இந்திய முதலீட்டுச் சந்தையில் ஏற்பட்டு உள்ள மாற்றத்தால் ரூபாய் மதிப்பு தொடர்ந்து அதிகளவிலான சரிவை எதிர்கொண்டு வரும் இதே நேரத்தில் தங்க நகை மற்றும் தங்கத்திற்கான தேவை என்பது பெரிய அளவில் குறைந்துள்ளது. இதன் வாயிலாகச் சனிக்கிழமை ரீடைல் வர்த்தகத்தில் தங்கம் விலை கிராமுக்கு 19 ரூபாய் வரையில் சரிந்துள்ளது.
இந்தியாவில் தங்கத்திற்கான தேவை குறைந்ததிற்கு மிக முக்கியக் காரணம் நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்று எண்ணிக்கையும், அதன் மூலம் அறிவிக்கப்பட்டு வரும் லாக்டவுன் காரணமாக உற்பத்தி மற்றும் வர்த்தகச் சந்தை அதிகளவிலான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இதனால் மக்கள் மத்தியில் 2020ஆம் ஆண்டில் வேலைவாய்ப்புக் குறித்த பயம் மீண்டும் எழுந்துள்ளதால், கையில் இருக்கும் பணத்தைச் சேமிக்கவும், அத்தியாவசிய பொருட்களை மட்டுமே வாங்கி வருகின்றனர்.
இதனாலேயே தங்க நகை வர்த்தகம் குறைந்துள்ளது மட்டும் அல்லாமல் தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது.
தங்கம் விலை சரிவு
சனிக்கிழமை ரீடைல் சந்தை வர்த்தகத்தில் 100 கிராம் தங்கம் விலை 1,900 ரூபாய் வரையில் குறைந்துள்ளது. இந்த விலை குறைவு தங்கம் வாங்கத் திட்டமிடுவோருக்கும் சிறப்பான வாய்ப்பாக அமைந்துள்ளது. மேலும் தங்கம் வாங்கத் திட்டமிடுவோர் MCX சந்தையிலும், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையைத் தெரிந்துகொண்டு வாங்குவது சிறந்தது.
எம்சிஎக்ஸ் சந்தை விலை
எம்சிஎக்ஸ் சந்தை சனிக்கிழமை விடுமுறை என்பதால் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவின் போது 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.44 சதவீதம் சரிந்து 47,560.00 ரூபாயாக உள்ளது. இதே போல் ஒரு கிலோ வெள்ளியின் விலை 0.73 சதவீதம் சரிந்து 68,710.00 ரூபாயாக வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.
சர்வதேச சந்தை விலை
மேலும் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை நேற்று காலை வர்த்தகத்தில் 1,794.54 டாலர் வரையில் உயர்ந்த நிலையில் வர்த்தக முடிவில் 1,777.10 டாலராகக் குறைந்தது. இதன் வெளிப்பாடு தான் இந்தியச் சந்தையில் இன்று வெளிப்பட்டு உள்ளது.
ரூபாய் மதிப்பு விலை
சர்வதேச சந்தையில் ரூபாய் மதிப்பில் ஏற்பட்டு உள்ள மாற்றத்தின் காரணமாக 1 அவுன்ஸ் தங்கம் விலை 1,794.54 டாலராக இருந்த போது 1,34,441 ரூபாயச் சரிந்துள்ளது. இதேபோல் 1,777.10 டாலராகக் குறைந்த பின்பு 1,33,023 ரூபாயில் இருந்து 1,33,672 ரூபாயாக அதிகரித்துள்ளது.
டாலர் vs ரூபாய்
இன்றைய நாணய சந்தை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 74,.93 ரூபாயாகச் சரிந்துள்ளது. கடந்த ஒரு வார வர்த்தகத்தில் ரூபாய் 75.80 ரூபாய் வரையில் சரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை விலை நிலவரம்
இதன் மூலம் சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை 7 ரூபாய் குறைந்து 4,917 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் 22 கேரட் தங்கம் விலை 44,950 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி விலை 74,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
More From GoodReturns

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

மதுரையில் இன்று தங்கம் விலை சரிவு: இனி வரும் நாட்களிலும் விலை குறையுமா?

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

Gold loan: ஆர்பிஐ கொண்டு வந்துள்ள ”7 நாட்கள்” விதி!! தங்க நகை கடன் வாங்குவோருக்கு மேஜர் அப்டேட்!!

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?



Click it and Unblock the Notifications