Gold Rate today: தங்கம் விலை ரூ.3000 சரிவு வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்! சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை

திங்கட்கிழமை காலை ஆசிய வர்த்தக நேரத்தில் தங்கத்தின் சர்வதேச விலை சற்றே ஏற்றத்துடன் $4,205 அளவில் வர்த்தகமாகி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 0.29 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில் இதற்கு முக்கியமான காரணம் அமெரிக்க மத்திய வங்கியான Federal Reserve வட்டி விகித குறைப்பு தொடர்பான எதிர்பார்ப்புகள் தான்.

சென்னை ரீடைல் சந்தையில் ரூபாய் மதிப்பில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் பதிவான சிறிய அளவிலான உயர்வு மந்தநிலைக்கு நுழைந்தது. இதனால் ரீடைல் சந்தையில் தங்கம் விலை மாற்றமும் இல்லாமல் உள்ளது. ஆனால் தற்போது கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகித குறைப்பிற்கு பின்பு தங்கம் விலை எப்படி இருக்கும் என்பது தான்.

Gold Rate today: தங்கம் விலை ரூ.3000 சரிவு - வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்..!!

தமிழ்நாட்டு ரீடைல் சந்தையில் இன்று 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 1,20,400 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 1,31,350 ரூபாயாக உள்ளது. இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 96,320 ரூபாயாக உள்ளது.

வெள்ளி விலை கிலோவுக்கு 1000 ரூபாய் குறைந்து 1,98,000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை சற்றும் எதிர்பார்க்காத வகையில் 10 கிராம் 530 ரூபாய் உயர்ந்து 47,980 ரூபாயாக உள்ளது.

தங்கம் விலை 3000 ரூபாய் சரிவு
தொடர்ந்து உயர்ந்து வரும் வேளையில் டிசம்பர் மாதம் தங்கம் விலை குறைந்து அதிர்ச்சி அளித்துள்ளது, இந்த மாதம் முதல் 8 நாளில் மட்டும் தங்கம் விலை சுமார் 0.25 சதவீதம் குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் விலை 100 கிராம் தங்கம் விலை 3000 ரூபாய் குறைந்துள்ளது.

டிசம்பர் மாதத்தில் தங்கம் விலை 5ஆம் தேதி குறைந்த பட்சமாக 12000 ரூபாய்க்கு குறைந்தது, இதேபோல் டிசம்பர் 1ஆம் தேதி அதிகப்படியாக 12,070 ரூபாய் வரையில் உயர்வை பதிவு செய்தது.

அமெரிக்க பெட் முடிவுகள்
அமெரிக்காவில் பணவீக்க அளவு 2 சதவீத இலக்கை என்ற இலக்கை விட சற்று அதிகமாக இருந்தாலும், அமெரிக்க வேலைவாய்ப்பு சந்தை மேம்பட்டு வருவது தெளிவாகத் தெரிகிறது. இதனால் டிசம்பர் 8ஆம் தேதி நடைபெறவுள்ள மத்திய வங்கிக் கூட்டத்தில் வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் (25 அடிப்படைப் புள்ளிகள்) குறைக்க வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது. FedWatch கருவியின்படி, வட்டி குறைப்பிற்கு 88.4 சதவீத வாய்ப்புகள் உள்ளதாக காட்டுகிறது.

வட்டி விகிதம் குறைவதால் முதலீட்டு சந்தையில் அதிகம் வட்டி லாபம் தராத பிரிவில் இருந்து முதலீடுகள் வெளியேறும், இப்படி வெளியேறும் பணம் முதலீட்டு சந்தையில் மாற்று சொத்துக்களில் குவியும். உதாரணமாக வட்டி குறையும் காரணத்தால் அரசு பத்திரங்களில் செய்யப்பட்டு உள்ள முதலீடுகள் வெளியேறி பங்குச்சந்தை மற்றும் தங்கத்தின் மீது குவியும். இதுவே அடுத்த சில வாரங்களுக்கு தங்க விலை ஏற்றத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது.

டிசம்பர் 8ஆம் தேதி காலை 6:05 மணி நிலவரப்படி, சர்வதேச ஸ்பாட் தங்க விலை ஒரு அவுன்ஸுக்கு 4,207 டாலராக பதிவாகியுள்ளது. இதுவே 10.30 மணிக்கு 4,212 டாலராக உயர்ந்துள்ளது. எம்சிஎக்ஸ் சந்தையில் சரிவில் துவங்கிய பிப்ரவரி மாத பியூச்சர் ஆர்டர் விலை 0.11 சதவீதம் உயர்ந்து 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 1,30,610 ரூபாயாக உள்ளது. வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் 10 கிராம் 24 கேரட் தங்கத்திற்கு ரூ.1,30,419ஆக முடிந்தது. இது வியாழக்கிழமை வர்த்தகத்தை விட 0.033 சதவீதம் குறைவு.

இந்த வாரம் தங்கம் எப்படியிருக்கும்?
ஆக்மாண்ட் புல்லியன் நிறுவனம் டிசம்பர் 5ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், தங்கம் மீண்டும் உயர்வு பாதையில் செல்கிறது என்று தெரிவித்துள்ளது. இதனால் தங்தத்தின் அடுத்த இலக்காக 4,300 - 4,345 டாலர் அளவில் இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளையில் இந்தியா - அமெரிக்கா மத்தியிலான வர்த்தக ஒப்பந்தம் இன்னும் கையெழுத்தாகாத நிலையில் இரு நாடுகள் மத்தியிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் ரூபாய் மதிப்பும் சரிந்து வருகிறது.

மேலும் அமெரிக்க பெடரல் ரிசர்வ்-ன் வட்டி விகித குறைப்பால் தங்கம் விரைவில் 4,300 - 4,345 டாலர் அளவை அடையாலம் எனவும் தெரிகிறது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+