தங்கம் விலை 2 மாத சரிவு.. செம சான்ஸ்..சென்னை, கோவை, மதுரையில் ஆபரண தங்கம் விலை என்ன..?

இந்திய ரீடைல் சந்தையில் தங்கம் விலை நிர்ணயம் செய்வதில் சர்வதேச சந்தை விலையும், டாலர் மதிப்பும் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், இன்று அமெரிக்க அரசின் கடன் வரம்பை உயர்த்தும் முடிவுக்கும், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு ஆகியவற்றின் காரணமாக தங்கம் விலை 2 மாத சரிவை எட்டும் அளவுக்கு நெருங்கியுள்ளது.

இதனால் தங்கம் வாங்க திட்டமிடுவோர் இந்த விலை சரிவை பயன்படுத்திக்கொள்வது நல்லது. இதேவேளையில் நீண்ட கால அடிப்படையில் தங்கம் வாங்க திட்டமிடுவோர், தங்கம் விலையில் நிலையற்ற தன்மை உணர்ந்து வாங்குவதும், காத்திருப்பதும் அவரவர் முடிவு. ஜெர்மனி ரெசிஷனுக்கு நுழைந்த நிலையில் தங்கம் பாதுகாப்பான முதலீடாக சிலருக்கு தோன்றினாலும் அதிகப்படியான முதலீடு பங்குச்சந்தையிலும், பத்திர சந்தையிலும் குவிந்து வருகிறது.

தங்கம் விலை 2 மாத சரிவு.. செம சான்ஸ்..சென்னை, கோவை, மதுரையில் ஆபரண தங்கம் விலை என்ன..?

வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை நேற்றைய அதிகப்படியான விலையான 1962 டாலரை ஒப்பிடுகையில் தற்போது 1938 டாலர் நிலையில் துவங்கியது. ஆனால் மாலை வர்த்தகத்தில் 1956 டாலர் வரையில் உயர்ந்தது.

இதேபோல் எம்சிஎக்ஸ் சந்தையின் மாலை வர்த்தகத்தில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.18 சதவீதம் வரையில் உயர்ந்து 59,568 ரூபாய் வரையில் உயர்ந்தது. இதேபோல் 1 கிலோ வெள்ளி விலை 0.92 சதவீதம் உயர்ந்து 70,887 ரூபாயாக உயர்ந்துள்ளது. எம்சிஎக்ஸ் சந்தையின் விலைகள் அனைத்தும் பியூச்சர்ஸ் சந்தையின் ஆர்டர்கள் விலை.

இன்று ரீடைல் சந்தையில் தங்கம் விலை இந்திய அளவில் சராசரியாக, 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 150 ரூபாய் சரிந்து 55,650 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 160 ரூபாய் சரிந்து 60,710 ரூபாய் வரையில் சரிந்துள்ளது.

மேலும் ரீடைல் சந்தையில் இன்று தங்கம் விலை இந்திய அளவில் சராசரியாக ஆபரண தங்கம் விலை ஒரு சவரன்-க்கு 120 ரூபாய் சரிந்து 44,520 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை சராசரியாக இந்திய அளவில் 150 ரூபாய் குறைந்து 72,900 ரூபாயாக உள்ளது.

22 கேரட் 10 கிராம் தங்கம் விலை :

இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 56,050 ரூபாய், மும்பை - 55,650 ரூபாய், டெல்லி - 55,800 ரூபாய், கொல்கத்தா - 55,650 ரூபாய், பெங்களூர் - 55,700 ரூபாய், ஹைதெராபாத் - 55,650 ரூபாய், கேரளா - 55,650 ரூபாய், புனே - 55,650 ரூபாய், பரோடா - 55,700 ரூபாய், அகமதாபாத் - 55,700 ரூபாய், ஜெய்ப்பூர் - 55,800 ரூபாய், லக்னோ - 55,800 ரூபாய், கோயம்புத்தூர் - 56,050 ரூபாய், மதுரை - 56,050 ரூபாய்.

24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 61,150 ரூபாய், மும்பை - 60,710 ரூபாய், டெல்லி - 60,860 ரூபாய், கொல்கத்தா - 60,710 ரூபாய், பெங்களூர் - 60,760 ரூபாய், ஹைதெராபாத் - 60,710 ரூபாய், கேரளா - 60,710 ரூபாய், புனே - 60,710 ரூபாய், பரோடா - 60,760 ரூபாய், அகமதாபாத் - 60,760 ரூபாய், ஜெய்ப்பூர் - 60,860 ரூபாய், லக்னோ - 60,860 ரூபாய், கோயம்புத்தூர் - 61,150 ரூபாய், மதுரை - 61,150 ரூபாய்.

தங்கம் விலை 2 மாத சரிவு.. செம சான்ஸ்..சென்னை, கோவை, மதுரையில் ஆபரண தங்கம் விலை என்ன..?

1 சவரன் தங்கம் விலை :

இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 44840 ரூபாய், மும்பை - 44520 ரூபாய், டெல்லி - 44640 ரூபாய், கொல்கத்தா - 44520 ரூபாய், பெங்களூர் - 44560 ரூபாய், ஹைதெராபாத் - 44520 ரூபாய், கேரளா - 44520 ரூபாய், புனே - 44520 ரூபாய், பரோடா - 44560 ரூபாய், அகமதாபாத் - 44560 ரூபாய், ஜெய்ப்பூர் - 44640 ரூபாய், லக்னோ - 44640 ரூபாய், கோயம்புத்தூர் - 44840 ரூபாய், மதுரை - 44840 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை :

இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 76200 ரூபாய், மும்பை - 72900 ரூபாய், டெல்லி - 72900 ரூபாய், கொல்கத்தா - 72900 ரூபாய், பெங்களூர் - 76200 ரூபாய், ஹைதெராபாத் - 76200 ரூபாய், கேரளா - 76200 ரூபாய், புனே - 72900 ரூபாய், பரோடா - 72900 ரூபாய், அகமதாபாத் - 72900 ரூபாய், ஜெய்ப்பூர் - 72900 ரூபாய், லக்னோ - 72900 ரூபாய், கோயம்புத்தூர் - 76200 ரூபாய், மதுரை - 76200 ரூபாய்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+