இந்தியாவின் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் (MCX) சந்தையில் புதன்கிழமை தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பதிவான உயர்வை மொத்தமாகக் குறைத்துள்ளது. இதனால் தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும் எனத் திட்டமிடும் இந்திய மிடில் கிளாஸ் மக்களுக்கு ஜாக்பாட் ஆக மாறியுள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 2750 ரூபாய் குறைந்து 90,150 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 3000 ரூபாய் குறைந்து 98,350 ரூபாயாகக் குறைந்துள்ளது.

இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரன் 2200 ரூபாய் குறைந்து 72,120 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை நேற்றைய அளவில் இருந்து மாறாமல் 1,01,000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 220 ரூபாய் குறைந்து 26,380 ரூபாயாக உள்ளது.
டாலர் மதிப்பில் ஏற்பட்ட உயர்வு, அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தக பதற்றம் குறையும் என்ற நம்பிக்கை, டிரம்ப் - பெடரல் ரிசர்வ் வங்கி தலைவர் ஜெரோம் பவல் மத்தியிலான கோல்டு வார் முடிந்து நிலையில் பாதுகாப்பு முதலீடாகக் கருதப்படும் தங்கம் மீதான ஈர்ப்பு குறைந்தது முதலீட்டாளர்கள் ரிஸ்க் எடுத்து பங்குச்சந்தையில் முதலீடு செய்ய தயாராகியுள்ளனர். இதன் வெளிப்பாடு காரணமாகவே தற்போது தங்கம் விலை குறைந்துள்ளது.
சர்வதேச ஸ்பாட் சந்தை: நேற்றைய அமெரிக்க சந்தை வர்த்தக நேரத்தில் ஒரு அவுனஸ் 24 கேரட் தங்கம் விலை 3496 டாலர் வரையில் உயர்ந்த நிலையில் டிரம்ப் வெளியிட்ட ஒரு அறிவிப்பால் தங்கம் விலை மளமளவெனச் சரியத் துவங்கியது. இன்றைய சர்வதேச ஸ்பாட் வர்த்தகத்தில் ஒரு அவுன்ஸ் 3318 டாலர் வரையில் குறைந்துள்ளது. தற்போதைய சூழ்நிலையைப் பார்க்கும் போதும் தங்கம் விலை மேலும் குறையும் என கணிக்கப்பட்டு உள்ளது. டிரம்ப் அப்படி என்ன சொன்னார்..?
MCX-ல் தங்க விலை: செவ்வாய்க்கிழமை முடிவு விலையான 10 கிராமுக்கு ரூ.97,350-லிருந்து ரூ.840 குறைந்து, 0.86 சதவீத சரிவுடன் ரூ.96,500-ல் தொடங்கியது. ஆனால் இன்றைய வர்த்தகத்தில் குறைந்த பட்சமாக 10 கிராமுக்கு ரூ.95,457 வரையிலான சரிவைப் பதிவு செய்தது.
டிரம்ப் - ஜெரோம் பவல் விவகாரம்: அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவலை பதவி நீக்கம் செய்யப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார். ஆனால், தற்போது டிரம்ப் மிரட்டல் எல்லாம் எந்த திட்டமும் இல்லை என வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசும் போது கூறினார்.
ஜெரோம் பவலை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் எங்களுக்கு இல்லை என்றும் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டு உள்ளது. இதேபோல் ஜெரோம் பவல் வட்டி விகிதத்தை குறைப்பதில் ஆக்டிவ் ஆக செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இதன் மூலம் முதலீட்டாளர்கள் மத்தியில் பங்குச்சந்தை முதலீட்டு மீதான நம்பிக்கை அதிகரித்து.
அமெரிக்க - சீனா: உலகின் இரு மிகப்பெரிய பொருளாதார நாடான அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயான வர்த்தக பதற்றங்கள் குறைய வாய்ப்பிருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கக் கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் (Scott Bessent) ஜேபி மோர்கன் சேஸ் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ஒரு முதலீட்டாளர்கள் குழுவிடம் பேசும்போது இரு நாடுகளுக்கும் இடையே நடந்து வரும் வர்த்தகப் போர் (Trade War) விரைவில் தணிய வாய்ப்புள்ளது என்றும் விரைவில் வர்த்தக போர் முடிவுக்கு வரும் (De-escalation) என்று கூறியிருக்கிறார். இதேபோல் தற்போது நடக்கும் பேச்சுவார்த்தை எப்போது முடியும், யாருக்கு சாதகமாக இருக்கும் என்பது தெரியவில்லை என்பதையும் தெரிவித்துள்ளார். இதுவும் பங்குச்சந்தை முதலீட்டை ஊக்குவித்து தங்கம் மீதான முதலீட்டைக் குறைத்துள்ளது.
வெள்ளி விலையும் சரிவு: தங்கத்தோடு சேர்ந்து, வெள்ளி விலையும் MCX சந்தையில் சரிவை பதிவு செய்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி விலை 0.47 சதவீதம் குறைந்து ரூ.96,803-ஆக வர்த்தகமானது.
தங்க விலைகளின் இந்த சரிவு தொடருமா இல்லை மறுபடியும் உயருமா என்பது, அமெரிக்கா-சீனா வர்த்தக ஒப்பந்தத்தின் முடிவுகளைப் பொறுத்து இருக்கிறது. ட்ரம்ப் அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகளும், ஃபெடரல் ரிசர்வின் முடிவுகளும் இதில் முக்கிய பங்கு வகிக்கும்.
More From GoodReturns

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

மதுரையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: மேலும் விலை ஏறுமா?

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?



Click it and Unblock the Notifications