மே மாதத்தின் முதல் நாளிலேயே விலை சரிந்து மகிழ்ச்சியை தந்த தங்கம் இன்றைய தினம் விலை உயர்வு கண்டிருக்கிறது. வாரத்தின் இறுதி நாளான இன்று சென்னையில் தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறது. இன்று சனிக்கிழமை என்பதால் ஞாயிற்றுக்கிழமையும் விலை மாற்றம் இல்லாமல் இப்படியே விற்பனை செய்யப்படும்.
சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 180 ரூபாய் விலை சரிவடைந்து 13,920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது ஒரு சவரன் தங்கம் 1,11,360 ரூபாய்க்கு விற்பனையானது. அதுவே இன்றைய தினம் ஒரு கிராம் தங்கம் 80 ரூபாய் விலை உயர்ந்து 14,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 640 ரூபாய் விலை கூடி 1,12,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 10 கிராம் தங்கம் 800 ரூபாய் விலை உயர்ந்து 1, 40,000 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

ஏப்ரல் மாதம் முழுவதும் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்த தங்கம் மே மாதத்திலும் அதே போக்கையே கடைப்பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் மே ஒன்றாம் தேதியன்று விலை குறைந்த தங்கம் மே இரண்டாம் தேதி அன்று விலை உயர்ந்துள்ளது. இனிவரும் நாட்களில் ஈரான் போர் எதை நோக்கி செல்கிறதோ அதை பொறுத்து தங்கம் விலையில் நாம் மாற்றத்தை எதிர்பார்க்கலாம். தற்போதைக்கு குறிப்பிட்ட வரம்பிலேயே விலை ஏறி இறங்கும் என்பதே நிபுணர்களின் கணிப்பாக உள்ளது.
24 கேரட் சுத்த தங்கம் ஒரு கிராம் 87 ரூபாய் விலை உயர்ந்து 15,273 ரூபாய்க்கும் ஒரு சவரன் 696 ரூபாய் விலை உயர்ந்து 1,22,184 ரூபாய்க்கும் 10 கிராம் 870 ரூபாய் விலை கூடி 1,52,230 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 கேரட் தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராம் 11,680 ரூபாய்க்கும் ஒரு சவரன் 560 ரூபாய் விலை உயர்ந்து 93,440 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
சென்னை நகரில் இன்றைய தினம் வெள்ளியின் விலை உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி 265 ரூபாய்க்கு விற்பனையானது அதுவே இன்று ஐந்து ரூபாய் விலை உயர்ந்து 270 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது ஒரு கிலோ வெள்ளி 5000 ரூபாய் விலை உயர்ந்து 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தங்கம், வெள்ளி விலைகள் ஜனவரி மாத உச்சத்திற்கு பிறகு திருத்தத்தில் தான் உள்ளன. இன்னும் விலை குறையட்டும் என காத்திருக்காமல் இப்போதே முதலீடு செய்து வைத்தால் அடுத்த சில ஆண்டுகளில் சிறந்த லாபம் பார்க்க முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

