சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று காலை தொடங்கி இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 4 முறை மாறி இருக்கிறது. ஈரான் போர் மற்றும் அது தொடர்பான அமெரிக்க அதிபர் டிரம்பின் கருத்துகள் தங்கம் விலையில் இப்படி மாற்றத்தை கொண்டு வருகிறது.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை அன்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 13620 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதனை அடுத்து வாரத்தின் முதல் வர்த்தக நாளான நேற்று காலை தங்கம் விலை அதிரடியாக சரிவடைந்தது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 12,950 ரூபாய் என விலை குறைந்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்களுக்கு மேலும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் மாலை 3 மணி அளவில் மீண்டும் விலை குறைந்து ஒரு கிராம் 12,670 ரூபாய் என ஆனது.

இந்நிலையில் நேற்று மாலை 7 மணி அளவில் மூன்றாவது முறையாக தங்கம் விலை மாற்றி அமைக்கப்பட்டது. மாலை 7 மணிக்கு தங்கத்தின் விலை உயர்த்தப்பட்டது. இதன்படி ஒரு கிராம் ஆபரண தங்கம் 13,340 ரூபாயாக விலை உயர்ந்தது. அதாவது நேற்று காலை தொடங்கி மாலை வரை தங்கத்தின் விலை மூன்று முறை மாற்றி அமைக்கப்பட்டது. இதில் இரண்டு முறை விலை குறைந்தது , ஒரு முறை விலை உயர்த்தப்பட்டது.
இந்த சூழலில் இன்று காலை 9:30 மணி அளவில் தங்கத்தின் விலை குறைக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 13,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அப்படி பார்க்கும்போது ஒரு சவரன் தங்கத்தின் விலை 1,04,000 ரூபாயாக இருக்கிறது. நேற்று மாலை நிலவரத்துடன் ஒப்பிடும் போது தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 340 ரூபாயும் ஒரு சவரனுக்கு 2,720 ரூபாயும் குறைந்திருக்கிறது.
தங்கத்தின் விலை இப்படி 24 மணி நேரத்தில் நான்கு முறை மாற்றி அமைக்கப்படுவதற்கு ஈரான் போர் குறித்த அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிடக்கூடிய கருத்துக்கள் தான் காரணம். கச்சா எண்ணெய் விலை உயர்வால் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வந்தது. இந்த நிலையில் அமெரிக்காவும் ஈரானும் அமைதி பேச்சுவார்த்தை நடத்தியதாக டிரம்ப் அறிவித்தார். உடனே கச்சா எண்ணெய் விலை சரிந்தது. இதனால் தங்கம் விலை உயர்ந்தது. இதுவே நேற்று மாலை தங்கம் விலை உயர காரணம்.
இந்த நிலையில் எந்த ஒரு அமைதி பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என ஈரான் பதிலடி தந்ததை அடுத்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இதனால் இன்று காலை தங்கத்தின் விலை சரிவை சந்தித்து இருக்கிறது. தங்கம் வாங்க வேண்டும் என காத்திருந்தவர்களுக்கு இந்த விலை குறைவு முக்கியமான ஒரு வாய்ப்பினை தந்திருக்கிறது. இந்த விலை குறைவை பயன்படுத்தி தங்கம் வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் வாங்கிக் கொள்ள வேண்டும்.
ஏனெனில் போர் நிறுத்தம் மற்றும் கச்சா எண்ணெய் விலை குறைவதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்படும் போது தங்கம் விலை உயரத் தொடங்கும். எனவே மேலும் மேலும் விலை குறையட்டும் என காத்திருக்காமல் தற்போது உள்ள விலை குறைவை பயன்படுத்திக் கொள்வதுதான் நல்லது.
வெள்ளியின் விலையும் மாற்றி அமைக்கப்பட்டு விட்டது. நேற்று காலை 1 கிராம் வெள்ளி 235 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் நேற்று மாலை 7:00 மணிக்கு 250 ரூபாயாக விலை உயர்ந்தது. இந்நிலையில் இன்று காலை 240 ரூபாய் என விலை குறைந்திருக்கிறது. நேற்று மாலையுடன் ஒப்பிட்டால் வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 10 ரூபாயும் ஒரு கிலோவுக்கு 10,000 ரூபாயும் சரிவை சந்தித்திருக்கிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

மதுரையில் தங்கம் விலை திடீர் சரிவு!! அட்சய திருதியை வேற வருது!! மக்களே ரெடியா?

கோவையில் இன்று தங்கம் விலை என்ன? அட்சய திருதியைக்கு தங்கம் வாங்க முடியுமா?

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

அட்சய திருதியை: தங்கம் Pre- Booking செய்வதால் நமக்கு என்ன லாபம்? Pre- Bookingஇல் கவனிக்க வேண்டியது என்ன?

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

மதுரையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

தங்கம், வெள்ளி விலை மேலும் 10% குறையுமா? எல்லாம் டிரம்ப் எடுக்கும் முடிவில் தான் இருக்கு!!

மதுரையில் இன்று தங்கம் விலை எகிறியது! நகை வாங்க காத்திருந்தோர் ஷாக்!



Click it and Unblock the Notifications