சென்னையில் நேற்று விலை உயர்ந்த தங்கம் இன்று விலை குறைந்து மக்களுக்கு ஆறுதல் தந்துள்ளது.சென்னை, கோவை, மதுரை உள்பட தமிழ்நாட்டின் பிரதான நகரங்களில் இன்று தங்கம் விலை என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
சென்னையில் இன்றைய தினம் ஆபரண தங்கத்தின் விலை குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராமுக்கு 50 ரூபாய் விலை குறைந்து 13,200 ரூபாய்க்கு விற்பனையாகிறது. நேற்று 13,250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அந்த வகையில் ஒரே நாளில் தங்கத்தின் விலை கிராமுக்கு 50 ரூபாயும் ஒரு சவரனுக்கு 400 ரூபாயும் விலை குறைந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் 1,05,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மதுரை, கோவை, திருச்சி என தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் 13,200 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1,05,600 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
அமெரிக்க மத்திய வங்கி கடந்த வாரம் வட்டி விகிதங்களை மாற்றப்போவதில்லை என அறிவித்தது. இதனால் முதலீட்டாளர்கள் வட்டி வருமானம் தரும் பத்திரங்களில் அதிக முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். இதனால் உலக சந்தையிலேயே தங்கம் விலை குறைந்து தான் வருகிறது. அது தான் இந்தியாவிலும் எதிரொலிக்கிறது. இனி வரும் சில வாரங்களுக்கும் தங்கம் விலை பெரிதாக உயராது இறங்குமுகமாகவே இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
24 கேரட் தங்கத்தை பொறுத்தவரை இன்று ஒரு கிராம் 14,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 10 கிராம் 1,44,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையை பொறுத்தவரை இன்றைய தினம் ஒரு கிராம் வெள்ளி 235 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு வாரமாக வெள்ளியின் விலையில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை.
உலக சந்தையில் ஸ்பாட் கோல்டின் விலை ஒரு அவுன்ஸ் 4,059 டாலராக இருக்கிறது. நேற்றுடன் ஒப்பிடுகையில் லேசாக விலை உயர்ந்துள்ளது. இந்தியாவில் எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 10 கிராம் தங்கம் விலை 1,43,365 ரூபாயாக வர்த்தகமாகிறது. ஜூலை மாதம் முழுவதுமே ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் ஒரு வரம்பிலேயே இருந்தது. அதாவது பெரிதாக விலை ஏறவும் இல்லை இறங்கவும் இல்லை. ஆகஸ்ட் மாதமாவது விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாதத்தில் கடந்த 2 நாட்களில் ஒரு நாள் விலை கூடியுள்ளது ஒரு நாள் விலை இறங்கியுள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

