சீன அரசு அந்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த புதிய நிதியுதவி திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டு இருக்கும் வேளையில், இஸ்ரேல் - ஹமாஸ் போர் மற்றும் அமெரிக்க பொருளாதாரம் பிரச்சனைக்கு மத்தியில் தங்கம் விலை சரிந்துள்ளது.
ஆசிய சந்தையில் பொருளாதார சரிவுக்கு முக்கிய காரணமாக இருப்பது சீன பொருளாதார மந்தநிலை தான், இதை களையெடுக்கும் விதிமாக சீனாவின் அறிவிப்பு அமைந்துள்ள காரணத்தால் ஆசிய சந்தையில் இன்று முதலீடுகள் குவிய துவங்கியுள்ளது.

இதன் எதிரொலியா வாரத்தின் முதல் நாளான இன்று சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வண்ணம் 1932 டாலரில் இருந்து 1914 டாலரில் இருந்து சரிந்துள்ளது. இதன் தாக்கம் இந்திய சந்தையிலும் எதிரொலித்துள்ளது.
எம்சிஎக்ஸ் சந்தையில் டிசம்பர் மாதம் முடியும் பியூச்சர் ஆர்டரில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.73 சதவீதம் சரிந்தது 58,976 ரூபாயாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் 1 கிலோ வெள்ளி விலை 0.60 சதவீதம் சரிந்து 70,860 ரூபாயாக உள்ளது.
சென்னை ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 260 ரூபாய் உயர்ந்து 55,300 ரூபாயாக உள்ளது, இதுவே 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 280 ரூபாய் உயர்ந்து 60,330 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரனுக்கு 208 ரூபாய் உயர்ந்து 44,240 ரூபாயாக உள்ளது.
மேலும் இந்திய ரீடைல் சந்தையில் 1 கிலோ வெள்ளி விலை கணிசமாக உயர்ந்துள்ளது. 2023 ஆம் நிதியாண்டின் துவக்கம் முதல் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, இதன் மூலம் இன்று தங்கம் விலை குறைந்தாலும் வெள்ளி விலை அதிகரித்தள்ளது. இதன் மூலம் 1 கிலோ வெள்ளி விலை 77,500 ரூபாயாக உள்ளது. மேலும் பிளாட்டினம் விலை 10 கிராம் 20 ரூபாய் அதிகரித்து 23,600 ரூபாயாக உள்ளது.
தங்கம் விலை தொடர் உயர்வுக்கு மத்தியில் இன்று பதிவான சரிவு சமானிய மற்றும் நடத்தர மக்களுக்கு பெரும் வாய்ப்பாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications