தங்கம் விலை மீண்டும் சரிவு.. இதுக்காக தான் வெயிட்டிங்..!

தங்கம் விலை கடந்த 2 வாரமாக உயர்வுடன் முடிந்த நிலையில் இன்று காலை வர்த்தகத்தில் சரிவுடன் துவங்கியுள்ளது. முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீட்டை எங்கு செய்யலாம் என்பதில் பெரும் குழுப்பத்திற்கு மத்தியில் உள்ளனர், இதனால் தங்கம் விலை மந்த நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. இதனாலேயே கடந்த வாரம் உயர்வுடன் முடிந்த தங்கம் தற்போது சரிவுடன் துவங்கியுள்ளது.

சீனா, ஜப்பான் நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தாது என கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில், அமெரிக்காவின் பணவீக்க முடிவுகளுக்காக காத்திருக்கும் முதலீட்டாளர்கள் அமெரிக்க பத்திர சந்தையில் முதலீடு செய்வது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். இதனாலேயே தங்கம் மீதான முதலீடு குறைந்து இதன் விலை மந்த நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

தங்கம் விலை மீண்டும் சரிவு.. இதுக்காக தான் வெயிட்டிங்..!

வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 1967 டாலரில் இருந்து 1960.75 டாலர் விலையில் வர்த்தகமான நிலையில், திங்கட்கிழமை 1963 டாலரில் இருந்து 1954 டாலர் வரையில் சரிந்து மீண்டும் 1961 டாலர் வரையில் உயர்ந்தது.

இதனை தொடர்ந்து தற்போது ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 1960 டாலர் விலையில் விற்கப்படுகிறது. ஒரு அவுன்ஸ் எனில் 28.34 கிராம், அதாவது 28.34 கிராம் அளவிலான 24 கேரட் தங்கம் 1960 டாலருக்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. இது இந்திய ரூபாய் மதிப்பில் 1,61,635 ரூபாய்.

இதேபோல எம்சிஎக்ஸ் சந்தையில் பியூச்சர் ஆர்டர்களின் திங்கட்கிழமை வர்த்தகத்தில் 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை 0.07 சதவீதம் சரிந்து 59,780 ரூபாயாக உள்ளது. அதேபோல் 1 கிலோ வெள்ளியின் விலை 0.59 சதவீதம் சரிந்து 73,363 ரூபாயாக உள்ளது.

இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 100 ரூபாய் குறைந்து 55800 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 100 ரூபாய் குறைந்து 60900 ரூபாயாக குறைந்துள்ளது. இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 80 ரூபாய் குறைந்து 44,640 ரூபாயாக உள்ளது. மேலும் வெள்ளி விலை 79,300 ரூபாயாக உள்ளது.

22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 55,800 ரூபாய், மும்பை - 55,400 ரூபாய், டெல்லி - 55,550 ரூபாய், கொல்கத்தா - 55,400 ரூபாய், பெங்களூர் - 55,450 ரூபாய், ஹைதராபாத் - 55,400 ரூபாய், கேரளா - 55,400 ரூபாய், புனே - 55,400 ரூபாய், பரோடா - 55,450 ரூபாய், அகமதாபாத் - 55,450 ரூபாய், ஜெய்ப்பூர் - 55,550 ரூபாய், லக்னோ - 55,550 ரூபாய், கோயம்புத்தூர் - 55,800 ரூபாய், மதுரை - 55,800 ரூபாய்.

24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 60,900 ரூபாய், மும்பை - 60,450 ரூபாய், டெல்லி - 60,600 ரூபாய், கொல்கத்தா - 60,450 ரூபாய், பெங்களூர் - 60,500 ரூபாய், ஹைதராபாத் - 60,450 ரூபாய், கேரளா - 60,450 ரூபாய், புனே - 60,450 ரூபாய், பரோடா - 60,500 ரூபாய், அகமதாபாத் - 60,500 ரூபாய், ஜெய்ப்பூர் - 60,600 ரூபாய், லக்னோ - 60,600 ரூபாய், கோயம்புத்தூர் - 60,900 ரூபாய், மதுரை - 60,900 ரூபாய்.

தங்கம் விலை மீண்டும் சரிவு.. இதுக்காக தான் வெயிட்டிங்..!

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 44640 ரூபாய், மும்பை - 44320 ரூபாய், டெல்லி - 44440 ரூபாய், கொல்கத்தா - 44320 ரூபாய், பெங்களூர் - 44360 ரூபாய், ஹைதராபாத் - 44320 ரூபாய், கேரளா - 44320 ரூபாய், புனே - 44320 ரூபாய், பரோடா - 44360 ரூபாய், அகமதாபாத் - 44360 ரூபாய், ஜெய்ப்பூர் - 44440 ரூபாய், லக்னோ - 44440 ரூபாய், கோயம்புத்தூர் - 44640 ரூபாய், மதுரை - 44640 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 79300 ரூபாய், மும்பை - 74300 ரூபாய், டெல்லி - 74300 ரூபாய், கொல்கத்தா - 74300 ரூபாய், பெங்களூர் - 75750 ரூபாய், ஹைதராபாத் - 79300 ரூபாய், கேரளா - 79300 ரூபாய், புனே - 74300 ரூபாய், பரோடா - 74300 ரூபாய், அகமதாபாத் - 74300 ரூபாய், ஜெய்ப்பூர் - 74300 ரூபாய், லக்னோ - 74300 ரூபாய், கோயம்புத்தூர் - 79300 ரூபாய், மதுரை - 79300 ரூபாய்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+