், புனே - 44120 ரூபாய், பரோடா - 44160 ரூபாய், அகமதாபாத் - 44160 ரூபாய், ஜெய்ப்பூர் - 44240 ரூபாய், லக்னோ - 44240 ரூபாய், கோயம்புத்தூர் - 44416 ரூபாய், மதுரை - 44416 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 80400 ரூபாய், மும்பை - 77400 ரூபாய், டெல்லி - 77400 ரூபாய், கொல்கத்தா - 77400 ரூபாய், பெங்களூர் - 76000 ரூபாய், ஹைதராபாத் - 80400 ரூபாய், கேரளா - 80400 ரூபாய், புனே - 77400 ரூபாய், பரோடா - 77400 ரூபாய், அகமதாபாத் - 77400 ரூபாய், ஜெய்ப்பூர் - 77400 ரூபாய், லக்னோ - 77400 ரூபாய், கோயம்புத்தூர் - 80400 ரூபாய், மதுரை - 80400 ரூபாய்.


Click it and Unblock the Notifications