தங்கம் விலையில் திடீரென சரிவு.. அட இதுதான் காரணமா.. அப்போ இனி தொடர்ந்து குறையுமா..?

தங்கம் விலையில் வாரத்தின் கடைசி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை ஆசிய வர்த்தக நேரத்தில் ஒரு லேசான சரிவு கண்டுள்ளது. இந்த சரிவுக்கு முக்கிய காரணம், அமெரிக்க டாலரின் மதிப்பு வலுப்பெற்றுள்ளது, இந்தியாவில் தங்கத்திற்கான டிமாண்ட் குறைந்ததும் தான்.

கடந்த மூன்று நாட்களாக டாலரின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது, அதுவும் குறிப்பாக அமெரிக்க பெடரல் ரிசர்வ்-ன் கொள்கை முடிவுகளுக்குப் பின்பு டாலர் மதிப்பீட்டைக் கணக்கிடும் DXY குறியீடு 103 டாலரில் இருந்து 104 டாலராக அதிகரித்துள்ளது. பல மாதங்களுக்குப் பிறகு டாலரின் மதிப்பு மீண்டு வருவது, தங்கத்தின் விலையில் அழுத்தத்தை ஏற்படுத்தியது.

தங்கம் விலையில் திடீரென சரிவு.. அட இதுதான் காரணமா.. அப்போ இனி தொடர்ந்து குறையுமா..?

சர்வதேச சந்தையைப் பொறுத்த வரையில் டாலரின் மதிப்பு உயரும்போது தங்கத்தின் விலை குறையும், ஆனால் இந்தியாவில் இதற்கு நேர் எதிர். இந்தியாவில் விற்கப்படும் தங்கம் 90 சதவீதம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை என்பதாலும், அவை டாலர் மதிப்பில் வாங்கப்படுவதாலும், தங்கம் விலையில் டாலர் மதிப்பின் தாக்கம் எப்போதும் அதிகமாகவே இருக்கும்.

ஆனால் இந்தியாவில் தற்போது தங்கம் விலை அதிகமாக இருக்கும் காரணத்தால் மக்கள் வாங்குவதைக் குறைந்துள்ளனர். இதனால் சந்தையில் தங்கத்திற்கான டிமாண்ட் என்பது பெரிய அளவில் குறைந்துள்ளது. இதேபோல் நேற்றைய சர்வதேச சந்தை வர்த்தகத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 3040 டாலரில் இருந்து 3024 டாலருக்கு குறைந்தது. இவ்விரு காரணத்தால் தற்போது இந்திய ரீடைல் சந்தையில் தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் வரையில் குறைந்துள்ளது.

இதோடு டாலர் மதிப்பு அதிகரிக்க முக்கியமான காரணம் டொனால்டு டிரம்ப், உலக நாடுகள் மீது வரியை விதிக்க காத்திருக்கும் வேளையில், பல நாடுகள் அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து வரி விதிப்புக்கு முன்பாக பொருட்களையும், சேவைகளையும் வாங்கி வருகின்றன. இதனால் சந்தையில் டாலருக்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகப்படியான இறக்குமதி வரிகளை விதிப்பதில் கடந்த முறைபோல் பின்வாங்கமாட்டாள் என்ற உறுதியான கருத்து முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவுகிறது. ஏற்கனவே டிரம்ப் அரசு பிப்ரவரி மாதம் முதல் ஸ்டீல் மற்றும் அலுமினியத்திற்கு 25% வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய வரி தற்போது நடைமுறையில் உள்ள வரியின் மீது கூடுதலாக விதிக்கப்பட உள்ளது. இது வர்த்தகர்களைக் கடுமையாகப் பாதிக்குப் பொருட்களின் விலையை உயர்த்தும். இதனால் பணவீக்கம் அதிகரித்து பொருளாதார வளர்ச்சி சரியும் என முதலீட்டாளர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள இந்த சரிவு தொடர்வதற்கான வாய்ப்புகள் குறைவு, ஆனால் அடுத்த சில நாட்களுக்கு மந்த நிலைக்கு தள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து 66,160 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை 440 ரூபாய் வரையில் குறைந்து 90,220 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இதோடு தங்கம் விலையை புவிசார் அரசியல் பிரச்சனைகளும் கடுமையாகப் பாதித்து வருகிறது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. உக்ரைன், ரஷ்யாவின் சரடோவ் பிராந்தியத்தில் உள்ள ஏங்கல்ஸ் விமான தளத்தை டிரோன்கள் மூலம் தாக்கியது. இதனால் அங்கு தீ விபத்து மற்றும் வெடிப்புகள் ஏற்பட்டன. இதற்கு பதிலடியாக ரஷ்யா, உக்ரைன் மீது ஏராளமான டிரோன்களை ஏவியுள்ளது. இந்த மோதல் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

உக்ரைன் விவகாரம் குறித்து ரஷ்ய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் சவுதி அரேபியாவில் திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இது சர்வதேச அளவில் பதற்றத்தைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல் மத்திய கிழக்கிலும் பதற்றம் நிலவுகிறது, இஸ்ரேல் காசா மீது மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. ஜனவரி மாத இறுதியில் ஹமாஸுடன் போடப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறியுள்ளது. ஹமாஸ் இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசியுள்ளது. இருப்பினும், இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

கடைசியாக கச்சா எண்ணெய் விலையும் மெல்ல மெல்ல உயர துவங்கியுள்ளது, இதனால் அடுத்த சில நாட்களில் தங்கம் விலை சர்வதேச சந்தையில் 3,000 டாலர் என்ற அளவில் நிலைபெறலாம் என்ற கணிப்பும் உள்ளது. தற்போதுள்ள 3030 டாலர் விலையில் இருந்து 30 டாலர் குறைந்து 3000 வந்தால் இந்தியாவிலும் தங்கம் விலை குறையும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+