தங்கம் விலை: இன்று ஒரு சவரன் தங்கம் வாங்க எவ்வளவு பணம் தேவை? விலை உயர்ந்துள்ளதா? குறைந்துள்ளதா?

தொடர்ந்து 4 நாட்களாக விலை உயர்ந்து அதிர்ச்சி தந்த தங்கம் இன்று சற்றே ஆறுதல் தந்திருக்கிறது. வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. அந்த வகையில் சென்னை, கோவை, மதுரை உள்பட தமிழ்நாட்டின் பிரதான நகரங்களில் இன்று தங்கம் விலை என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

சென்னையில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 15 ரூபாய் விலை குறைந்து 13,950 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் 120 ரூபாய் விலை குறைந்துள்ளது. அந்த வகையில் சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,11,600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தங்கம் விலை ஆகஸ்ட் முதல் வாரத்தில் தடாலடியாக உயர்ந்தது. குறிப்பாக கடந்த புதன்,வியாழன், வெள்ளி, சனி என மூன்று நாட்களும் தங்கம் விலை சர்ரென உயர்ந்தது.

தங்கம் விலை: இன்று ஒரு சவரன் தங்கம் வாங்க எவ்வளவு பணம் தேவை? விலை உயர்ந்துள்ளதா? குறைந்துள்ளதா?

அதாவது தங்கம் விலை ஒரு கிராமுக்கு 700 ரூபாயும் ஒரு சவரனுக்கு 5000 ரூபாய்க்கு மேலும் விலை கூடியது. இந்த வாரமும் விலை உயருமோ என மக்கள் கவலைப்பட்ட நிலையில் லேசாக தங்கம் விலை குறைந்துள்ளது. இந்த விலை குறைவு அப்படியே நீடிக்க வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பு.

சென்னை மட்டுமில்லாமல் மதுரை, கோவை, திருச்சி உள்பட தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் 13,950 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,11,600 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. ஒரு சவரன் நகை வாங்கினால் செய்கூலி சேதாரம், ஜிஎஸ்டி சேர்த்து 1.25 லட்சம் ரூபாய் வரை கொடுக்க வேண்டி இருக்கும்.

Also Read

24 கேரட் தங்கத்தை பொறுத்தவரை இன்று ஒரு கிராம் 15,218 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 10 கிராம் 1,52,180 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 11,765 ரூபாய்க்கும் ஒரு சவரன் 94,120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு வாரமாக வெள்ளியின் விலையில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படாமல் இருந்த நிலையில் கடந்த வாரத்தில் மட்டும் மொத்தமாக ஒரு கிராமுக்கு 15 ரூபாயும் ஒரு கிலோவுக்கு 15,000 ரூபாயும் விலை உயர்ந்தது.

Recommended For You

உலக சந்தையில் ஸ்பாட் கோல்டின் விலை ஒரு அவுன்ஸ் 4,330 டாலராக இருக்கிறது. ஒரு அவுன்ஸ் வெள்ளி 63 டாலராக விற்பனை செய்யப்படுகிறது. உலக சந்தையில் தங்கம் விலை நேற்றுடன் ஒபிடுகையில் பெரிய அளவில் மாறவில்லை. இந்தியாவில் எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 10 கிராம் தங்கம் 1,52,200 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. நேற்றை விட இது 500 ரூபாய் அதிகம்.

தங்கம் விலை தற்போது ஒரு வித தடுமாற்ற நிலையில் இருக்கிறது. ஜூன், ஜூலை மாதங்களில் சரிந்த தங்கம் ஆகஸ்ட் முதல் வாரத்திலேயே ஏற்றம் கண்டது. ஆனால் இரண்டாவது வாரத்தில் சற்றே விலை சரிவுடனே தொடங்கியுள்ளது. ஈரான் போர், கச்சா எண்ணெய் விலை ஆகியவற்றின் போக்கை பொறுத்து தான் இனி தங்கம் விலை மாறும்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+