தொடர்ச்சியாக விலை உயர்ந்து வந்த தங்கம் சர்ப்பிரைஸ் தரும் வகையில் இன்று விலை மாறாமல் இருக்கிறது. ஓணம் பண்டிகை நாளான இன்று தமிழ்நாட்டில் 22 கேரட் மற்றும் 24 கேரட் தங்கத்தின் விலை என்ன என்பதை பார்க்கலாம்.
சென்னையில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை மாறாமல் இருக்கிறது. அந்த வகையில் இன்று சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் 15,010 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நேற்று முன் தினம் தங்கம் ஒரு கிராம் 15,000 ரூபாய் என்ற மைல்கல்லை தொட்டது. அதன் பின்னர் மூன்று நாட்களாக அதே அளவிலேயே நீடிக்கிறது.

இன்றைய தினம் ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,20,080 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நேற்று முன் தினம் ஒரு சவரன் தங்கம் 1.20 லட்சம் என்ற அளவை தொட்டது. மே மாதத்திற்கு பிறகு தங்கம் விலை ஒரு சவரன் 1.20 லட்சம் என்ற அளவை எட்டி அதே விலையிலேயே நீடிக்கிறது.
சென்னையில் ஆகஸ்ட் 1ஆம் தேதியுடன் ஒப்பிடும் போது ஆபரண தங்கம் ஒரு கிராம் 1,754 ரூபாயும் , சவரனுக்கு 14,032 ரூபாயும் விலை உயர்ந்துள்ளது. இந்த மாதத்தில் பெரும்பாலான நாட்கள் தங்கம் விலை ஏற்றத்துடனேயே காணப்படுகிறது. 24 கேரட் தங்கம் விலையை பார்த்தால் ஒரு கிராம் 16,375 ரூபாய்க்கும் 10 கிராம் 1,63,750 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராம் 12,780 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1,02,240 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
வெள்ளியின் விலை இன்று மாறாமல் இருக்கிறது. அந்த வகையில் ஒரு கிராம் 265 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2.65 லட்சம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. ஆகஸ்ட் 1ஆம் தேதி அன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை 235 ரூபாயாக தான் இருந்தது. அந்த வகையில் இந்த மாதத்தில் மட்டும் வெள்ளி விலை 30 ரூபாஉக்கும், கிலோவுக்கு 30,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் ஸ்பாட் கோல்டு விலை 4,641 டாலருக்கு வர்த்தகமாகிறது. உலக சந்தையில் தங்கம் விலை பெரிய அளவில் மாறவில்லை. இதனால் தான் தமிழ்நாட்டிலும் தங்கம் விலை பெரிய அளவில் மாறாமல் இருக்கிறது.
ஆகஸ்ட் மாதம் முடிய இன்னும் 5 நாட்களே இருக்கும் நிலையில் தங்கம் விலை அதற்குள் என்ன ஆகுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுவரை தங்கம் விலை சுமார் 14% விலை கூடியுள்ளது. ஜனவரி மாதத்திற்கு பிறகு தொடர்ந்து 4ஆவது வாரமாக தங்கம் விலை இந்த மாதத்தில் தான் ஏறுமுகமாக இருந்திருக்கிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

