சர சர ஏற்றத்தில் தங்கம் விலை! ஜிம் ராஜர்ஸ் சொன்னது போலவே நடக்குதே! மிஸ் பண்ணிட்டோமே!

உலகின் முன்னணி கமாடிட்டி முதலீட்டாளர்களில் ஒருவரான ஜிம் ராஜர்ஸ், சில வாரங்களுக்கு முன்பு, ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் "தற்போது தங்கம் விலை காணும் இறக்கத்தை எல்லாம் பொருட்படுத்த வேண்டாம். எதிர்காலத்தில் தங்கம் விலை ஒரு நல்ல உச்சத்தைத் தொடும்" எனச் சொல்லி இருந்தார்.

வெறுமனே வாயால் சொல்லி விட்டு, ஒதுங்கி நிற்கவில்லை. கடந்த 2019- ஆண்டில் இருந்தே, தங்கத்தில் முதலீடு செய்து வருவதாகவும் சொல்லி இருந்தார் ஜிம் ராஜர்ஸ். அவர் வாக்கு, தற்போது கண் முன்னே பலித்துக் கொண்டு இருக்கிறது.

தங்கம் விலை இன்று காலை நிலவரம்

தங்கம் விலை இன்று காலை நிலவரம்

ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கம் விலை, (XAU USD CUR) நேற்று (30 செப் 2020) 1,885.82 டாலருக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 6.9 டாலர் விலை (0.37 %) அதிகரித்து 1,892 டாலருக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருந்தது.

ஒரே நாளில் 22 டாலர் விலை ஏற்றம்

ஒரே நாளில் 22 டாலர் விலை ஏற்றம்

தற்போது (01 அக் 2020 இந்திய நேரப் படி சுமாராக மாலை 6.15-க்கு), அதே ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கம் விலை (XAU USD CUR), நேற்றைய குளோசிங் விலையில் இருந்து 22 டாலர் விலை ஏற்றம் கண்டு, கண் முன்னே 1,908 டாலரைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

வரிசையாக விலை அதிகரிக்கலாம்

வரிசையாக விலை அதிகரிக்கலாம்

சர்வதேச தங்கம் விலையை அடிப்படையாகக் கொண்டு தான், பல நாட்டு கமாடிட்டி சந்தைகளில் தங்கம் வர்த்தகமாகிறது. பல நாடுகளில் சில்லறை வணிகமும் நடைபெறுகிறது. எனவே, சர்வதேச தங்கம் விலை ஏற்றம் கண்டால் வரிசையாக சென்னை ஆபரணத் தங்கம் விலை, எம் சி எக்ஸ் தங்கம் விலை என எல்லாமே ஏற்றம் காணத் தொடங்கும். இதற்கு எதார்த்தத்தில் ஆதாரம் இருக்கிறதா?

விலை ஏற்றம் கண்டு இருக்கிறதா?

விலை ஏற்றம் கண்டு இருக்கிறதா?

சர்வதேச தங்கம் விலை (XAU USD CUR) ஏற்றம் காணும் போது எல்லாம், எம் சி எக்ஸ் தங்கம் விலை மற்றும், சென்னை ஆபரணத் தங்கம் விலை ஏற்றம் கண்டு இருக்கிறது. அந்த கேள்விக்கான விடையைக் கீழே தரவுகளில் இருக்கின்றன.

கடந்த 4 மாதங்களில் சர்வதேச தங்கம் விலை

கடந்த 4 மாதங்களில் சர்வதேச தங்கம் விலை

கடந்த மே முதல் ஆகஸ்ட் வரை தங்கம் விலை சீராக ஏற்றம் கண்டு இருக்கிறது. எனவே அந்த நான்கு மாதங்களின் முதல் தேதியில் சர்வதேச தங்கம் விலை என்ன என்பதைக் கீழே கொடுத்து இருக்கிறோம்.
01 மே 2020 1,700 டாலர்
01 ஜூன் 2020 1,739 டாலர்
01 ஜூலை 2020 1,770 டாலர்
03 ஆக 2020 1,976 டாலர்

ஜூன் முதல் ஆகஸ்ட் வரை எம் சி எக்ஸ் தங்கம் விலை

ஜூன் முதல் ஆகஸ்ட் வரை எம் சி எக்ஸ் தங்கம் விலை

அக்டோபர் மாதத்துக்கான 10 கிராம் தங்க ஃப்யூச்சர் காண்டிராக்டின், ஜூன் முதல் ஆகஸ்ட் வரையான விலையைக் கீழே கொடுத்து இருக்கிறோம். சர்வதேச தங்கம் விலையோடு, எம் சி எக்ஸ் தங்கம் விலை அதிகரித்து இருப்பதைp பார்க்க முடிகிறது.
01 ஜூன் 2020 47,267 ரூபாய்
01 ஜூலை 2020 48,389 ரூபாய்
03 ஆக 2020 53,717 ரூபாய்

சென்னை 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கம் விலை

சென்னை 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கம் விலை

கடந்த மே முதல் ஆகஸ்ட் வரையான, நான்கு மாத (24 கேரட் 10 கிராம்) ஆபரணத் தங்கம் விலையைக் கீழே கொடுத்து இருக்கிறோம். சர்வதேச தங்கம் விலையோடு, சென்னை ஆபரணத் தங்கம் விலையும் அதிகரித்து இருக்கிறது.
01 மே 2020 46,200 ரூபாய்
01 ஜூன் 2020 49,220 ரூபாய்
01 ஜூலை 2020 50,950 ரூபாய்
03 ஆக 2020 56,490 ரூபாய். ஆக சர்வதேச தங்கம் விலை அதிகரித்தால், மற்ற தங்கத்தின் விலையும் அதிகரிப்பதைப் பார்த்தோம். அதே போல சர்வதேச தங்கம் விலை சரிந்தால், மற்ற தங்கம் விலையும் சரியுமா..? ஆதாரம் இதோ..!

சென்னை ஆபரணத் தங்கம் விலை Vs சர்வதேச தங்கம் விலை

சென்னை ஆபரணத் தங்கம் விலை Vs சர்வதேச தங்கம் விலை

ஆகஸ்ட் 2020 முதல் வாரத்தில் சர்வதேச தங்கம் விலை 2,063 டாலருக்கு வர்த்தகம் நிறைவடைந்த போது, சென்னையில் 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கம் விலை 59,130 ரூபாய்க்கு விற்பனை ஆனது. இன்று ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கம் விலை 1,908 டாலருக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. சென்னையில் இன்று 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கம் விலை 52,640 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

ஆபரணத் தங்கம் 10.9% சர்வதேச தங்கம் 7.5%

ஆபரணத் தங்கம் 10.9% சர்வதேச தங்கம் 7.5%

சென்னை ஆபரணத் தங்கம் விலையை, ஆகஸ்ட் உச்சத்தில் இருந்து தற்போதைய விலைக்கு கணக்கிட்டல் சுமாராக 10.9 % விலை சரிந்து இருக்கிறது. ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கத்தின் விலையை, ஆகஸ்ட் உச்சத்தில் இருந்து தற்போதைய விலைக்கு கணக்கிட்டல் சுமாராக 7.5 % விலை சரிந்து இருக்கிறது. எப்படிப் பார்த்தாலும் சர்வதேச தங்கம் விலை மாற்றம் கண்டால், சென்னை ஆபரணத் தங்கம் விலையும் மாற்றம் காண்கிறது.

எம் சி எக்ஸ் தங்கம் Vs சர்வதேச தங்கம்

எம் சி எக்ஸ் தங்கம் Vs சர்வதேச தங்கம்

ஆகஸ்ட் மாதத்தில் சர்வதேச தங்கம் விலை 2,063 டாலருக்கு வர்த்தகம் நிறைவடைந்த போது, எம் சி எக்ஸ் தங்கம் விலை (டிசம்பர் காண்டிராக்ட்) 56,379 ரூபாய்க்கு விற்பனை ஆனது. இன்று ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கம் விலை 1,908 டாலருக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. எம் சி எக்ஸ் தங்கம் விலை 50,382 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

10.6% சரிந்த எம் சி எக்ஸ் தங்கம் Vs 7.5% சரிவில் சர்வதேச தங்கம்

10.6% சரிந்த எம் சி எக்ஸ் தங்கம் Vs 7.5% சரிவில் சர்வதேச தங்கம்

எம் சி எக்ஸ் தங்கம் விலை (டிசம்பர் காண்டிராக்ட்) ஆகஸ்ட் உச்சத்தில் இருந்து தற்போதைய விலைக்கு கணக்கிட்டல் சுமாராக 10.6 % விலை சரிந்து இருக்கிறது. ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கத்தின் விலையை, ஆகஸ்ட் உச்சத்தில் இருந்து தற்போதைய விலைக்கு கணக்கிட்டல் சுமாராக 7.5 % விலை சரிந்து இருக்கிறது. எப்படிப் பார்த்தாலும் சர்வதேச தங்கம் விலை மாற்றம் கண்டால், சென்னை ஆபரணத் தங்கம் & எம் சி எக்ஸ் தங்கம் விலையும் மாற்றம் காண்கிறது என்பதற்கு இதற்கு மேல் ஆதாரம் வேண்டுமா என்ன?

மிஸ் பண்ணிட்டோமே

மிஸ் பண்ணிட்டோமே

அன்றே ஜிம் ராஜர்ஸ் சொன்னார். நாம் தான் கேட்கவில்லை. தங்கம் விலை தொடர்ந்து சரிகிறது என்கிற பயத்தில், தங்கத்தில் முதலீடு செய்யாதவர்கள் மற்றும் ஆபரணத் தங்கத்தை வாங்காதவர்கள், இந்த நல்ல வாய்ப்பைத் தவறவிட்டு இருக்கிறோம் எனலாம். இப்போது கூட தங்கம் விலை ஒன்றும் அசாத்திய ஏற்றம் கண்டுவிட வில்லை. உங்கள் நிதி ஆலோசகருடன் ஆலோசித்து தங்கத்தில் முதலீடு செய்யலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+