தங்கம் விலை வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் மீண்டும் வரலாறு காணாத உச்சத்தை எட்டி சாமானிய மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. டிரம்ப் உலக நாடுகள் மீதான வரியை குறைத்தாலும், சீனா உடனான வர்த்தக போர் பூதாகரமாக வெடித்துள்ளது.
இதனால் பொருளாதார மந்தநிலை குறித்த அச்சம் தொடர்ந்து அதிகரித்து முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான முதலீடான தங்கத்தில் அதிகளவில் வாங்கி வருகின்றனர். இதன் காரணமாகவே தங்கம் விலை 3வது நாளாக தடாலடியாக உயர்ந்து வருகிறது.

சர்வதேச சந்தையில் வெள்ளிக்கிழமை வர்த்தகம் துவங்கியதும் ஸ்பாட் தங்கம் விலை 1% அதிகரித்து ஒரு அவுன்ஸ் 3,205.53 டாலராக உயர்ந்தது, ஆசிய சந்தை வர்த்தகத்தில் 3,218.43 டாலர் என்ற வரலாற்று உச்சத்தைத் தொட்டது. இந்த வாரம் மட்டும் தங்கத்தின் விலை 5% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
இந்திய ரீடைல் சந்தையில் 22 கேரட் தங்கம் விலை 10 கிராம் 1850 ரூபாய் உயர்ந்து 87,450 ரூபாயாக உயர்ந்துள்ளது, இதுவே ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1480 ரூபாய் உயர்ந்து 69,960 ரூபாயாக உள்ளது. 24 கேரட் தங்கம் விலை 10 கிராம் 2020 ரூபாய் உயர்ந்து 95,400 ரூபாயாக உள்ளது.
தங்கம் விலை உயர முக்கிய காரணமாக இருப்பது அமெரிக்க டாலர் மதிப்பு குறைந்தது, அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போர் தீவிரமடைந்தது, மற்றும் மார்ச் மாதத்தில் அமெரிக்க நுகர்வோர் பணவீக்கம் சற்றும் எதிர்பாராத விதமாக குறைந்தது தான்.
அமெரிக்க நுகர்வோர் விலை குறியீட்டு (CPI) பணவீக்கம் மார்ச் மாதத்தில் 2.8% லிருந்து 2.4% ஆக குறைந்தது, சந்தை கணிப்பு 2.6 சதவீதமாக இருந்தது. ஆனால் வரும் மாதத்தில் பணவீக்கம் பெரிய அளவில் உயரும் என கணிப்புகள் தொடர்ந்து உறுதி செய்யப்பட்டு வருகிறது. பொதுவாக அரசியல் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை, பணவீக்கம் ஆகியவற்றுக்கு எதிராகத் தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு மட்டும் தங்கத்தின் மதிப்பு 21% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது, தங்கம் விலை இந்த ஆண்டு முடிவிற்குள் 3500 டாலரை தொடலாம் என கணிக்கப்பட்டு உள்ளது.
தங்கம் மட்டுமல்லாமல், மற்ற விலைமதிப்பற்ற உலோகங்களின் விலையும் அதிகரித்தது. ஸ்பாட் வெள்ளி 0.3% அதிகரித்து ஒரு அவுன்ஸ் 31.28 டாலராகவும், பிளாட்டினம் 0.1% அதிகரித்து ஒரு அவுன்ஸ் 938.35 டாலராகவும், பல்லாடியம் 0.8% அதிகரித்து ஒரு அவுன்ஸ் 915.75 டாலராகவும் உயர்ந்துள்ளது.
தங்கத்தின் விலை இந்த ஆண்டு கணிசமாக உயருவதற்குப் பல காரணங்கள் உள்ளன. இதில் முக்கியமாக உலகளாவிய மத்திய வங்கிகள் தங்கத்தை அதிகமாக வாங்குகின்றனர். இதை தொடர்ந்து அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. ஜூன் மாத கூட்டத்தில் வட்டி விகித குறைப்ப துவங்கி இந்த ஆண்டு இறுதிக்குள் 1 சதவீதம் வரையில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தைக் குறைக்கும் என கணிக்கப்பட்டு வருகிறது.
இதோடு மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவில் புவிசார் அரசியல் பிரச்சனை, வர்த்தக நிலையற்ற தன்மை, தங்கத்தை வைத்துச் செய்யப்படும் வர்த்தக பரிமாற்றங்கள் அதிகரிப்பு என தங்கம் மீதான முதலீட்டை அதிகரிக்கப் பல காரணங்கள் உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலையில் நடந்த திடீர் டிவிஸ்ட்!! 6 மணி நேரத்தில் நடந்த அதிரடி மாற்றம்!!

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?



Click it and Unblock the Notifications