இன்று ரீடைல் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. இதனால் சாமானிய மக்கள் இனி தங்கத்தை முக்கிய சேமிப்பாக நம்பிக்கொண்டு இருப்பது சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று ரீடைல் சந்தையில் தங்கம் விலை பெரிய அளவில் உயர்ந்துள்ளது, 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 200 ரூபாய் வரையில் உயர்ந்து 57200 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 220 ரூபாய் உயர்ந்து 62400 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. மேலும் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 45,760 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோல் வெள்ளி விலை இன்று 1 கிலோவிற்கு 1150 ரூபாய் வரையில் உயர்ந்து 78250 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. ஏப்ரல் மாதம் 79600 ரூபாய் வரையில் வெள்ளி விலை இந்திய சந்தையில் எட்டியது மறக்க முடியாது.

சர்வதேச சந்தையில் வியாழக்கிழமை வர்த்தகத்தை போலவே வெள்ளிக்கிழமை வர்த்தகத்திலும் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 2050 டாலர் அளவிலேயே உள்ளது. இன்று காலையில் சர்வதேச சந்தையில் தங்கம் விலை 2,052 டாலருக்கு துவங்கி 2049 டாலர் வரையில் வர்த்தகமாகி வருகிறது.
இது அதிர்ச்சி அளித்தாலும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 81.60 ரூபாய்க்கு உயர்ந்துள்ளதால் எம்சிஎக்ஸ் சந்தையில் ஜூன் ஆர்டர் விலை கணிசமாக குறைந்துள்ளது.
வெள்ளிக்கிழமை எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் ஜூன் ஆர்டர் விலை 0.02 சதவீதம் சரிந்து 61,480 ரூபாயாகவும், 1 கிலோ வெள்ளியின் ஜூலை ஆர்டர் விலை 0.12 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து வரலாற்று உச்ச அளவிலேயே உள்ளது.
22 கேரட் 10 கிராம் தங்கம் விலை: இந்திய ரீடைல் சந்தையில் இன்று நாட்டின் முக்கியமான நகரங்களில் தங்கம் விலை நிலவரம் சென்னை - 57,750 ரூபாய், மும்பை - 57,200 ரூபாய், டெல்லி - 57,350 ரூபாய், கொல்கத்தா - 57,200 ரூபாய், பெங்களூர் - 57,250 ரூபாய், ஹைதெராபாத் - 57,200 ரூபாய், கேரளா - 57,200 ரூபாய், புனே - 57,200 ரூபாய், பரோடா - 57,250 ரூபாய், அகமதாபாத் - 57,250 ரூபாய், ஜெய்ப்பூர் - 57,350 ரூபாய், லக்னோ - 57,350 ரூபாய், கோயம்புத்தூர் - 57,750 ரூபாய், மதுரை - 57,750 ரூபாய்.
24 கேரட் 10 கிராம் தங்கம் விலை: இந்திய ரீடைல் சந்தையில் இன்று நாட்டின் முக்கியமான நகரங்களில் தங்கம் விலை நிலவரம் சென்னை - 63,000 ரூபாய், மும்பை - 62,400 ரூபாய், டெல்லி - 62,550 ரூபாய், கொல்கத்தா - 62,400 ரூபாய், பெங்களூர் - 62,450 ரூபாய், ஹைதெராபாத் - 62,400 ரூபாய், கேரளா - 62,400 ரூபாய், புனே - 62,400 ரூபாய், பரோடா - 62,450 ரூபாய், அகமதாபாத் - 62,450 ரூபாய், ஜெய்ப்பூர் - 62,550 ரூபாய், லக்னோ - 62,550 ரூபாய், கோயம்புத்தூர் - 63,000 ரூபாய், மதுரை - 63,000 ரூபாய்.

1 சவரன் தங்கம் விலை: இந்திய ரீடைல் சந்தையில் இன்று நாட்டின் முக்கியமான நகரங்களில் தங்கம் விலை நிலவரம் சென்னை - 46200 ரூபாய், மும்பை - 45760 ரூபாய், டெல்லி - 45880 ரூபாய், கொல்கத்தா - 45760 ரூபாய், பெங்களூர் - 45800 ரூபாய், ஹைதெராபாத் - 45760 ரூபாய், கேரளா - 45760 ரூபாய், புனே - 45760 ரூபாய், பரோடா - 45800 ரூபாய், அகமதாபாத் - 45800 ரூபாய், ஜெய்ப்பூர் - 45880 ரூபாய், லக்னோ - 45880 ரூபாய், கோயம்புத்தூர் - 46200 ரூபாய், மதுரை - 46200 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை: இந்திய ரீடைல் சந்தையில் இன்று நாட்டின் முக்கியமான நகரங்களில் வெள்ளி விலை நிலவரம் சென்னை - 83700 ரூபாய், மும்பை - 78250 ரூபாய், டெல்லி - 78250 ரூபாய், கொல்கத்தா - 78250 ரூபாய், பெங்களூர் - 83700 ரூபாய், ஹைதெராபாத் - 83700 ரூபாய், கேரளா - 83700 ரூபாய், புனே - 78250 ரூபாய், பரோடா - 78250 ரூபாய், அகமதாபாத் - 78250 ரூபாய், ஜெய்ப்பூர் - 78250 ரூபாய், லக்னோ - 78250 ரூபாய், கோயம்புத்தூர் - 83700 ரூபாய், மதுரை - 83700 ரூபாய்.


Click it and Unblock the Notifications