Gold Price: 2 மாசத்துல தங்கம் ரூ.1.60 லட்சம் வரை உயரப்போகுது.. அமெரிக்க அரசு எடுக்கப்போகும் முக்கிய முடிவு!

உலகளாவிய முதலீட்டுச் சந்தை தலைகீழாக மாறும் தருவாயில் உள்ளது, உலகம் முழுவதும் தற்போது ஏஐ-க்கு எதிரான முதலீட்டை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறது. இதனால் தங்கம் விலை இந்த ஆண்டு இறுதிக்குள் 1,60,000 ரூபாய் அளவை தாண்டும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.

தைவான், கொரியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிவை எதிர்கொண்டு இருக்கும் வேளையில் என்விடியா உட்பட பல நிறுவனங்களின் ஆதிக்கம் சக போட்டி நிறுவனங்கள் மூலம் உடைந்து வருகிறது.

Gold Price: 2 மாசத்துல தங்கம் ரூ.1.60 லட்சம் வரை உயரப்போகுது.. அமெரிக்க அரசு எடுக்கப்போகும் முக்கிய முடிவு!

இதேவேளையில் அமெரிக்கப் பத்திர முதலீட்டுக்கான லாப அளவுகள் தொடர்ந்து 4.50 சதவீதத்திற்கு மேல் இருப்பது அமெரிக்கா அரசால் சமாளிக்க முடியாத ஒரு விஷயம், ஆனால் தற்போது அமெரிக்காவின் 10 வருடக் கருவூல பத்திரத்தின் வட்டி வருமானம் 5 சதவீதத்திற்கு மேல் உள்ளது.

அமெரிக்க பொருளாதாரத்தில் தற்போது அதீத கடன், பத்திர மீதான அதீத வட்டி விகிதம் என நெருக்கடியாகச் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதுபோன்ற காலகட்டத்தில் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கும், அமெரிக்க அரசுக்கும் 3 வழிகள் மட்டுமே உள்ளது.

Also Read

1. முதல் வழிச் செலவுகளைக் குறைப்பது - உலகில் பல நாடுகளுடன் போரை இழுத்துவிட்டு இருக்கும் வேளையில் செலவின குறைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. குறிப்பாக அமெரிக்க பாதுகாப்புத் துறைக்கு அதிகப்படியான நிதி தேவை உருவாகியுள்ளது.

2. பத்திரங்களை அதிகமாக விற்பது.. சந்தையில் தேவைக்கு அதிகமாகப் பத்திரங்களை வெளியிட்டால் வட்டி விகிதத்தைக் குறைக்கலாம். ஆனால் கடன் சுமை அதிகமாகிவிடும். ஏற்கனவே அமெரிக்கப் பொருளாதாரம் 40 டிரில்லியன் டாலர் கடனில் இருக்கும் வேளையில் பத்திரங்களை வெளியிடுவது என்பது முட்டாள்தனமான முடிவாக இருக்கும்.

3. பணத்தை அச்சிடுவது.. தற்போதைய நிலையில் பத்திர சந்தையின் தாக்கத்தைக் குறைக்க அதிகப்படியான டாலரை அச்சிட்டு அதைப் பத்திரங்களைத் திருப்பி சந்தையில் இருந்து வாங்குவது மூலம் கடன் சுமையைக் குறைக்க முடியும்.

Recommended For You

இது டாலரின் புழக்கம் அதிகமாகி விடும். ஆனால் இதைக் கட்டுப்படுத்த பின்னாளில் நடவடிக்கை எடுக்க முடியும் என்பதால் அமெரிக்க அரசும், பெடரல் ரிசர்வ்-ம் டாலரை அச்சிடும் முடிவைத் தான் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பணத்தை அச்சிட்டால் டாலர் மதிப்பு குறையும், அமெரிக்கப் பத்திர முதலீட்டின் மீதான லாபம் குறையும். ஆனால் இது தங்கம் மீதான முதலீட்டை அதிகரிக்கும் என்பதால் தங்கம் விலை உயர்வுக்கு அமெரிக்காவின் டாலர் அச்சிடும் முடிவு வழிவிடும் என பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்.

இதேவேளையில் ஏஐ-க்கு எதிரான Bubble burst நவம்பர் மாதம் ஏற்படும் என கணிக்கப்பட்டு இருக்கும் வேளையில் இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 4600 டாலருக்கும், இந்தியாவில் 10 கிராம் 24 கேரட் தங்கம் 1,60,000 வரையில் உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது என சந்தை வல்லுனர்கள் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+