தங்கம் விலை: ஆகஸ்ட் இறுதிக்குள் ரூ.1.25 லட்சத்தை எட்டுகிறதா? முகூர்த்த நாட்கள் வேற வருது..!!

ஆகஸ்ட் மாதம் தங்க நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் மாதமாக அமைந்துள்ளது. ஏனெனில் இந்த மாதத்தில் பெரும்பாலான நாட்கள் தங்கம் விலை ஏறுமுகமாகவே தான் இருந்துள்ளது. அந்த வகையில் இன்று தங்கம் விலை என்ன? இந்த மாதத்தில் எவ்வளவு உயர்ந்துள்ளது, ஆகஸ்ட் மாதம் முடிவதற்குள் எவ்வளவு உயர வாய்ப்புள்ளது என்ற விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

சென்னையில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் கிராமுக்கு 80 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. அந்த வகையில் இன்று சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் 15,030 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கிட்டதட்ட மே மாதத்திற்கு பிறகு ஒரு கிராம் தங்கம் 15,000 ரூபாய் என்ற மைல்கல்லை கடந்துள்ளது.

தங்கம் விலை: ஆகஸ்ட் இறுதிக்குள் ரூ.1.25 லட்சத்தை எட்டுகிறதா? முகூர்த்த நாட்கள் வேற வருது..!!

ஒரு சவரனுக்கு 640 ரூபாய் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இன்றைய தினம் ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,20,240 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதன் மூலம் 3 மாதங்களுக்கு பின் தங்கம் ப்விலை சவரன் 1.20 லட்சத்தை தாண்டியுள்ளது. ஆகஸ்ட் மாதம் தொடர்ச்சியாக தங்கம் விலை உயர்ந்து வருவதே இதற்கு காரணமாகும்.

குறிப்பாக ஆகஸ்ட் 1ஆம் தேதி ஆபரண தங்கம் ஒரு கிராம்13,256 ரூபாய்க்கு தான் விற்கப்பட்டது. ஆனால் இன்று 15,030 ரூபாயை தொட்டுவிட்டது. அந்த வகையில் இந்த மாதத்தில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு 1,774 ரூபாயும் சவரனுக்கு 14,192 ரூபாயும் விலை உயர்ந்துள்ளது. 10 கிராமுக்கு 17,740 ரூபாய் விலை கூடியுள்ளது. ஆகஸ்ட் மாதத்திலேயே இன்றைய தினம் தான் தங்கம் விலை உச்சத்தை தொட்டுள்ளது. குறுகிய காலத்திலேயே தங்கம் விலை சுமார் 14% விலை உயர்ந்திருப்பதால் மக்கள் கலக்கத்தில் உள்ளனர்.

Also Read

3 வாரங்களில் சுமார் 14% என்றால் ஒவ்வொரு வாரமும் தங்கம் விலை சராசரியாக 4.46% உயர்ந்துள்ளது. இந்த மாதம் முடிய இன்னும் ஒரு வார காலமே இருக்கிறது. எனவே இந்த வாரமும் இதே அளவில் தங்கம் விலை உயர்ந்தால் ஒரு சவரன் தங்கம் மீண்டும் 1.25 லட்சம் ரூபாயை தொட வாய்ப்புள்ளது.

24 கேரட் தங்கம் விலையை பார்த்தால் ஒரு கிராம் 88 ரூபாய் விலை உயர்ந்து 16,397 ரூபாய்க்கும் 10 கிராம் 1,63,970 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராம் 12,800 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1,02,400 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

Recommended For You

வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 275 ரூபாய்க்கும் ஒரு கிலோ 2.75 லட்சம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. ஆகஸ்ட் 1ஆம் தேதி அன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை 235 ரூபாயாக தான் இருந்தது. ஆனால் படிப்படியாக விலை உயர்ந்து கிராம் 275 ரூபாய் வரை வந்துவிட்டது. வெள்ளி விலை கிராமுக்கு 40 ரூபாயும் கிலோவுக்கு 40,000 ரூபாயும் விலை கூடியுள்ளது.

உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் ஸ்பாட் கோல்டு விலை 4,646 டாலருக்கு வர்த்தகமாகிறது. தொடர்ந்து உலக சந்தையில் தங்கம் விலை உயர்வதே இந்தியாவிலும் சில்லறை விற்பனையில் தங்கம் விலை உயர காரணமாக உள்ளது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+