இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்தும் 2ஆம் கட்ட நகரங்களில் மிகவும் முக்கியமானதாக இருக்கும் கோவை நகரம் பாரம்பரியமாகவே தங்க நகை மீதான மோகம் கொண்ட நகரமாக இருந்து வருகிறது. இதற்கு முக்கியமான காரணம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் தொழிற்துறை வளர்ச்சியும், அதன் மூலம் வருடம் முழுவதும் செழிப்பாக இருக்கும் பணப்புழக்கம் தான்.
இந்த நிலையில் இன்று ஈரான்-இஸ்ரேல் மோதல் காரணமாக ஏற்கனவே கணிக்கப்பட்டது போல் சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 2400 டாலர் அளவீட்டை நெருங்கி வருகிறது. இந்த நிலையில் ஏப்ரல் 16, 2024 ஆம் தேதி நிலவரப்படி, கோவையில் தங்கத்தின் விலை தடாலடியாக உயர்ந்து காணப்படுகிறது.

தற்போதைய கோவை தங்கம் விலை
22 காரட் தங்கம் - ஒரு கிராம் 6,870 ரூபாயாக உள்ளது.
24 காரட் தங்கம் - ஒரு கிராம் 7,495 ரூபாயாக உள்ளது.
கடந்த சில மாதங்களாகத் தங்கத்தின் விலை தொடர் ஏற்றத்தில் இருக்கும் வேளையில் மக்கள் தங்கம் வாங்குவது கணிசமாகக் குறைந்துள்ளது. நாட்டின் கடந்த மாத தங்க இறக்குமதி தரவுகளைப் பார்த்தால் தெரிந்துகொள்ள முடியும்.
ஆனால் ரீடைல் தங்கம் விற்பனை என்பது முற்றிலுமாக குறையவில்லை, பெரும் பணக்காரர்களும், அப்பர் மிடில் கிளாஸ் மக்கள் தொடர்ந்து தங்கத்தை வாங்கி வருகிறார்கள். இந்த நிலையில் இன்று கோயம்புத்தூரில் ரீடைல் சந்தையில் தங்கம் விலை கிராமுக்கு சுமார் 80 ரூபாய் உயர்ந்துள்ளது.
தங்கம் வாங்குவது என்ற முடிவை எடுக்கும் போது, தங்கத்தின் தூய்மை குறித்து வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதற்காகவே இந்திய அரசாங்கம் தங்க நகைகளுக்கான ஹால்மார்க் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஹால்மார்க் தங்கம் என்றால் என்ன?: தங்க நகைகளின் தூய்மையை உறுதிப்படுத்தும் ஒரு தரச்சான்று முறை தான் ஹால்மார்க் முறை. இந்த முறையில், மூன்று முக்கிய அடையாளங்கள் தங்க நகை மீது பதிக்கப்படும்.
நகை தயாரிப்பாளரின் அடையாளம்: இது தங்க நகையை உருவாக்கிய நிறுவனத்தைக் குறிக்கிறது.
தூய்மை குறியீடு: இது தங்கத்தின் தூய்மையைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக, 22K என்ற குறியீடு 22 காரட் தங்கத்தைக் குறிக்கும்.
BIS ஹால்மார்க் லோகோ: இந்த லோகோ தங்கம் இந்தியத் தர நிறுவனத்தின் (BIS) தரங்களைப் பூர்த்தி செய்கிறது என்பதைக் குறிக்கிறது.
ஹால்மார்க் தங்கத்தை எவ்வாறு வாங்குவது?: தங்கம் வாங்கும் போது, கீழ்கண்ட விஷயங்களை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நகைக்கடையில் ஹால்மார்க் தங்கம் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நகை மீது பதிக்கப்பட்ட ஹால்மார்க் முத்திரையைக் கவனித்து, அதன் நம்பக்தன்மையை ஆன்லைனில் BIS இணையதளத்தில் செக் செய்துகொள்ளுங்கள். கடைசியாக நகை வாங்கும் போது, ஹால்மார்க் சான்றிதழைக் கேட்டு வாங்குங்கள். இது தங்கத்தின் தூய்மையை உறுதிப்படுத்தும் ஒரு ஆவணமாகும்.
கோவையில் தற்போது தங்கத்தின் விலை தடாலடியாக உயர்ந்திருந்தாலும், அடுத்த சில வாரங்களுக்குத் தொடர்ந்து உயர்வான அளவிலேயே இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
நீங்கள் தங்கம் வாங்கத் திட்டமிட்டிருந்தால், நம்பக்தன்மை கொண்ட தங்கத்தை வாங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஹால்மார்க் தங்கத்தை வாங்குவதன் மூலம், எதிர்காலத்தில் நீங்கள் வாங்கிய தங்கத்திற்கு நல்ல ரீசேல் வேல்யூ பெற முடியும்.
Story written by: Prasanna Venkatesh
More From GoodReturns

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: தங்கம் விலை இனி குறையுமா? உயருமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு!! அட்சய திருதியைக்கு 5 நாட்களே இருக்கும் நிலையில் திடீர் விலை ஏற்றம்!!

குறையும் தங்கம் விலை ; உயரும் கச்சா எண்ணெய் விலை - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியால் எல்லாமே மாறுது!!

வாரத்தின் முதல் நாளே குட் நியூஸ்: குறைந்தது தங்கம் விலை!! நகைப்பிரியர்கள் ஹேப்பி!!

தங்கம் விலையில் அதிரடி திருப்பம்! டிரம்ப் கொடுத்த போர் நிறுத்த ட்விஸ்ட்! அடுத்து என்ன நடக்கும்?

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சாமானிய மக்கள் மகிழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை கிடுகிடு உயர்வு: முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: சாமானிய மக்கள் அதிர்ச்சி!!

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

குறைந்த விலையில் தங்கம் வாங்க ஆசையா?18K vs 22K - அட்சய திருதியையில் எது வாங்குவது புத்திசாலித்தனம்?



Click it and Unblock the Notifications