தங்கம் விலை 800 ரூபாய் சரிவு.. அடிசக்க, இதுதான் ஜாக்பாட்.. தீபாவளிக்கு செம கிப்ஃட்..!!

தங்கம் விலை தீபாவளி நாளில் பெரிய அளவில் குறைந்துள்ளது, டிரம்ப் சீனா மீதான வரி விதிப்பு குறித்து உண்மையான நிலையை முதல் முறையாக பேசியதை தொடர்ந்து வெள்ளிக்கிழமை அமெரிக்க வர்த்தகத்தில் சரிந்த தங்கம் விலை இன்றும் தொடர்கிறது.

இந்தியாவில் தன்தேரஸ் மற்றும் தீபாவளி பண்டிகை காலத்தில் 10 கிராம் தங்கம் விலை 150000 ரூபாய் அளவீட்டை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டிரம்ப்-ன் பேச்சு மொத்த போக்கை மாற்றி தற்போது தங்கம் விலையை பெரிய அளவில் குறைத்துள்ளது.

தங்கம் விலை 800 ரூபாய் சரிவு.. அடிசக்க, இதுதான் ஜாக்பாட்.. தீபாவளிக்கு செம கிப்ஃட்..!!

இன்று சென்னை ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 800 ரூபாய் குறைந்து 1,19,200 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 870 ரூபாய் குறைந்து 1,30,040 ரூபாயாக குறைந்துள்ளது.

இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 696 ரூபாய் குறைந்து 1,04,032 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை எவ்விதமான மாற்றமும் இல்லாமல் சனிக்கிழமை பதிவான 1,90,000 ரூபாய் அளவிலேயே உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 290 ரூபாய் குறைந்து 45,260 ரூபாயாக உள்ளது.

மேலும் எம்சிஎக்ஸ் சந்தையில் இன்று காலை வர்த்தகத்தில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. உள்நாட்டு தேவை அதிகமாக இருப்பது மற்றும் அமெரிக்க டாலர் மதிப்பு குறைந்திருப்பது ஆகியவை இந்த உயர்வுக்கு முக்கிய காரணங்களாக உள்ளது.

டிசம்பர் மாதம் முடியும் தங்க பியூச்சர்ஸ் ஒப்பந்தங்கள் காலை 9:45 மணி அளவில் 0.94 சதவீதம் உயர்ந்து 10 கிராம் ரூ.1,28,207 என்ற அளவில் வர்த்தகமாகின்றன. அதேபோல், வெள்ளி டிசம்பர் மாதம் முடியும் ஒப்பந்தங்கள் 0.45 சதவீதம் உயர்ந்து ஒரு கிலோ ரூ.1,57,302 என்ற விலையில் உள்ளன.

தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த வெள்ளிக்கிழமை கடுமையான சரிவை சந்தித்த பிறகு, தங்கம் விலை சர்வதேச சந்தையில் சிறிய அளவில் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சீனா வரி தொடர்பான கருத்துகள், முதலீட்டாளர்கள் தங்கம் மீதான மூதலீட்டை விற்பனை செய்து லாபம் பெறச் செய்து.

இதனால், தங்கம் பாதுகாப்பான சொத்து என்ற ஈர்ப்பு தற்காலிகமாக குறைந்தது. இதேவேளையில் அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வின் காரணத்தாலும் தங்கத்தின் விலை MCX சந்தையில் உயர துவங்கியது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+