இந்திய மக்களின் முக்கிய முதலீடான தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது பலரையும் சோகத்தில் ஆழ்த்து வந்த நிலையில் இன்று ஒரே நாளில் 1800 ரூபாய் குறைந்துள்ளது பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 60 நாடுகள் மீது ரெசிப்ரோக்கல் வரி விதித்ததைத் தொடர்ந்து சர்வதேச வர்த்தகத்தில் பெரும் பாதிப்பு உருவாகியுள்ளது மட்டும் அல்லாமல் அமெரிக்கப் பொருளாதாரத்தில் பெரும் மந்த நிலை இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
இதனால் அனைத்து தரப்பு முதலீட்டாளர்களுக்கு தங்களுடைய முதலீட்டை அனைத்து பிரிவில் இருந்தும் வெளியேற்றி வருகின்றனர், இதில் முக்கியமாக தங்கமும் ஒன்றாக உருவெடுத்துள்ளது. வியாழக்கிழமை அமெரிக்கப் பங்குச்சந்தை, பத்திர முதலீடு, டாலர் மதிப்பு என சகலமும் சரிந்துள்ளது. இந்த நிலையில் தங்கத்தில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள் அதன் வரலாற்று உச்ச அளவில் இருந்து லாபத்தை பார்க்க விற்பனை செய்துள்ளனர்.

இதன் எதிரொலியாக இந்தியச் சந்தையில் தங்கம் விலை 22 கேரட் தங்கம் கிராமுக்கு 160 ரூபாயும், 24 கேரட் 174 ரூபாயும் குறைந்துள்ளது. பல வாரங்களாகத் தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று அதிரடியாகக் குறைந்து மக்களைத் திக்குமுக்காட வைத்துள்ளது. சொல்லப்போனால் இது தங்கம் வாங்குவோருக்கு இது நல்ல வாய்ப்பாக இருந்தாலும், சந்தை நிலவரம் மாறுபட்டு இருக்கும் காரணத்தால் காத்திருந்து தங்கத்தின் போக்கைக் கவனித்து முதலீடு செய்வது உத்தமம்.
இன்று சென்னை நகை கடையில் ஒரு சவரன் தங்கம் விலை 1280 ரூபாய் குறைந்து 67,200 ரூபாயாக உள்ளது. இதன் மூலம் கடந்த 3 நாளில் பதிவான உயர்வை ஒரே நாளில் குறைத்துள்ளது.
சர்வதேச ஸ்பாட் சந்தையில் நேற்று ஆசிய மற்றும் ஐரோப்பிய வர்த்தக நேரத்தில் தங்கம் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு இதன் விலை ஒரு அவுன்ஸ்-க்கு 3125 டாலரில் இருந்து 3060 டாலர் வரையில் சரிந்தது. இதன் மூலம் பல தங்க முதலீட்டாளர்கள் விற்பனை செய்தது மூலம் லாபம் அடைந்தனர். ஆனால் அமெரிக்க வர்த்தகம் துவங்கும் போது கதை மொத்தமாக மாறியுள்ளது.
டிரம்ப் வரி விதிப்பால் அமெரிக்கப் பொருளாதாரம் ரெசிஷனுக்கு தள்ளப்படும் என்ற அச்சம் அதிகரித்துள்ள வேளையில் ஆசிய மற்றும் ஐரோப்பிய முதலீட்டாளர்கள் விற்பனை செய்த தங்கத்தை அமெரிக்க முதலீட்டாளர்கள் வாங்கி குவித்தனர். இதனால் 3060 டாலருக்குக் குறைந்த தங்கம் அமெரிக்க வர்த்தகத்தில் 3131 டாலருக்கு உயர்ந்தது தொடர்ந்து 3111 டாலருக்கு முடிந்தது.
இதைத் தொடர்ந்து ஏப்ரல் 4ஆம் தேதி ஆசியச் சந்தை வர்த்தகம் துவங்கியதும் மீண்டும் தங்கம் விற்பனை அதிகரித்து விலை குறையத் துவங்கியது. இதனால் அமெரிக்கப் பொருளாதாரம் மற்றும் சர்வதேச வர்த்தகம் நிலை பெறும் வரையில் தங்கம் விலையில் அதிகப்படியான தடுமாற்றம் இருக்கும். தற்போது டாலர் மதிப்பு வேகமாகக் குறைந்து வருவதால் தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் குறையும்.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 67200 ரூபாய், மும்பை - 67200 ரூபாய், டெல்லி - 67320 ரூபாய், கொல்கத்தா - 67200 ரூபாய், பெங்களூர் - 67200 ரூபாய், ஹைதராபாத் - 67200 ரூபாய், கேரளா - 67200 ரூபாய், புனே - 67200 ரூபாய், பரோடா - 67240 ரூபாய், அகமதாபாத் - 67240 ரூபாய், ஜெய்ப்பூர் - 67320 ரூபாய், லக்னோ - 67320 ரூபாய், கோயம்புத்தூர் - 67200 ரூபாய், மதுரை - 67200 ரூபாய்.
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 8,400 ரூபாய், மும்பை - 8,400 ரூபாய், டெல்லி - 8,415 ரூபாய், கொல்கத்தா - 8,400 ரூபாய், பெங்களூர் - 8,400 ரூபாய், ஹைதராபாத் - 8,400 ரூபாய், கேரளா - 8,400 ரூபாய், புனே - 8,400 ரூபாய், பரோடா - 8,405 ரூபாய், அகமதாபாத் - 8,405 ரூபாய், ஜெய்ப்பூர் - 8,415 ரூபாய், லக்னோ - 8,415 ரூபாய், கோயம்புத்தூர் - 8,400 ரூபாய், மதுரை - 8,400 ரூபாய்.
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 9,164 ரூபாய், மும்பை - 9,164 ரூபாய், டெல்லி - 9,179 ரூபாய், கொல்கத்தா - 9,164 ரூபாய், பெங்களூர் - 9,164 ரூபாய், ஹைதராபாத் - 9,164 ரூபாய், கேரளா - 9,164 ரூபாய், புனே - 9,164 ரூபாய், பரோடா - 9,169 ரூபாய், அகமதாபாத் - 9,169 ரூபாய், ஜெய்ப்பூர் - 9,179 ரூபாய், லக்னோ - 9,179 ரூபாய், கோயம்புத்தூர் - 9,164 ரூபாய், மதுரை - 9,164 ரூபாய்.
18 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,920 ரூபாய், மும்பை - 6,873 ரூபாய், டெல்லி - 6,885 ரூபாய், கொல்கத்தா - 6,873 ரூபாய், பெங்களூர் - 6,873 ரூபாய், ஹைதராபாத் - 6,873 ரூபாய், கேரளா - 6,873 ரூபாய், புனே - 6,873 ரூபாய், பரோடா - 6,877 ரூபாய், அகமதாபாத் - 6,877 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,885 ரூபாய், லக்னோ - 6,885 ரூபாய், கோயம்புத்தூர் - 6,920 ரூபாய், மதுரை - 6,920 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 25,760 ரூபாய், மும்பை - 25,760 ரூபாய், டெல்லி - 25,760 ரூபாய், கொல்கத்தா - 25,760 ரூபாய், பெங்களூர் - 25,760 ரூபாய், ஹைதராபாத் - 25,760 ரூபாய், கேரளா - 25,760 ரூபாய், புனே - 25,760 ரூபாய், வதோதரா - 25,760 ரூபாய், அகமதாபாத் - 25,760 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 1,08,000 ரூபாய், மும்பை - 99,000 ரூபாய், டெல்லி - 99,000 ரூபாய், கொல்கத்தா - 99,000 ரூபாய், பெங்களூர் - 99,000 ரூபாய், ஹைதராபாத் - 1,08,000 ரூபாய், கேரளா - 1,08,000 ரூபாய், புனே - 99,000 ரூபாய், பரோடா - 99,000 ரூபாய், அகமதாபாத் - 99,000 ரூபாய், ஜெய்ப்பூர் - 99,000 ரூபாய், லக்னோ - 99,000 ரூபாய், கோயம்புத்தூர் - 1,08,000 ரூபாய், மதுரை - 1,08,000 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 36.10 - 8,148 ரூபாய்
குவைத் - KWD 28.52 - 7,888 ரூபாய்
மலேசியா - MYR 438 - 8,428 ரூபாய்
ஓமன் - OMR 36.80 - 8,133 ரூபாய்
கத்தார் - QAR 353 - 8,239 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 354 - 8,027 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 130.10 - 8,310 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 346 - 8,016 ரூபாய்
அமெரிக்கா - USD 94.50 - 8,038 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 346 - 8,016 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 346 - 8,016 ரூபாய்
துபாய் (UAE) - AED 346 - 8,016 ரூபாய்
புஜைரா (UAE) - AED 346 - 8,016 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 346 - 8,016 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 346 - 8,016 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 353 - 8,239 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 36.80 - 8,133 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 354 - 8,027 ரூபாய்
இங்கிலாந்து - GBP 69.91 - 7,795 ரூபாய்
கனடா - CAD 136.25 - 8,222 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 153 - 8,119 ரூபாய்
நேபாளம் - NPR 13,913.82 - 8,709 ரூபாய்
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 38.50 - 8,690 ரூபாய்
குவைத் - KWD 31.12 - 8,607 ரூபாய்
மலேசியா - MYR 452 - 8,698 ரூபாய்
ஓமன் - OMR 39.30 - 8,685 ரூபாய்
கத்தார் - QAR 378.50 - 8,834 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 383 - 8,685 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 143.40 - 9,159 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 373.50 - 8,653 ரூபாய்
அமெரிக்கா - USD 101 - 8,591 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 373.50 - 8,653 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 373.50 - 8,653 ரூபாய்
துபாய் (UAE) - AED 373.50 - 8,653 ரூபாய்
புஜைரா (UAE) - AED 373.50 - 8,653 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 373.50 - 8,653 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 373.50 - 8,653 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 378.50 - 8,834 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 39.30 - 8,685 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 383 - 8,685 ரூபாய்
இங்கிலாந்து - GBP 76.26 - 8,503 ரூபாய்
கனடா - CAD 143.75 - 8,675 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 166.90 - 8,857 ரூபாய்
நேபாளம் - NPR 15,123.72 - 9,466 ரூபாய்
More From GoodReturns

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு குட் நியூஸ்!! உலக சந்தையில் நடந்த பெரிய மாற்றம்!!

தங்கம் விலை தடாலடி சரிவு! சாமானியர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பா? அல்லது எச்சரிக்கையா?

சர்ரென சரிந்த தங்கம், வெள்ளி விலை..!! ரூட்டு மாறுது.. இது தான் நல்ல சான்ஸ் மக்களே!!

தொடர்ந்து சரியும் தங்கம், வெள்ளி விலை: இனி வரும் நாட்களில் விலை எப்படி இருக்கும்?

தங்கத்தைவிட வெள்ளி லாபமா? ரேஷியோ 72-ஐ தாண்டினால் என்னவாகும்?டாட்டா மியூச்சுவல் தரும் அப்டேட்?

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை என்ன? நகை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை

ஈரோடு மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியது!! இனி கோவை மக்கள் ஈரோடுக்கு படையெடுப்பாங்க!!

தங்கம் இந்த லெவலுக்கு வந்தால் மட்டும் வாங்குங்க.. முதலீட்டாளர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் முக்கிய அட்வைஸ்..!

Dubai: தள்ளுபடி விலையில் விற்கப்படும் தங்கம்.. துபாயில் மட்டும் ஏன் இப்படி..?

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

PPF Vs SIP: 10 வருஷத்துல யாரு கிங்? ரூ.1.5 லட்சத்தை எதில் போட்டால் கோடீஸ்வரர் ஆகலாம்?



Click it and Unblock the Notifications