தங்கம் விலை பொதுவாக அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தினால் கட்டாயம் குறையும், இதற்கு முக்கிய காரணம் தங்க முதலீட்டு சந்தையில் இருந்து நிலையான வருமானம் கிடைக்கும் பத்திர முதலீட்டு சந்தை மற்றும் வைப்பு நிதியில் முதலீடுகள் அதிகரிக்கும்.
ஆனால் புதன்கிழமை அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி 0.25 சதவீதம் வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையிலும், செப்டம்பர் மாதமும் வட்டி விகிதத்தை உயர்த்த கூடும் என்ற ஜெரோம் பவல் பேச்சு, ரெசிஷன் அச்சம் இல்லை என்ற அறிவிப்பு.. இதற்கு ஏற்றார் போல் மெட்டா, ஆல்பபெட் நிறுவனங்களின் நம்பிக்கை அளிக்கும் காலாண்டு முடிவுகள், சீனாவின் தொழிற்துறை உற்பத்தி தரவுகள் தங்கம் விலையை நிலை நிறுத்தியுள்ளது.

அமெரிக்க பெடரல் வங்கியின் 0.25 சதவீத வட்டி விகித உயர்வுக்கு பின்பு சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை இன்று காலை வர்த்தகம் துவங்கியதில் இருந்து 1970 டாலரில் இருந்து 1980 டாலர் வரையில் உயர்ந்தது. ஆனால் கடந்த 2 மணிநேர வர்த்தகத்தில் 1975 டாலர் வரையில் குறைந்துள்ளது, இதே நேரத்தில் இந்திய பங்குச்சந்தையும் சரிந்துள்ளது.
எம்சிஎக்ஸ் பியூச்சர்ஸ் வர்த்தக சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.14 சதவீதம் உயர்ந்து 59,545.00 ரூபாயாக உயர்ந்துள்ளது, இதேபோல் பியூச்சர்ஸ் சந்தையில் செப்டம்பர் 5 ஆம் தேதி முடியும் 1 கிலோ வெள்ளி விலை 0.41 சதவீதம் உயர்ந்து 75,636.00 ரூபாயாக உள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 280 ரூபாய் உயர்ந்து 55,800 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 300 ரூபாய் உயர்ந்து 60,870 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 224 ரூபாய் உயர்ந்து 44,640 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 1 கிலோ 1100 ரூபாய் அதிகரித்து 81,500 ரூபாயாக உள்ளது.

22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 55,520 ரூபாய், மும்பை - 55,150 ரூபாய், டெல்லி - 55,300 ரூபாய், கொல்கத்தா - 55,150 ரூபாய், பெங்களூர் - 55,150 ரூபாய், ஹைதராபாத் - 55,150 ரூபாய், கேரளா - 55,150 ரூபாய், புனே - 55,150 ரூபாய், பரோடா - 55,200 ரூபாய், அகமதாபாத் - 55,200 ரூபாய், ஜெய்ப்பூர் - 55,300 ரூபாய், லக்னோ - 55,300 ரூபாய், கோயம்புத்தூர் - 55,520 ரூபாய், மதுரை - 55,520 ரூபாய்.
24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 60,570 ரூபாய், மும்பை - 60,160 ரூபாய், டெல்லி - 60,320 ரூபாய், கொல்கத்தா - 60,160 ரூபாய், பெங்களூர் - 60,160 ரூபாய், ஹைதராபாத் - 60,160 ரூபாய், கேரளா - 60,160 ரூபாய், புனே - 60,160 ரூபாய், பரோடா - 60,220 ரூபாய், அகமதாபாத் - 60,220 ரூபாய், ஜெய்ப்பூர் - 60,320 ரூபாய், லக்னோ - 60,320 ரூபாய், கோயம்புத்தூர் - 60,570 ரூபாய், மதுரை - 60,570 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 44416 ரூபாய், மும்பை - 44120 ரூபாய், டெல்லி - 44240 ரூபாய், கொல்கத்தா - 44120 ரூபாய், பெங்களூர் - 44120 ரூபாய், ஹைதராபாத் - 44120 ரூபாய், கேரளா - 44120 ரூபாய், புனே - 44120 ரூபாய், பரோடா - 44160 ரூபாய், அகமதாபாத் - 44160 ரூபாய், ஜெய்ப்பூர் - 44240 ரூபாய், லக்னோ - 44240 ரூபாய், கோயம்புத்தூர் - 44416 ரூபாய், மதுரை - 44416 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 81500 ரூபாய், மும்பை - 78400 ரூபாய், டெல்லி - 78400 ரூபாய், கொல்கத்தா - 78400 ரூபாய், பெங்களூர் - 76500 ரூபாய், ஹைதராபாத் - 81500 ரூபாய், கேரளா - 81500 ரூபாய், புனே - 78400 ரூபாய், பரோடா - 78400 ரூபாய், அகமதாபாத் - 78400 ரூபாய், ஜெய்ப்பூர் - 78500 ரூபாய், லக்னோ - 78400 ரூபாய், கோயம்புத்தூர் - 81500 ரூபாய், மதுரை - 81500 ரூபாய்.


Click it and Unblock the Notifications