தொடர்ச்சியாக விலை உயர்ந்து வந்து மக்களுக்கு கண்ணீரை வரவழைத்த தங்கம் தொடர்ந்து 2ஆவது நாளாக விலை குறைந்துள்ளது. அந்த வகையில் இன்று தமிழ்நாட்டில் 22 கேரட் மற்றும் 24 கேரட் தங்கத்தின் விலை என்ன என்பதை பார்க்கலாம்.
சென்னையில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு 70 ரூபாய் விலை குறைந்துள்ளது. இன்று சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் 14,940 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. திங்கள் அன்று ஒரு கிராம் தங்கம் 15,000 ரூபாயை கடந்தது. மூன்று மாதங்களுக்கு பின் தங்கம் விலை இந்த மைல்கல்லை எட்டியது. ஆனால் நேற்று முன் தினம் மற்றும் இன்று என தொடர்ந்து விலை குறைந்து 15,000 ரூபாய்க்கு கீழ் சென்றுவிட்டது.

இன்றைய தினம் ஒரு சவரன் ஆபரண தங்கம் 560 ரூபாய் விலை சரிந்து 1,19,520 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. திங்கள் அன்று ஒரு சவரன் தங்கம் 1.20 லட்சம் என்ற அளவை தொட்டது. மே மாதத்திற்கு பிறகு தங்கம் விலை ஒரு சவரன் 1.20 லட்சம் என்ற அளவை எட்டியது. ஆனால் இன்று விலை குறைந்துவிட்டது. கடந்த 3 நாட்களீல் 2 நாட்கள் விலை குறைந்துள்ளது ஒரு நாள் விலை மாறவில்லை.
ஆகஸ்ட்டில் தொடர்ந்து 3 வாரங்கள் ஏறுமுகமாகவே இருந்த தங்கம் இந்த வாரம் சற்றே ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.எனவே இனி வரும் நாட்களில் தங்கம் விலை இறங்குமுகமாக தான் இருக்க போகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. தங்கம் விலை சர்வதேச காரணிகளை பொறுத்து மாறும் என்பதால் பெரிய அளவிலான விலை ஏற்றமோ, இறக்கமோ இல்லாத சமயங்களில் மக்கள் விலை குறையட்டும் என கத்திருக்காமல் இன்றைய விலையே நல்ல வாய்ப்பு என கருதி வாங்கி வைக்கலாம் அல்லது முதலீடு செய்யலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
24 கேரட் தங்கம் விலையை பார்த்தால் ஒரு கிராம் 16,298 ரூபாய்க்கும் 10 கிராம் 1,62,980 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராம் 12,710 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1,01,680 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை இன்று மாறாமல் இருக்கிறது. அந்த வகையில் ஒரு கிராம் 265 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2.65 லட்சம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் ஸ்பாட் கோல்டு விலை 4,620 டாலருக்கு வர்த்தகமாகிறது. நேற்றுடன் ஒப்பிடுகையில் மிக லேசாக விலை குறைந்துள்ளது. இதனால் தான் தமிழ்நாட்டிலும் தங்கம் விலை லேசாக குறைந்துள்ளது. தங்கம் வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் விலை குறையட்டும் என காத்திருக்காமல் இபோதே வாங்குவது தான் நல்லது என்கின்றனர் நிபுணர்கள்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

