Gold price: ஒரு சவரன் தங்கம் 70000 ரூபாய்.. வரலாற்றில் முதல் முறையாக.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை..?

தங்கம் விலை 2 நாட்களாக குறைந்து வந்த நிலையில் பலரும் தங்க நகையை வாங்க முடிவு செய்தனர், ஆனால் யாரு கண்ணு பட்டுதுன்னு தெரியல 2 நாள் சரிவை மொத்தமா ஒரே நாளில் விழுங்கும் வகையில் இன்று விலை உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் வரி விதிப்பு தற்போது அமெரிக்கப் பொருளாதாரத்திற்கே பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது என்பது தான் தற்போதைய கள நிலவரமாக உள்ளது.

டிரம்ப் அறிவிக்கும் ஒவ்வொரு அறிவிப்பும் அந்நாட்டின் வர்த்தகத்திற்கும், ஏற்றுமதிக்கும் பிரச்சனையாகி வரும் வேளையில், அமெரிக்கா வர்த்தக போர் தொடுத்துள்ள சீனா சந்தை கணிப்புகளைத் தாண்டி ஜிடிபி வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இதற்கிடையில் டாலர் மதிப்பு குறைந்து தங்கம் விலையைத் தடாலடியாக உயர்த்தியுள்ளது.

Gold price: ஒரு சவரன் தங்கம் ரூ.70000.. வரலாற்றில் முதல் முறையாக! சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?

கடந்த 2 நாட்களில் தங்கம் விலை கிராமுக்கு 50 ரூபாய் குறைந்த நிலையில் இன்று ஒரு நாளில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு 95 ரூபாய் அதிகரித்துள்ளது. இதனால் தங்கத்தை வாங்கத் திட்டமிட்டுள்ளவர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவில் தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வண்ணம் உள்ள வேளையில் ரீடைல் வர்த்தகம் பெரிய அளவில் குறைந்துள்ளது, இதனால் தங்கம் விலை நிர்ணயம் செய்வதில் உள்நாட்டுப் பங்கீடு குறைந்துள்ளது.

ஏப்ரல் 13ஆம் தேதி ஒரு கிராம் 22 கேரட் தங்கம் விலை 8770 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், 2 நாள் சரிவு க்கு பின்பு இன்று பதிவாகியுள்ள அதிரடியான உயர்வு மூலம் ஒரு கிராம் 8815 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரு கிராமுக்கு 165 ரூபாய் வெறும் 3 நாளில் உயர்ந்துள்ளது.

சர்வதேச ஸ்பாட் சந்தையில் ஆசிய வர்த்தக நேரத்தில், ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 3,283-3,284 டாலர் அளவில் வர்த்தகமானது. இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களில் ஒன்று, 2025 ஆம் ஆண்டின் எஞ்சிய காலத்தில் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 1 சதவீதம் வரையில் குறையும் என கணிக்கப்பட்டு உள்ளதால் பத்திர சந்தையில் இருந்து முதலீடுகள் வெளியேறியுள்ளது. இதனால் தங்கம் விலை வேகமாக உயர துவங்கியுள்ளது.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 70520 ரூபாய், மும்பை - 70520 ரூபாய், டெல்லி - 70640 ரூபாய், கொல்கத்தா - 70520 ரூபாய், பெங்களூர் - 70520 ரூபாய், ஹைதராபாத் - 70520 ரூபாய், கேரளா - 70520 ரூபாய், புனே - 70520 ரூபாய், பரோடா - 70560 ரூபாய், அகமதாபாத் - 70560 ரூபாய், ஜெய்ப்பூர் - 70640 ரூபாய், லக்னோ - 70640 ரூபாய், கோயம்புத்தூர் - 70520 ரூபாய், மதுரை - 70520 ரூபாய்.

22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 8,815 ரூபாய், மும்பை - 8,815 ரூபாய், டெல்லி - 8,830 ரூபாய், கொல்கத்தா - 8,815 ரூபாய், பெங்களூர் - 8,815 ரூபாய், ஹைதராபாத் - 8,815 ரூபாய், கேரளா - 8,815 ரூபாய், புனே - 8,815 ரூபாய், பரோடா - 8,820 ரூபாய், அகமதாபாத் - 8,820 ரூபாய், ஜெய்ப்பூர் - 8,830 ரூபாய், லக்னோ - 8,830 ரூபாய், கோயம்புத்தூர் - 8,815 ரூபாய், மதுரை - 8,815 ரூபாய்.

24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 9,617 ரூபாய், மும்பை - 9,617 ரூபாய், டெல்லி - 9,632 ரூபாய், கொல்கத்தா - 9,617 ரூபாய், பெங்களூர் - 9,617 ரூபாய், ஹைதராபாத் - 9,617 ரூபாய், கேரளா - 9,617 ரூபாய், புனே - 9,617 ரூபாய், பரோடா - 9,622 ரூபாய், அகமதாபாத் - 9,622 ரூபாய், ஜெய்ப்பூர் - 9,632 ரூபாய், லக்னோ - 9,632 ரூபாய், கோயம்புத்தூர் - 9,617 ரூபாய், மதுரை - 9,617 ரூபாய்.

18 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,260 ரூபாய், மும்பை - 7,213 ரூபாய், டெல்லி - 7,225 ரூபாய், கொல்கத்தா - 7,213 ரூபாய், பெங்களூர் - 7,213 ரூபாய், ஹைதராபாத் - 7,213 ரூபாய், கேரளா - 7,213 ரூபாய், புனே - 7,213 ரூபாய், பரோடா - 7,217 ரூபாய், அகமதாபாத் - 7,217 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,225 ரூபாய், லக்னோ - 7,225 ரூபாய், கோயம்புத்தூர் - 7,260 ரூபாய், மதுரை - 7,260 ரூபாய்.

10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 26,240 ரூபாய், மும்பை - 26,240 ரூபாய், டெல்லி - 26,240 ரூபாய், கொல்கத்தா - 26,240 ரூபாய், பெங்களூர் - 26,240 ரூபாய், ஹைதராபாத் - 26,240 ரூபாய், கேரளா - 26,240 ரூபாய், புனே - 26,240 ரூபாய், வதோதரா - 26,240 ரூபாய், அகமதாபாத் - 26,240 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 1,10,000 ரூபாய், மும்பை - 1,00,000 ரூபாய், டெல்லி - 1,00,000 ரூபாய், கொல்கத்தா - 1,00,000 ரூபாய், பெங்களூர் - 1,00,000 ரூபாய், ஹைதராபாத் - 1,10,000 ரூபாய், கேரளா - 1,10,000 ரூபாய், புனே - 1,00,000 ரூபாய், பரோடா - 1,00,000 ரூபாய், அகமதாபாத் - 1,00,000 ரூபாய், ஜெய்ப்பூர் - 1,00,000 ரூபாய், லக்னோ - 1,00,000 ரூபாய், கோயம்புத்தூர் - 1,10,000 ரூபாய், மதுரை - 1,10,000 ரூபாய்.

உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 37.20 - 8,442 ரூபாய்
குவைத் - KWD 29.48 - 8,225 ரூபாய்
மலேசியா - MYR 455 - 8,816 ரூபாய்
ஓமன் - OMR 38.15 - 8,480 ரூபாய்
கத்தார் - QAR 362 - 8,497 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 367 - 8,369 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 134 - 8,717 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 358.50 - 8,350 ரூபாய்
அமெரிக்கா - USD 97.50 - 8,343 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 358.50 - 8,350 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 358.50 - 8,350 ரூபாய்
துபாய் (UAE) - AED 358.50 - 8,350 ரூபாய்
புஜைரா (UAE) - AED 358.50 - 8,350 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 358.50 - 8,350 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 358.50 - 8,350 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 362 - 8,497 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 38.15 - 8,480 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 367 - 8,369 ரூபாய்
இங்கிலாந்து - GBP 72.78 - 8,258 ரூபாய்
கனடா - CAD 138.50 - 8,501 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 157.80 - 8,568 ரூபாய்
நேபாளம் - NPR 14,536.94 - 9,074 ரூபாய்

உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 39.70 - 9,009 ரூபாய்
குவைத் - KWD 32.15 - 8,970 ரூபாய்
மலேசியா - MYR 474 - 9,185 ரூபாய்
ஓமன் - OMR 40.75 - 9,057 ரூபாய்
கத்தார் - QAR 388.50 - 9,119 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 397 - 9,053 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 147.30 - 9,582 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 387 - 9,014 ரூபாய்
அமெரிக்கா - USD 104 - 8,899 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 387 - 9,014 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 387 - 9,014 ரூபாய்
துபாய் (UAE) - AED 387 - 9,014 ரூபாய்
புஜைரா (UAE) - AED 387 - 9,014 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 387 - 9,014 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 387 - 9,014 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 388.50 - 9,119 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 40.75 - 9,057 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 397 - 9,053 ரூபாய்
இங்கிலாந்து - GBP 79.40 - 9,009 ரூபாய்
கனடா - CAD 146.25 - 8,977 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 172.20 - 9,350 ரூபாய்
நேபாளம் - NPR 15,801.02 - 9,863 ரூபாய்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+