Gold Rate in chennai: திங்கள்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில் தங்கத்தின் விலை சுமார் 5,035 டாலருக்கு அருகில் உயர்ந்துள்ளது. அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்து வருவதாலும், உலக மத்திய வங்கிகளின் தொடர் தங்கம் வாங்கி வருவதாலும் தங்கத்திற்கான தேவை அதிகரித்து இதன் விலை உயர்ந்துள்ளது. இதனால், பொதுமக்களுக்கு தங்கம் பாதுகாப்பான முதலீடாகத் தொடர்ந்து பார்த்து வருகின்றனர்.
இந்திய ரீடைல் சந்தையில் இன்று காலை வர்த்தகத்தில் 22 காரட் தங்கம் (22Kt) ஒரு கிராம் விலை ரூ.14,650 ஆக உள்ளது. இது சனிக்கிழமை விலை நிலையை விட ரூ.230 உயர்ந்துள்ளது. இதேபோல் 18 காரட் தங்கம் (18Kt) ஒரு கிராம் ரூ.12,520 ஆக பதிவாகியுள்ளது. இதுவும் ரூ.170 அதிகரித்துள்ளது.

வெள்ளி ஒரு கிராம் விலை ரூ.300 ஆக உயர்ந்துள்ளது. சனிக்கிழமை வர்த்தக முடிவில் பதிவான விலையை காட்டிலும் ரூ.15 உயர்வைக் பதிவு செய்துள்ளது. எம்சிஎக்ஸ் சந்தையிலும் உயர்வுடன் இன்றைய வர்த்தகம் துவங்கியுள்ளது, 10 கிராம் 24 கேரட் தங்கம் விஸை 1.50 சதவீதம் உயர்ந்து 1,57,788 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இதேபோல் வெள்ளி விலை 5.14 சதவீதம் உயர்ந்து 2,62,739 ரூபாயாக உள்ளது.
ஃபெடரல் ரிசர்வ்-வின் சுதந்திரம் குறித்த கேள்வியும், அச்சமும் தொடர்ந்து அதிகரித்து வருவது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் நெருக்கடியாக மாறியுள்ளது. இதேபோல் சீனா-வின் நடவடிக்கை மற்றும் அமெரிக்கா - ஈரான் மத்தியிலான அணுஆயுத பேச்சுவார்த்தையும் தங்கம் விலையை தாறுமாறாக உயர்த்தப்போகிறது.
சர்வதேச ஸ்பாட் சந்தையில் தங்க விலை தற்போது 5,022.22 அமெரிக்க டாலராக உள்ளது. இது வெள்ளிக்கிழமை வர்த்தக நிலையை விட 61.07 டாலர் உயர்ந்து உயர்ந்துள்ளது. இதேபோல் வெள்ளி விலை தற்போது 81.3325 அமெரிக்க டாலராக உள்ளது. இது முந்தைய நிலையை விட 3.3156 டால் உயர்ந்துள்ளது.

ஃபெடரல் ரிசர்வ்
அமெரிக்க கருவூல செயலர் ஸ்காட் பெசென்ட் வியாழக்கிழமை பேசுகையில், டொனால்ட் ட்ரம்ப் அதிபரால் ஃபெடரல் ரிசர்வ் தலைவராக பரிந்துரைக்கப்பட்ட கெவின் வார்ஷ் வட்டி விகிதங்களைக் குறைக்க மறுத்தால் குற்றவியல் விசாரணை நடத்தப்படலாம் என்பதைத் மறுக்கவில்லை என தெரிவித்த காரணத்தால் மீண்டும் ஃபெடரல் ரிசர்வ்-வின் சுதந்திரம் குறித்த அச்சம் அதிகரித்துள்ளது.
ஃபெடரல் ரிசர்வின் சுதந்திரத்திற்கு எதிரான இத்தகைய கருத்துகள் அமெரிக்க டாலரை மேலும் பலவீனப்படுத்தி வருகின்றன. இது டாலர் மதிப்பில் நிர்ணயமாகும் தங்கத்தின் விலை உயர்வுக்கு ஆதரவை அளித்து வருகிறது. இதனால் ஜெரோம் பவல் இப்பதவியை விட்டு வெளியேறினாலும் டிரம்ப் அரசுக்கும், பெடரல் ரிசர்வ் மத்தியிலான வட்டி விகிதம் குறித்த போராட்டம் தொடரும் என்பது உறுதியாகியுள்ளது.
சீனாவின் ஆட்டம்
உலகின் மிகப்பெரிய தங்க நுகர்வு நாடான சீனா நாட்டின் மத்திய வங்கியான PBOC தொடர்ச்சியாக 15வது மாதமாக ஜனவரி மாதத்தில் தங்கத்தை வாங்கி வருகிறது. ஜனவரி இறுதியில் சீனாவின் PBOC-யின் தங்க இருப்பு 74.19 மில்லியன் ட்ராய் அவுன்ஸாக உயர்ந்துள்ளது. இது டிசம்பர் மாதத்தை விட 0.04 மில்லியன் அவுன்ஸ் அதிகரித்துள்ளது.
அமெரிக்கா-ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை
ஈரான் அதிபர் Masoud Pezeshkian வெள்ளிக்கிழமை அமெரிக்காவுடன் நடைபெற்ற அணு தொடர்பான பேச்சுவார்த்தைகளை "முன்னேற்றமான படி" என்று குறிப்பிட்டார். ஆனால் எந்த மிரட்டல்களையும் ஏற்க மாட்டோம் என தெளிவுபடுத்தினார். ஈரான் வெளியுறவு அமைச்சர் Abbas Araghchi-யும் இரு நாடுகள் மத்தியிலான உரையாடல்கள் அச்சுறுத்தல் இல்லாமல் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
டொனால்ட் ட்ரம்ப் இந்த வார தொடக்கத்தில் மற்றொரு சந்திப்பு நடைபெறும் என்றும், ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் கடுமையான விளைவுகள் இருக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
இதனால் ஈரான் - அமெரிக்கா மத்தியிலான பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. இதன் விளைவாகவே தங்கம் விலை இன்று சர்வதேச சந்தையிலும், உள்நாட்டு சந்தையிலும் அதிகரித்துள்ளது.
More From GoodReturns

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!

தங்கம், வெள்ளி விலை : வரும் நாட்களிலும் விலை சரியுமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

அலர்ட்.. தங்கம் ரூ.7300,வெள்ளி ரூ.15000 சரிவு.. Big drop.. சொல்லி வைச்ச மாதிரியே நடக்குதே..!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?

வீட்டில் 100 கிராமுக்கு மேல் தங்கமா? உஷார்! வருமான வரித்துறை நோட்டீஸ் வரலாம்!



Click it and Unblock the Notifications