இந்தியாவின் நடுத்தர மக்களின் முக்கிய சேமிப்பு பிரிவாக இருக்கும் தங்கம் விலை இன்று தடுமாற்றத்துடன் துவங்கியுள்ளது, இதற்கு முக்கிய காரணம் அமெரிக்க வேலைவாய்ப்பு சந்தையில் ஏற்பட்ட பாதிப்பு அமெரிக்க டாலர் மதிப்பில் எதிரொலித்துள்ளது. இதனால் பத்திர முதலீடுகளின் அளவு குறைந்து தங்கம் மீதான முதலீட்டிலும் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
கடந்த வாரம் தங்கம் விலையில் பெரும் மாற்றங்கள் சந்தித்த பின்பு சாமானிய மக்கள் மீண்டும் தங்கம் வாங்க முடியாத நிலை உருவானது. ஆனால் வெள்ளிக்கிழமை வெளியான அமெரிக்காவின் விவசாயம் அல்லாத வேலைவாய்ப்புகள் ஜூன் மாதம் 209000 ஆக மட்டுமே உள்ளது, இது மே மாதம் 306000 ஆக இருந்தது. சந்தை கணிப்புகள் 225000 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் அமெரிக்காவின் வேலைவாய்ப்பின்மை அளவீடு ஜூன் மாதம் 3.7 சதவீதத்தில் இருந்து 3.6 சதவீதமாக குறைந்துள்ளது. இதன் வாயிலாக அமெரிக்காவின் 10 வருட அரசு பத்திரங்களின் முதலீட்டு லாப அளவு 4.023 சதவீதமாக உள்ளது. மேலும் டாலர் இன்டெக்ஸ் ஜூன் 23 ஆம் தேதிக்கு பின்பு 102.22 என்ற குறைவான அளவீட்டை தொட்டு உள்ளது.
இப்படியிருக்கும் சூழ்நிலையில் தான் இன்றைய வர்த்தகத்தில் ஆசிய சந்தை திறந்து சில மணிநேரத்தில் சர்வேதேச சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 1923 டாலராக குறைந்துள்ளது. வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 1933 டாலர் வரையில் உயர்ந்து வர்த்தக முடிவில் 1925 டாலர் வரையில் குறைந்து வர்த்தகம் முடிவடைந்தது.

இதன் தாக்கம் இந்திய சந்தையிலும் எதிரொலித்துள்ளது, அமெரிக்கா மீதான உருவான நம்பிக்கை வேலைவாய்ப்பு தரவுகள் மூலம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக எம்சிஎக்ஸ் சந்தையில் ஆகஸ்ட் மாத பியூச்சர்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.26 சதவீதம் சரிந்து 58,630 ரூபாயாக உள்ளது. இதேபோல் 1 கிலோ வெள்ளி விலை 0.33 சதவீதம் சரிந்து 71,078 ரூபாயாக உள்ளது.
ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 50 ரூபாய் சரிந்து 54,850 ரூபாயாக உள்ளது, இதேபோல் 24 கேரட் தங்கம் விலை 100 ரூபாய் சரிந்து 59,840 ரூபாயாக உள்ளது. மேலும் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை 40 ரூபாய் குறைந்து 43,880 ரூபாயாக உள்ளது. இதை தொடர்ந்து நாட்டின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை என்ன..?
22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 54,850 ரூபாய், மும்பை - 54,450 ரூபாய், டெல்லி - 54,600 ரூபாய், கொல்கத்தா - 54,450 ரூபாய், பெங்களூர் - 54,450 ரூபாய், ஹைதராபாத் - 54,450 ரூபாய், கேரளா - 54,450 ரூபாய், புனே - 54,450 ரூபாய், பரோடா - 54,500 ரூபாய், அகமதாபாத் - 54,500 ரூபாய், ஜெய்ப்பூர் - 54,600 ரூபாய், லக்னோ - 54,600 ரூபாய், கோயம்புத்தூர் - 54,850 ரூபாய், மதுரை - 54,850 ரூபாய்.
24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 59,840 ரூபாய், மும்பை - 59,410 ரூபாய், டெல்லி - 59,560 ரூபாய், கொல்கத்தா - 59,410 ரூபாய், பெங்களூர் - 59,510 ரூபாய், ஹைதராபாத் - 59,410 ரூபாய், கேரளா - 59,410 ரூபாய், புனே - 59,410 ரூபாய், பரோடா - 59,460 ரூபாய், அகமதாபாத் - 59,460 ரூபாய், ஜெய்ப்பூர் - 59,560 ரூபாய், லக்னோ - 59,560 ரூபாய், கோயம்புத்தூர் - 59,840 ரூபாய், மதுரை - 59,840 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 43880 ரூபாய், மும்பை - 43560 ரூபாய், டெல்லி - 43680 ரூபாய், கொல்கத்தா - 43560 ரூபாய், பெங்களூர் - 43560 ரூபாய், ஹைதராபாத் - 43560 ரூபாய், கேரளா - 43560 ரூபாய், புனே - 43560 ரூபாய், பரோடா - 43600 ரூபாய், அகமதாபாத் - 43600 ரூபாய், ஜெய்ப்பூர் - 43680 ரூபாய், லக்னோ - 43680 ரூபாய், கோயம்புத்தூர் - 43880 ரூபாய், மதுரை - 43880 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 76800 ரூபாய், மும்பை - 73300 ரூபாய், டெல்லி - 73300 ரூபாய், கொல்கத்தா - 73300 ரூபாய், பெங்களூர் - 72750 ரூபாய், ஹைதராபாத் - 76800 ரூபாய், கேரளா - 76800 ரூபாய், புனே - 73300 ரூபாய், பரோடா - 73300 ரூபாய், அகமதாபாத் - 73300 ரூபாய், ஜெய்ப்பூர் - 73300 ரூபாய், லக்னோ - 73300 ரூபாய், கோயம்புத்தூர் - 76800 ரூபாய், மதுரை - 76800 ரூபாய்.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

கோவையில் இன்று தங்கம் விலை நிலவரம் என்ன? மக்கள் இன்று தங்கம் வாங்கலாமா?

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! தங்கம், வெள்ளி விலை குறித்து முக்கிய அப்டேட்? இன்றைய நிலவரம் என்ன?

கோயம்புத்தூர் தங்கம் விலை: தடாலடியாக சரிவு, முதலீட்டு செய்ய நல்ல வாய்ப்பு.. ஆனாலும் பொறுமையாக இருங்க..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

கோயம்புத்தூர் தங்கம் விலை இன்று: பெரும் சரிவு! நகைப்பிரியர்களுக்கு அரிய வாய்ப்பு |

Gold & Silver Rate LIVE: தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. போனா வராது பொழுது போனால் கிடைக்காது..!

ஈரான் போர் முடிவுக்கு வந்ததும் தங்கம், வெள்ளி விலை உயருமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு குட் நியூஸ்!! உலக சந்தையில் நடந்த பெரிய மாற்றம்!!

வாரத்தின் முதல் நாளே தங்கம் தந்த சர்ப்ரைஸ்!! வீட்டில் விசேஷம் வச்சிருக்கவங்களுக்கு கொண்டாட்டம்!!

அது மட்டும் நடந்தால் தங்கம், வெள்ளி, நிஃப்டி என்னவாகுமோ? ஈரான் போர் மத்தியில் நிபுணர்கள் எச்சரிக்கை?



Click it and Unblock the Notifications