Gold Rate: 3 நாட்களில் ரூ.3000 விலை குறைவு.. இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

சென்னையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக தங்கம் விலை குறைந்துள்ளது. ஜூலை 1ஆம் தேதி தொடங்கி 3ஆம் தேதி வரை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தங்கத்தின் விலை உயர்ந்தது. ஆனால் அதன் பின்னர் விலை இறங்குமுகமாக தான் இருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் என பல்வேறு நகரங்களிலும் தங்கம் வாங்க காத்திருந்தவர்களுக்கு இன்று சிறந்த நாள் என கூறலாம்.

தமிழ்நாட்டில் நேற்றைய தினம் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 13,400 ரூபாய்க்கு விற்பனையானது. அதுவே இன்றைய தினம் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 70 ரூபாய் விலை குறைந்திருக்கிறது. சென்னை, மதுரை, கோவை ,திருச்சி உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களிலும் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 13,330 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று 1,07,200 ரூபாய்க்கு விற்பனையான ஒரு சவரன் தங்கம் இன்று 1,06,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது தங்கம் விலை ஒரு சவரனுக்கு 560 ரூபாய் விலை குறைந்திருக்கிறது.

Gold Rate: 3 நாட்களில் ரூ.3000 விலை குறைவு.. இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

திங்கள்கிழமை தொடங்கி இன்று வரையிலான 3 நாட்களில் ஆபரண தங்கம் விலை ஒரு கிராமுக்கு 370 ரூபாய் விலை குறைந்துள்ளது. அதுவே ஒரு சவரனுக்கு 2,960 ரூபாய் விலை சரிந்துள்ளது. வரலாற்று உச்சபட்ச விலையான ஒரு சவரன் 1.33 லட்சத்தில் இருந்து தங்கம் விலை சவரனுக்கு 27,000 ரூபாய் குறைந்துள்ளது.

24 கேரட் தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராமுக்கு 76 ரூபாய் விலை குறைந்து 14,542 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 10 கிராமுக்கு 760 ரூபாய் விலை சரிந்து 1,45,420 ரூபாய்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் விலை 3 நாட்களில் ஒரு கிராமுக்கு 400 ரூபாயும் 10 கிராமுக்கு 4000 ரூபாயும் விலை சரிந்துள்ளது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 11,150 ரூபாய்க்கும் ஒரு சவரன் 89,200 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

வெள்ளி விலை இன்று தடாலடியாக குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி நேற்று 250 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஒரு கிலோ வெள்ளி 2.50 லட்சத்திற்கு விற்பனையானது. இன்று ஒரு கிராமுக்கு 5 ரூபாயும், ஒரு கிலோவுக்கு 5000 ரூபாயும் விலை குறைந்துள்ளது. அந்த வகையில் ஒரு கிராம் வெள்ளி 245 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2.45 லட்சம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. தங்கம் விலை இன்னும் சிறிது காலத்திற்கு விலை சரிவிலேயே இருக்கும் என்றும் இந்த ஆண்டு இறுதியில் இருந்து மீண்டும் விலை உயர தொடங்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+