Jefferies என்கிற உலகின் முன்னணி முதலீட்டு வங்கி (Investment Banking Company) கம்பெனியின், ஈக்விட்டி பிரிவின் தலைவர் தான் இந்த க்ரிஸ் வுட் (Chris Wood).
அடுத்த 10 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும் என்றால், தன்னுடைய மொத்த பணத்தில் 30 சதவிகிதத்தை தங்கத்திலும், 20 சதவிகிதத்தை தங்க சுரங்க கம்பெனிகளிலும் முதலீடு செய்வேன் எனச் சொல்லி இருக்கிறார்.
உலக அளவில், தங்கத்தை வாங்கலாம் எனச் சொல்லும் பல நிதி வல்லுநர்களில் இவரும் இப்போது புதிதாக இணைந்து இருக்கிறார்.
வாரன் பஃபெட் தங்க கம்பெனியில் முதலீடு
பங்குச் சந்தை பிதாமகன் வாரன் பஃபெட், தங்கத்தில் முதலீடு செய்வதை அதிகம் ஊக்குவிக்காதவர். அவரே கூட, இந்த ஆண்டில் Barrick Gold Corp என்கிற தங்க சுரங்க கம்பெனியில் சுமாராக 563 மில்லியன் டாலரை முதலீடு செய்து 20.9 மில்லியன் பங்குகளை வாங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கம் விலை எகிறும்
தாமஸ் கப்லன் என்கிற ஃபண்ட் மேனேஜர், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் தங்கம் விலை 3,000 டாலர் முதல் 5,000 டாலர் வரை அதிகரிக்கலாம் என, கடந்த மே 2019-லேயே கணித்து இருந்தது இங்கு நினைவு கூறத்தக்கது. இவர் தங்கம் விலை அதிகரிக்கும் எனக் கணித்த போது சர்வதேச தங்கம், சுமாராக 1,300 டாலரில் வர்த்தகமாகிக் கொண்டு இருந்தது நினைவுகூறத்தக்கது.
3,000 டாலர் வரை மற்ற கணிப்புகள்
க்ரெடிட் சூசி தொடங்கி, கோல்ட்மேன் சாக்ஸ் வரை பலரும் தங்கம் விலை 2,300 டாலரைத் தொடலாம் எனக் கணித்து இருக்கிறார்கள். பேங்க் ஆஃப் அமெரிக்கா வங்கி, தங்கம் விலை 3,000 டாலர் வரைத் தொடலாம் எனக் கணித்து இருக்கிறது. ஆக எப்படிப் பார்த்தாலும், எதிர் காலத்தில் தங்கம் விலை சரமாரியாக எகிற வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. சரி இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?
சென்னையில் தங்கம் விலை
அண்ணா பல்கலைக்கழகம் கொண்ட நம் அழகு சென்னையில், 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தை 51,330 ரூபாய்க்கு விற்கிறார்கள். ஒரு கிராமுக்கு 5,133 ரூபாய். அதே போல 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தை 47,050 ரூபாய்க்கு விற்கிறார்கள். கிராமுக்கு 4,705 ரூபாய்.
MCX தங்கம் விலை நிலவரம்
இந்தியாவின் கமாடிட்டி எக்ஸ்சேஞ்சான எம் சி எக்ஸ் சந்தையில், டிசம்பர் 2020 மாதத்துக்கான 10 கிராம் தங்க ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை, நேற்றைய குளோசிங் விலையான 50,910 ரூபாயில் இருந்து 212 ரூபாய் (0.42 %) விலை அதிகரித்து 51,122 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
இண்டர்நேஷனல் தங்கம் விலை
ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கம் விலை, நேற்று (20 அக்டோபர் 2020) 1,906 டாலருக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று 11 டாலர் (0.55 %) விலை அதிகரித்து 1,917 டாலருக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக சர்வதேச தங்கம் விலை 1,900 டாலருக்கு மேல் வர்த்தகம் நிறைவடைந்து இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
யூடேர்ன் எடுத்த தங்கம் விலை
சென்னை ஆபரணத் தங்கம் (24 கேரட் 10 கிராம்) விலை மீண்டும் 51,000 ரூபாய்க்கு மேல் வந்து இருக்கிறது. அதே போல எம் சி எக்ஸ் தங்கம் விலையும் 51,000 ரூபாய்க்கு மேல் வர்த்தகமாகிறது. சர்வதேச தங்கம் விலை மீண்டும் 1,900 டாலருக்கு மேல் இன்றும் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை எல்லாமே தங்கம் விலை, சரிவில் இருந்து மீண்டும், யூடேர்ன் எடுத்து அதிகரிப்பதற்கான அறிகுறிகள் போலத் தெரிகிறது.
தடாலடி சரிவில் டாலர் இண்டெக்ஸ்
அமெரிக்காவின் டாலர் கரன்சி இண்டெக்ஸ், கடந்த 15 அக்டோபர் 2020 அன்று 93.85 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. ஆனால் இன்று 92.82 புள்ளிகள் வரை சரிந்து வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இது தங்கத்தின் விலை உயர முக்கிய காரணிகளில் ஒன்றாக அமைந்து இருக்கிறது.
இவைகளால் தங்கம் விலை அதிகரிக்கலாம்
அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் நோயாளிகள் எண்ணிக்கை,
உலக பொருளாதாரப் பிரச்சனைகள்,
தங்கத்தை ஒரு பாதுகாப்பான முதலீடாகக் கருதி பணம் போடுவது அதிகரிப்பது,
அமெரிக்க அரசின் ஸ்டிமுலஸ் பேக்கேஜ், பூகோள அரசியல் பிரச்சனைகள்... போன்ற பல காரணங்களால் தங்கம் விலை எதிர்காலத்தில் அதிகரிக்கலாம்.
More From GoodReturns

Gold & Silver Rate LIVE: ஈரான் போரில் டிவிஸ்ட்.. தங்கம் விலை தடாலடி உயர்வு..!!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications